வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உட்கார்ந்த நிலையில்.. சேர்கள், டேபிளில் பிணங்கள்.. ரூம் முழுக்க சிதறிய.. அமெரிக்காவின் ஷாக் வீடியோ

டெட்ராய்ட் மருத்துவமனையில் பிணங்கள் குவிக்கப்பட்டுள்ள வீடியோ வைரலாகிறது

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: எங்கே பாரத்தாலும் பிணம்.. எதிலே பார்த்தாலும் பிணம்.. சேர்கள், டேபிள்களில்கூட பிணங்கள் பிளாஸ்டிக் கவர்களில் சுருண்டு கிடக்கின்றன.. ஊழியர்களின் ஓய்வறைகளிலும் நிற்க இடமின்றி பிணங்கள் நெருக்கி கொண்டு விழுந்து கிடக்கின்றன!! அமெரிக்காவின் டெட்ராயிடு நகர் ஆஸ்பத்திரியில்தான் இந்த அவலம் உள்ளது.. இது சம்பந்தமான ஒரு வீடியோவும் வெளியாகி உலக நாடுகளை உச்சக்கட்ட பீதியில் ஆழ்த்தி வருகின்றன!!

Recommended Video

    பிணங்களை புதைக்க பார்க்குகளை கல்லறைகளாக மாற்ற அமெரிக்கா முடிவு?

    கொடூர கொரோனாவின் தாக்கம் அதிகமாகி கொண்டே போகிறது.. ஒருநாளைக்கு 100, 200 என்று இறந்து கொண்டிருந்தவர்கள் இன்று 2 ஆயிரம் பேர் இறக்கும் அளவுக்கு நிலைமை சீரியஸாகிவிட்டது.. அமெரிக்காவில் இது சர்வசாதாரணமாக நடந்து வருகிறது.

    இது வரை இல்லாத அளவாக நேற்று தான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 2,407 பேர் இறந்துள்ளதால் கடந்த இரண்டு நாளில் மட்டும் 4889 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

    சுடுகாடுகள்

    சுடுகாடுகள்

    அதிகபட்சமாக அமெரிக்காவில் 6 லட்சத்து 44 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு 28,529 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்லும் இந்த பாதிப்பையும் சரி, பலி எண்ணிக்கையையும் சரி கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா விழி பிதுங்கி வருகிறது... கதறி துடிக்கிறது!! கடந்த மாதம் வரை சுடுகாடுகளில் பிணங்களை எரிக்க முடியாத நிலைதான் ஏற்பட்டது.. சவப்பெட்டிகள் கிடைக்காமலும், கிடைத்த சடலங்களை எரிக்க முடியாமலும் திணறி வந்தனர்.

    நிரம்பி வழிகின்றன

    நிரம்பி வழிகின்றன

    v

    பிளாஸ்டிக் கவர்

    பிளாஸ்டிக் கவர்

    ஆனால் இவர்களின் சடலங்களை இடப்பற்றாக்குறையால் நிரம்பி வழிகிறது.. எங்கேயும் பிணங்களை வைக்க இடமில்லாமல் ஊழியர்களின் ஓய்வறைகளிலும் குவிக்கப்பட்டுள்ளது. வெள்ளை கலரில் ஒரு பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்டுள்ளது ஒவ்வொரு சடலமும்.. மளிகை கடையில் பொருட்களை அடுக்கி வைத்திருப்பார்களே, அந்த மாதிரி ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.

    குவியல்கள்தான்

    குவியல்கள்தான்

    இதைவிட கொடுமை, அந்த ரூமில் இருக்கும் சேர்கள், படுக்கைகள், பெஞ்ச்களிலும் வெறும் சடலங்களாகவே உள்ளன.. வெள்ளை கலரில் பிணங்களின் குவியல்களைதான் வீடியோவாக வெளிவந்துள்ளன.. இதுதான் தற்போதைய அங்கு சூழல் என்பதையும் ஊழியர்கள் வெளிப்படுத்தி உள்ளனர். தனித்தனி ரூம்களில் சடலங்களை குவித்திருந்தாலும், அதனை பாதுகாக்க போதிய வசதிகள் இல்லை என்றும் கூறப்படுகிறது.. இந்த பிணங்களையே பாதுகாக்க முடியாத நிலையில், அன்றைய தினங்களில் விழுந்து கொண்டிருக்கும் பிணங்களை எங்கே கொண்டு போய் போடுவது என்று தெரியாமல் விழிக்கின்றனர்.

    கண்ணியம்

    கண்ணியம்

    இந்த சினாய் கிரேஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறக்கும் எல்லா நோயாளிகளுமே மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்தப்பட்டுள்ளனர் என்பது கூடுதல் தகவல்!! பொதுவாக, ஆஸ்பத்திரிகளில் பிணவறை இருக்கும்.. ஆனால் ஆஸ்பத்திரியே பிணவறைகளாகி கொண்டிருக்கின்றன.. இதுதான் அமெரிக்காவின் தற்போதைய துர்நிலை!!

    English summary
    coronavirus: US's detroit city hospital bodies, and shocking video
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X