ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முடியாது.. திடீரென பல்டி அடிக்கும் எலான் மஸ்க்.. என்ன காரணம் தெரியுமா
வாஷிங்டன்: ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் எலான் மஸ்கின் டீல் விரைவில் முடியும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர் இது தொடர்பாக சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
உலகின் மிக முக்கிய சமூக வலைத்தளங்களில் ஒன்று ட்விட்டர். எதுவாக இருந்தாலும் சுருக்கமாக 140 எழுத்துகளில் சொல்ல வேண்டும் என்பதால் ட்விட்டர் உடனடியாக ஹிட் அடித்தது.
பிரபலங்கள் அனைவரும் தங்கள் படம் தொடங்கி பர்சனல் மேட்டர்கள் வரை அனைத்து அப்டேட்களை வழங்கும் ஒரு இடமாகவே ட்விட்டர் தளம் இருந்து வந்தது.

ட்விட்டர்
இப்படிப் பல சிறப்புகளைக் கொண்டிருந்தாலும் கூட, ட்விட்டர் நிதி விவகாரம் அந்நிறுவனத்தின் போர்ட் உறுப்பினர்களுக்குத் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. மற்ற சமூக வலைத்தளங்கள் உடன் ஒப்பிடுகையில் ட்விட்டர் தளத்தின் வளர்ச்சி சற்று மெதுவாகவே இருந்தது. ட்விட்டர் முதலீட்டாளர்களுக்கு முழு திருப்தி இல்லாமலேயே இருந்தது. இந்தச் சூழலில் தான், ட்விட்டர் தளத்தைத் தான் வாங்கத் தயாராக இருப்பதாக எலான் மஸ்க் அறிவித்தார்.
Recommended Video

எலான் மஸ்க்
அதன்படி ஒட்டுமொத்த ட்விட்டர் நிறுவனத்தை 44 மில்லியன் டாலருக்கு வாங்க இருப்பதாக எலான் மஸ்க் அறிவித்தார். அதாவது ஒரு ஷேரை சுமார் 54 டாலருக்கு எலான் மஸ்க் வாங்க இருந்தார். இந்த ஒப்பந்தம் விரைவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தச் சூழலில் , சில நாட்களுக்கு முன்பு, யாரும் எதிர்பார்க்காத வகையில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அதே ட்விட்டர் தளத்தில் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

போலிக் கணக்குகள்
இதற்கு முக்கிய காரணமாக அவர் சொன்னது போலிக் கணக்குகளின் எண்ணிக்கை. ட்விட்டர் தளத்தில் இருக்கும் கணக்குகளில் 5% மட்டுமே போலிக் கணக்குகள் என்பது ட்விட்டர் தளத்தின் வாதம். ஆனால், ஒட்டுமொத்த கணக்குகளில் குறைந்தது 20% போலிக் கணக்குகள் என்பது எலான் மஸ்க்கின் குற்றச்சாட்டு. இருப்பினும், தொடக்கத்தில் கூறியதை விட விடக் குறைந்த விலையில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கவே எலான் மஸ்க் இதுபோன்ற கருத்துகளைக் கூறி வருவதாகவும் கூறப்படுகிறது.

விலை அதிகம்
இதனிடையே சமீபத்தில் அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய எலான் மஸ்க், "ட்விட்டர் தளத்தைக் குறைந்த விலைக்கு வாங்குவது குறித்தும் ஆலோசித்து வருகிறேன். அவர்கள் கூறியதை விட மோசமாக இருக்கும் ஒன்றுக்கு எப்படி அதே விலையைக் கொடுக்க முடியும்" என்று கூறி இருந்தார். ட்விட்டர் நிறுவனத்தை முன்பு கூறியதை விடக் குறைந்த விலைக்கு எலான் மஸ்க் வாங்க விரும்புவதையே இது தெளிவாகக் காட்டுகிறது.

வாங்க முடியாது
இது தொடர்பாக அவர் மேலும் தனது ட்விட்டரில், "ட்விட்டரின் தகவல்கள் துல்லியமாக இருக்கும் என்பதை அடிப்படையாக வைத்தே நான் எனது ஆஃபரை வழங்கினேன். ஆனால், நேற்றைய தினம் போலிக் கணக்குகள் 5%க்கு குறைவாக தான் உள்ளது என்பதற்கான ஆதாரத்தை வெளியிட ட்விட்டர் சிஇஓ மறுத்துவிட்டார். அவர் அதை வெளிப்படையாக அறிவிக்கும் வரை ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் டீல் முன்னோக்கி நகராது" என்று தெரிவித்துள்ளார்.

போலி கணக்குகள்
ட்விட்டர் தளத்தில் பயனர்கள் தங்கள் உண்மையான அடையாளங்களைப் பயன்படுத்திப் பதிவு செய்யத் தேவையில்லை கட்டாயமில்லை என்பதால் போலிக் கணக்குகள் என்பது பெரும் பிரச்சினையாகவே உள்ளது. முன்பு ஒருமுறை கூட, போலி தளங்கள் மட்டுமே ட்விட்டர் தளத்தில் இருக்கும் ஒரே பிரச்சினை என்று எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். எனவே, மஸ்க் கைகளில் ட்விட்டர் வந்த உடன், போலிக் கணக்குகளை நீக்கி, போட்களை நீக்குவதே அவர் மேற்கொள்ளும் முதல் வேலையாக இருக்கும்.

சந்தேகம்
போலி மற்றும் ஸ்பேம் கணக்குகளை அகற்ற கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தினசரி சுமார் 5 லட்சம் ட்விட்டர் கணக்குகள் சந்தேகத்தின் அடிப்படையில் லாக் செய்யப்படுவதாகவும் ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வால் தெரிவித்திருந்தார். அதேபோல ட்விட்டர் தளத்தின் விதிகளும் தொடர்ச்சியாக அப்டேட் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications