வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தனித்து விடப்பட்ட உக்ரைன்.. ராணுவத்தை அனுப்பாமல்.. டாலர்களில் உதவிக்கரம் நீட்டிய அமெரிக்கா!

By
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனுக்கு உடனடியாக 250 மில்லியன் டாலரை வழங்கியுள்ளது அமெரிக்கா.

Recommended Video

    Advice வேண்டாம், ஆயுதங்கள் கொடுங்க US-க்கு Volodymyr Zelensky பதிலடி | Oneindia Tamil

    உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து 3-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

    உக்ரைன் ராணுவமும் தொடர்ந்து பதில் தாக்குதல் செய்து வருகின்றன. ரஷ்யப் படைகள் உக்ரைனில் பல இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ் நகரை நெருங்கியுள்ள ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

    பொக்ரான் அணுகுண்டு சோதனையை எதிர்த்து.. பாகிஸ்தானுக்கு பீரங்கி கொடுத்து.. பொக்ரான் அணுகுண்டு சோதனையை எதிர்த்து.. பாகிஸ்தானுக்கு பீரங்கி கொடுத்து..

    உக்ரைன் அதிபர்

    உக்ரைன் அதிபர்

    உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தாலும், சீனா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில், நாட்டு மக்களிடம் காணொலி வாயிலாக உரையாற்றிய உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, உக்ரைன் தலைநகர் கீவ் மீது இருமுனை தாக்குதல் நடத்தப்படுவதாக கவலை தெரிவித்தார்.

    தனித்து விடப்பட்டோம்

    தனித்து விடப்பட்டோம்

    போரில் உக்ரைன் தனித்து விடப்பட்டிருப்பதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கூறியுள்ளார். தங்களுடன் இணைந்து போர் புரிவதற்கு யாரும் தயாராக இல்லை என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்தார். நேட்டோ அமைப்பில் சேருவதற்கு யார் உத்தரவாதம் அளிப்பார்கள் என்று கேள்வி எழுப்பியுளளார். இவ்விவகாரத்தில் அனைவரும் பயப்படுவதாகவும் உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். உலக நாடுகள் ரஷ்யா மீது, மேலும் பல பொருளாதார தடைகளை விதிக்கவும் உக்ரைன் அதிபர் அழைப்பு விடுத்தார்.

    அமெரிக்கா

    அமெரிக்கா

    உக்ரைன் மீதான தாக்குதலை கண்டித்து அமெரிக்க, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ஜி7 கூட்டமைப்பும் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதிக்க திட்டமிட்டு வருகிறது. ஐநா சபையும் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானத்துகு வாக்கெடுப்பு நடத்தியது. இந்நிலையில், மேற்கத்திய நாடுகள் மீது, பொருளாதார தடைகளை விதித்து ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

     உதவி

    உதவி

    உக்ரைன் அதிபர் தங்களுக்கு போரில் யாரும் உதவவில்லை என்று தெரிவித்த நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்கா நிதியுதவி அளிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
    ஒட்டுமொத்த தேவைக்காக உடனடியாக 250 மில்லியன் டாலர் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு ,கல்விக்கு உதவ 350 மில்லியன் டாலர் வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

    English summary
    The United States has pledged $ 250 million to Ukraine in the wake of Russia's war on Ukraine.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X