அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ரெசிப்ரோக்கல் வரி.. எந்த நாட்டிற்கு அதிகம்? எந்த நாட்டிற்கு குறைவு?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலக நாடுகள் மீதான ரெசிப்ரோக்கல் வரி குறித்த அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டார். இந்த லிஸ்டில் அதிகபட்சமாக கம்போடியா மீது 49%, வியட்நாம் மீது 46%, இலங்கை மீது 44% வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா உட்பட மற்ற முக்கிய நாடுகள் மீது அமெரிக்கா எவ்வளவு சதவிகித வரியை அறிவித்துள்ளது என்பதை நாம் பார்க்கலாம்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த சில வாரங்களாகவே ரெசிப்ரோக்கல் வரி குறித்து தொடர்ந்து எச்சரித்து வந்தார். அதன்படி வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், இந்த ரெசிப்ரோக்கல் வரி குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.. இது சர்வதேச அளவில் வர்த்தக போரை உருவாக்கும். உலகப் பொருளாதாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

Donald Trump America India

யாருக்கு அதிகம்

அதேநேரம் உலக நாடுகள் மீது முழுமையான ரெசிப்ரோக்கல் வரியை அமெரிக்கா அறிவிக்கவில்லை என குறிப்பிட்டார். உலக நாடுகள் அமெரிக்கா மீது எவ்வளவு சதவிகிதம் வரி வசூலிக்கிறதோ.. அதில் 50%ஐ மட்டுமே இப்போது ரெசிப்ரோக்கல் வரியாக அறிவித்துள்ளதாக குறிப்பிட்டார். இந்த லிஸ்டில் அதிகபட்சமாக கம்போடியா மீது 49%, வியட்நாம் மீது 46%, இலங்கை மீது 44% வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சீனா மீது 34%, ஐரோப்பிய ஒன்றியம் மீது 20%, ஜப்பான் மீது 24% வரிகள் அறிவிக்கப்பட்டுள்ளது

வரி எதற்கு

அமெரிக்கா ஃபர்ஸ்ட் என்ற கொள்கையின் அடிப்படையிலேயே வரியை அறிவித்துள்ளதாக குறிப்பிட்ட டிரம்ப், அனைத்து நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத அடிப்படை வரியை அறிவித்தார். வரியை தவிர்க்க விரும்பும் நிறுவனங்கங்கள் அமெரிக்காவிலேயே தங்கள் பொருட்களை உற்பத்தி செய்ய தொடங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த வரி விதிப்பு நடவடிக்கையை விடுதலை நாள் என்று குறிப்பிட்ட டிரம்ப், இந்த வரிகள் அமெரிக்காவை வலுவான பொருளாதாரமாக மாற்றும் என்றார்.

உலக நாடுகள் லிஸ்ட்

முக்கிய நாடுகள் மீது அமெரிக்கா எவ்வளவு சதவிகித வரியை அறிவித்துள்ளது என்பதை பார்க்கலாம்:

1. சீனா: 34 சதவீதம்
2. ஐரோப்பிய ஒன்றியம்: 20 சதவீதம்
3. தென் கொரியா: 25 சதவீதம்
4. இந்தியா: 26 சதவீதம்
5. வியட்நாம்: 46 சதவீதம்
6. தைவான்: 32 சதவீதம்
7. ஜப்பான்: 24 சதவீதம்
8. தாய்லாந்து: 36 சதவீதம்
9. சுவிட்சர்லாந்து: 31 சதவீதம்
10. இந்தோனேசியா: 32 சதவீதம்
11. மலேசியா: 24 சதவீதம்
12. கம்போடியா: 49 சதவீதம்
13. பிரிட்டன்: 10 சதவீதம்
14. தென்னாப்பிரிக்கா: 30 சதவீதம்
15. பிரேசில்: 10 சதவீதம்
16. வங்கதேசம்: 37 சதவீதம்
17. சிங்கப்பூர்: 10 சதவீதம்
18. இஸ்ரேல்: 17 சதவீதம்
19. பிலிப்பைன்ஸ்: 17 சதவீதம்
20. சிலி: 10 சதவீதம்
21. ஆஸ்திரேலியா: 10 சதவீதம்
22. பாகிஸ்தான்: 29 சதவீதம் சதவீதம்
23. துருக்கி: 10 சதவீதம்
24. இலங்கை: 44 சதவீதம்
25. கொலம்பியா: 10 சதவீதம்

எப்போது முதல் அமல்

உலகின் ஒவ்வொரு நாட்டின் மீதும் எவ்வளவு வரி என்பது குறித்த விரிவான அறிவிப்பை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. குறைந்தபட்சம் 10% முதல் அதிகபட்சமாக 49% வரி ரெசிப்ரோக்கல் வரி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து ரெசிப்ரோக்கல் வரியும் வரும் ஏப்ரல் 9ம் தேதி 12.01 மணி முதல் அமலுக்கு வருவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+