உலகம் முழுவதும் தீவிரமடையும் டெல்டா வைரஸ்... அலறும் உலக நாடுகள் - அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. டெல்டா வைரஸ் பரவல் தீவிமடைந்துள்ளதால் பல நாடுகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 6,90,495 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,16,32,144 பேராக உயர்ந்துள்ளது. டெல்டா வைரஸ் பரவல் சீனா,அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் அவற்றின் தலைவர்களை புதிய கட்டுப்பாடுகளை விதிக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா கடந்த 2 ஆண்டுகளாக உலக மக்களை தன் பிடிக்குள் வைத்துள்ளது. கொரோனாவின் கோரப்பிடியில் 20 கோடி பேர் சிக்கியுள்ளனர். 42 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். பல நாடுகள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.

Covid 19 Update: Corona 20,16,32,144 people affected in worldwide

உலகம் முழுவதும் பல நாடுகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. பல கோடி மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. ஒரே நாளில் 6,90,495 பேருக்கு புதிதாக தொற்று பாதித்துள்ளது . இதுவரை மொத்தம் 20,16,32,144 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 4,62,476 பேர் மீண்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து 18,14,14,101 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் ஒரே நாளில்10,251 பேர் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் 42,79,300 பேர் மரணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் 1,59,38,743 கோடி பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 94,612 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Covid 19 Update: Corona 20,16,32,144 people affected in worldwide

அமெரிக்காவில் பாதிப்பு அதிகரிப்பு

அமெரிக்காவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் 116,977 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,62,97,776 பேராக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 24,677 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,98,11,993 பேராக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதற்கு டெல்டா வகை மாறுபாடுதான் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.வரும் நாட்களில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பு ஆகலாம் என்று மூத்த மருத்துவ நிபுணர் அந்தோணி பாசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் தற்போது இருக்கும் கொரோனா பாதிப்பு தொடர்ந்தபடியே இருந்தால் பேரழிவுக்கு தள்ளப்படும். மேலும் குளிர் காலத்தில் டெல்டா வகை மாறுபாட்டைவிட வீரியம் மிக்க புதிய மாறுபாடு ஏற்படலாம். இதனால் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் வாய்ப்பு உள்ளது என்றும் மருத்துவ நிபுணர் அந்தோணி பாசி கூறியுள்ளார்.

சீனாவிற்கு தலைவலியாக மாறிய டெல்டா

உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தற்போது அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்க, சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது. இந்த நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா தலைக்காட்டத் துவங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் 96 பேருக்கு பேருக்கு தொற்று உறுதியாகியிருந்தது.

மேலும் அறிகுறி இல்லாத தொற்று பாதிப்புகளை உறுதி செய்யப்பட்ட பாதிப்பாக சீன சுகாதாரத்துறை அறிவிப்பதில்லை. அந்த வகையில் 54 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த புதிய பாதிப்புகளின் மூலம் சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 93,374 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கொரோனாவால் அங்கு இதுவரை 4,636 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

டெல்டா வைரஸ் தற்போது உலகின் பல நாடுகளில் மிகவேகமாக பரவுகிறது. உலகின் 135 நாடுகளுக்கு பரவி உள்ளது. சீனாவுக்கு இப்போது இந்த டெல்டா வைரஸ் சவாலாகவும், தலைவலியாகவும் மாறி உள்ளது.
சீனா, இந்த டெல்டா வைரஸ் பரவலில் இருந்து காத்துக்கொள்வதற்கு அங்குள்ள அதிபர் ஜின்பிங் நிர்வாகம் போராடி வருகிறது. அங்கு ஊரடங்கு போடும் நடவடிக்கைகளை ஆளும் கம்யூனிஸ்டு கட்சி புதுப்பிக்கிறது. 15 லட்சம் மக்களைக் கொண்டுள்ள நகரத்துக்கு செல்வது துண்டிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில பகுதிகளில் மக்கள் கூடுவதற்கும் அந்த இடங்களில் பரிசோதனை செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுபற்றி உகான் நகரில் கொரோனா உருவானபோது பிரபலமான ஷாங்காய் நகர டாக்டர் ஜாங் வென்ஹாங் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் சமீபத்திய வைரஸ் பரவல்கள், வைரஸ் இன்னும் போய் விடவில்லை என்று காட்டுவதால் சீனாவின் உத்திகள் மாறலாம். இந்த வைரசுடன் இருப்பதற்கு உலகம் கற்றுக்கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

டெல்டா வைரஸ் பரவல் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் அவற்றின் தலைவர்களை புதிய கட்டுப்பாடுகளை விதிக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+