சீனாவை எதிர்க்கும் டிரம்ப்.. ஆனா அவரது செயலாளர் போட்டுள்ள டிரஸ் கூட சீனாவில் தயாரிக்கப்பட்டது தானாம்
வாஷிங்டன்: அமெரிக்கா சீனா வர்த்தகப் போரில் மாறி மாறி வரிகளை விதித்து வருகிறது. இதற்கிடையே வெள்ளை மாளிகை பத்திரிக்கை செயலாளராக உள்ள கரோலின் லீவிட் என்பவர் அணிந்திருந்த ஆடை கூட சீனாவில் தயாரிக்கப்பட்டது என சீன தூதர் தெரிவித்துள்ளார். இது இணையத்தில் மிகப் பெரிய புயலைக் கிளப்பியுள்ளது. லீவிட்டிற்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் பலவிதக் கருத்துகளைக் கூறி வருகிறார்கள்.
அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தகப் போர் இப்போது சமூக வலைத்தளங்களுக்கும் வந்துவிட்டது. இதில் இணையத்தில் இப்போது சிக்கியுள்ளவர் தான் வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட். இவர் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கும்போது சிவப்பு நிறத்தில் ஓர் ஆடையை அணிந்திருந்தார். அதுதான் இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.

அதிபர் மாளிகை செயலாளர்
அதாவது டிரம்ப் நிர்வாகத்தில் உள்ள கரோலின் லீவிட் அணிந்திருந்த ஆடை சீனாவில் தயாரிக்கப்பட்டதாம். இந்தக் குற்றச்சாட்டை சீன தூதர் ஒருவர் முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அந்த நபர் பதிவிட்ட ட்வீட் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. சும்மா பேச்சுக்கு சீன தயாரிப்புகளை எதிர்த்தால் போதாது. முதலில் டிரம்ப் நிர்வாகத்தினர் அதைப் பின்பற்ற வேண்டும் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சீன உடை
இந்தோனேசியாவில் உள்ள சீன தூதர் ஜாங் ஜிஷெங் இது தொடர்பான ட்வீட்டை பகிர்ந்துள்ளார். டிரம்ப் நிர்வாகத்தில் உள்ள லீவிட்டின் போட்டோவை ஜிஷெங் பகிர்ந்துள்ளார். அதில் லீவிட் சிவப்பு மற்றும் கருப்பு நிற உடையை அணிந்திருக்கிறார். மேலும், அத்துடன் அவர் சீன தளமான வெய்போவின் ஸ்கிரீன்ஷாட்களையும் இணைந்துள்ளார். அதில் லீவிட்டின் ஆடையில் உள்ள சரிகை சீனாவின் மாபுவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டதாக நெட்டிசன் குறிப்பிட்டிருந்தார்.
இதைப் பகிர்ந்த அவர், "சீனாவை சும்மா குறைகூறுவது தான் இவர்கள் வேலை.. ஆனால், சீன பொருட்களைத் தொடர்ந்து வாங்குவார்கள். நீங்கள் அணிந்துள்ள உடையை அழகாக மாற்றும் சரிகை சீன நிறுவனம் தயாரித்தது. அதைத் தயாரித்த சீன ஊழியரே அதைச் சொல்கிறார் பாருங்கள்" எனப் பதிவிட்டுள்ளார். ஜிஷெங்கின் இந்த ட்வீட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
நெட்டிசன்கள்
நெட்டிசன்கள் இது தொடர்பாகப் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். வேலைக்காக அவர் சீனாவை பொதுவெளியில் திட்டி வருகிறார். ஆனால், அவரது வாழ்க்கைக்குச் சீன தயாரிப்புகள் தான் தேவைப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார். ஐரோப்பாவைச் சேர்ந்த பல முன்னணி நிறுவனங்கள் கூட சீனாவில் தான் தங்கள் ஆலையை வைத்துள்ளன. எனவே, சீன தயாரிப்பைத் தவிர்க்கவே முடியாது என மற்றொரு நெட்டிசன் பதிவிட்டுள்ளார்.
அதேநேரம் லீவிட்டிற்கு ஆதரவாகவும் பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். இது ஒரிஜினல் தான் என்றும் வேண்டும் என்றே குற்றஞ்சாட்ட வேண்டும் என்பதற்காக இதுபோல சொல்லி வருவதாகவும் நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். இன்னும் சிலர், வேறு நிறுவனத்தின் ஒரிஜினல் தயாரிப்பை சீனா காப்பி அடித்து இருக்கலாம் என்றும் அதை ஒரிஜினல் என சொல்வதில் லாஜிக்கே இல்லை என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.

வர்த்தகப் போர்
மற்றொருபுறம் அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தகப் போர் தொடர்ந்தே வருகிறது. ஏற்கனவே சீன தயாரிப்புகளுக்கு அமெரிக்கா 145% வரிகளை விதித்துவிட்டது. சீனாவும் அதற்குப் பதிலடியாக அமெரிக்க தயாரிப்புகளுக்கு 125% வரி விதித்துள்ள நிலையில், அமெரிக்க தயாரிப்புகளுக்குக் கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications