வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனாவால் மூச்சுத்திணறும் இந்தியா... ஓடி வந்து உதவும் சுந்தர் பிச்சை, சத்ய நாதெல்லா

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு கூகுள் நிறுவனம் ரூ.135 கோடி நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இந்தியாவில் மோசமடைந்து வரும் கோவிட் 19 நெருக்கடி கருத்தில் கொண்டு கூகுள் நிறுவனம் இந்தியாவுக்கு ரூ .135 கோடி நிதியை வழங்குவதாக அந்நிறுவனத்தின் சிஇஒ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். மருத்துவ உதவிகளுக்காக கூகுள் நிறுவனம், ஊழியர்கள் இந்தியாவுக்கு 135 கோடி நிதியை அளிப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Recommended Video

    தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. America முதல் china வரை.. India-க்கு உதவும் உலக நாடுகள்

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,52,991 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,73,13,163 பேராக அதிகரித்துள்ளது.

    Covid crisis in India: Satya Nadella, Sundar Pichai Support Indias Covid Fight

    கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,43,04,382 ஆகவும், சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 28,13,658 ஆகவும் உள்ளது.

    கடந்த 24 மணிநேரத்தில் 2,812 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,95,123 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 14,19,11,223 பேர் தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர்.

    கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு சர்வதேச நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளன. அமெரிக்கா, பிரான்ஸ், கனடா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு துணை நின்று தேவையான உதவியை அளிக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளன. மக்களுக்காகவும் சுகாதார பணியாளர்களுக்காகவும் பிரார்த்தனை செய்வதாக வெளிநாட்டு அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.

    Covid crisis in India: Satya Nadella, Sundar Pichai Support Indias Covid Fight

    கொரோனாவால் மிகக் கடுமையான நெருக்கடியை சந்தித்துள்ள இந்தியாவுக்கு கூகுள் நிறுவனம் ரூ.135 கோடி நிதி உதவியை அளிக்க இருப்பதாக சிஇஒ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவில் மோசமடைந்து வரும் கோவிட் 19 நெருக்கடி கருத்தில் கொண்டு கூகுள் நிறுவனம் இந்தியாவுக்கு ரூ .135 கோடி நிதியை வழங்குவதாகப் பதிவிட்டுள்ளார். மருத்துவ உதவிகளுக்காக கூகுள் நிறுவனம், ஊழியர்கள் இந்தியாவுக்கு 135 கோடி நிதியை அளிப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சி இ ஓ சத்ய நாதெல்லா, இந்தியாவின் கொரோனா சூழல் குறித்து கவலை தெரிவித்துள்ளார். இந்தியாவில் தற்போது நிலவும் சூழல் கடும் வேதனை அளிக்கிறது. ஆக்சிஜன் கருவிகள் போன்ற மருத்துவ பொருட்கள் அளிப்பதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று கூறியுள்ளார்.

    English summary
    Sundar Pichai tweet Devastated to see the worsening Covid crisis in India. Google & Googlers are providing Rs 135 Crore in funding to GiveIndia, UNICEF for medical supplies, orgs supporting high-risk communities, and grants to help spread critical information. In a tweet, Satya Nadella said that his company will continue to use its resources and technology for relief efforts and support buying oxygen devices.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X