வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

96% விமானங்களில் கொரோனா உள்ளது.. பயணிகளுக்கு ஷாக் கொடுக்கும் கழிவுநீர் பரிசோதனை முடிவு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: கொரோனா பாதிப்பின் தீவிரம் தற்போது பெரும்பாலும் தணிந்துவிட்டது என்று சொல்லும் அளவுக்கு இயல்பு நிலை திரும்பி விட்டது. சீனாவில் பரவும் பிஎப் 7 கொரோனா மட்டும் அச்சுறுத்தி வருகிறது. இதனால்,சர்வதேச அளவில் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், பயணத்திற்கு தடை விதிக்கவில்லை. இந்த நிலையில், கிட்டதட்ட எல்லா சர்வதேச விமானங்களிலும் கொரோனா பாதிப்பு உள்ளது என்பதை மலேசியாவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் முடிவுகளில் தெரியவந்துள்ளது. விமானத்தின் கழிவு நீரில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

விமானங்களில் இனி மாஸ்க் எல்லாம் அணிந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று நீங்கள் நினைத்தால் அந்த முடிவை முற்றிலும் மறு பரிசீலனை செய்ய வேண்டியிருக்கும். ஏன் தெரியுமா... அனைத்து விமானங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது கிட்டத்தட்ட 96 சதவீத விமானங்களில் பயணிகள் சிலர் கொரோனா பாதிப்புடன் தான் பயணிக்கிறார்கள் என்பதை இந்த ஆய்வு சூசகமாக கூறுகிறது. இது தொடர்பான தகவலை மலேசியா தேசிய பொது சுகாதார ஆய்வகம் தெரிவித்துள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

தேசிய கீதத்தை அவமதிப்பதா? ஆளுநர் ரவிக்கு வலுக்கும் எதிர்ப்பு! திமுக கூட்டணி கட்சிகளுடன் இணைந்த பாமக தேசிய கீதத்தை அவமதிப்பதா? ஆளுநர் ரவிக்கு வலுக்கும் எதிர்ப்பு! திமுக கூட்டணி கட்சிகளுடன் இணைந்த பாமக

28 விமானங்களில் கொரோனா வைரஸ்

28 விமானங்களில் கொரோனா வைரஸ்

கோலாலம்பூருக்கு வருகை தந்த 29 விமானங்களில் இருந்து கழிவு நீரை எடுத்து பரிசோதனை நடைபெற்றுள்ளது. இந்த பரிசோதனையில் முடிவுகள் வெளி வந்த 28 விமானங்களில் இருந்த கழிவு நீரிலும் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு உள்ளது. இன்னும் ஒரு விமானத்தில் இருந்து கழிவு நீரில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளின் பரிசோதனைகள் முடிவு வரவில்லை. இந்த மாதிரிகள் சர்வதேச விமானங்களில் இருந்து கடந்த ஜூன் முதல் டிசம்பர் மாதம் வரையில் எடுக்கப்பட்டுள்ளது.

288 பேருக்கு கொரோனா

288 பேருக்கு கொரோனா

அதேபோல், நாட்டில் உள்ள நோய் பாதிப்பு இருந்த 15 இடங்களில் இருந்து வரும் விமானங்களில் இருந்து எடுக்கப்பட 301 மாதிரிகளையும் இதே கால கட்டத்தில் பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது. இதில் 288 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்படாத கழிவு நீரில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் இந்த பரிசோதனை நடைமுறைகள் நடந்துள்ளன.

சார்ஸ் கோவ் 2 வைரஸ்களின் ஆர்.என்.ஏக்கள்

சார்ஸ் கோவ் 2 வைரஸ்களின் ஆர்.என்.ஏக்கள்

இதில், கொரோனா பாதிப்பு இருந்த (அறிகுறிகள், அறிகுறிகள் இல்லாமல், கொரோனாவில் இருந்து மீண்டவர்கள்) நபர்களுடைய மலத்தில் சார்ஸ் கோவ் 2 வைரஸ்களின் ஆர்.என்.ஏக்கள் இருந்துள்ளன. கொரோனா வைரசின் இந்த வடிவம் பிறருக்கு பரவக்கூடியது அல்ல என்பதும் கவனிக்கத்தக்கது. விமானத்தில் உள்ள கழிவு நீரானது செப்டிக் டேங்கில் இருந்து அதற்கான பிரத்யேக டிரக்குகள் மூலமாக எடுத்துசெல்லப்படுகிறது. அதில் குறிப்பிட்ட விமானங்களை அடையாளம் கண்ட பிறகு அதன் கழிவு நீரில் இருந்து மாதிரிகள் எடுத்து ஆய்வாளர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு இருக்கின்றனர்.

ஒரு லிட்டர் கழிவு நீர் மட்டும்

ஒரு லிட்டர் கழிவு நீர் மட்டும்

பரிசோதிக்க வேண்டிய விமானத்தில் இருந்து ஒரு லிட்டர் கழிவு நீர் மட்டும் எடுத்து இந்த பரிசோதனை நடைபெற்றதாக மலேசிய பொது சுகாதார இயக்குனர் மருத்துவர் நூர் ஹிஷன் அப்துல்லா தெரிவித்துள்ளார். கொரோனா ஆபத்து அதிகம் உள்ள நாடுகளை கண்டறிவதற்காக இத்தகைய கொரோனா பரிசோதனைகளை மலேசிய சுகாதாரத்தூறை அமைச்சகம் தொடர்ந்து மேற்கொண்டு வந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் எந்த நாட்டில் அதிகம் உள்ளது என்பதை கண்டறிந்து எச்சரிக்கை விடுக்கக் கூடிய நோக்கத்தில் இந்த கண்காணிப்பு நடைமுறை மேற்கொள்ளப்பட்டதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிதாக எந்த வேரியண்ட்கள் உள்ளன

புதிதாக எந்த வேரியண்ட்கள் உள்ளன

கழிவு நீரில் கொரோனா வைரஸ்கள் இருப்பதை கவனம் செலுத்தி பார்ப்பதன் மூலம் சமூகத்தில் எந்த அளவு கொரோனா தெளிவாக காணக்கூடிய வகையில் அமையும். விமான நிலையங்களில் பரிசோதனை செய்வது சர்வதேச பயணிகளிடம் எந்த அளவுக்கு வைரஸ் பரவியுள்ளது என்பதையும் புதிதாக எந்த வேரியண்ட்கள் உள்ளன என்பதையும் அறியும் வகையில் இருக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

English summary
While the severity of the corona virus is said to have largely subsided, the results of the tests carried out in Malaysia have shown that almost all international flights are infected with the corona virus. This research has been carried out on aircraft waste water.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X