வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க்..அலுவலகத்திலேயே படுத்து உறங்கிய பெண் ஊழியர்.. வேலை என்னாச்சு தெரியுமா?

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளை எலான் மஸ்க் எடுத்து வரும் நிலையில், அவரது அலுவலகத்திலேயே பெண் ஊழியர் ஒருவர் படுத்து தூங்கிய புகைப்படங்கள் இணையத்தில் பரவியது. எலான் மஸ்க் 50 சதவீத பணியாளர்களை நீக்கிய நிலையில் அந்த பெண் ஊழியரின் பணி என்னவானது என்பது குறித்து பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது

உலகின் முன்னணி சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை கடந்த அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி எலான் மஸ்க் முறைப்படி தன்வசப்படுத்தினார்.

கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதியே ட்விட்டரை வாங்குவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டாலும் பல்வேறு களேபரங்களுக்கு மத்தியில் கடந்த மாதம் இறுதியில் தான் ஒருவழியாக ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை நிறைவு செய்தார்.

KGF-2 பாடல் விவகாரம்:காங்.,ராகுல் யாத்திரை ட்விட்டர் கணக்குகளை முடக்க பெங்களூர் கோர்ட் அதிரடி ஆர்டர்KGF-2 பாடல் விவகாரம்:காங்.,ராகுல் யாத்திரை ட்விட்டர் கணக்குகளை முடக்க பெங்களூர் கோர்ட் அதிரடி ஆர்டர்

சர்வதேச அளவில் பரபரப்பு

சர்வதேச அளவில் பரபரப்பு

44 பில்லியன் டாலர் மதிப்பில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க், முதல் நாளில் இருந்தே அதிரடிகளை காட்டி வருகிறார். ட்விட்டர் புளு டிக் வசதி பெறுவதற்கு கட்டணம் தொடங்கி பாதிக்கும் மேற்பட்ட பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியது வரை எலான் மஸ்க்கின் நடவடிக்கைகள் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஊழியர்கள் அச்சம்

ஊழியர்கள் அச்சம்

ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியாக மெயில் போட்டு உங்களின் வேலை இருக்கிறதா? இல்லையா? என்று உறுதி செய்து விட்டு பணிக்கு வருமாறு ட்விட்டர் தெரிவித்து இருந்தது. இதனால், ஊழியர்கள் பலரும் அச்சத்தில் உறைந்தனர். ட்விட்டர் சொன்னது போலவே 50 சதவீத பணியாளர்களை நீக்கி விட்டது. நாளொன்றுக்கு 4 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படுவதால் தனக்கு வேறு வழி தெரியவில்லை என்று எலான் மஸ்க் தெரிவித்தார்.

படுத்து உறங்கிய பெண் ஊழியர்

படுத்து உறங்கிய பெண் ஊழியர்

எலான் மஸ்க்கின் நடவடிக்கைகளை சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து இருந்தாலும் அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாத எலான் மஸ்க் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ட்விட்டரை எலான் மஸ்க் கைப்பற்றியதும் இணையத்தில் ஒரு இமேஜ் கூட வேகமாக பரவி இருந்தது. ட்விட்டர் அலுவலக்திலேயே எஸ்தர் கிராவ்போர்டு என்ற பெண் ஊழியர் படுத்து உறங்கினார்.

இணையத்தில் பரவிய புகைப்படங்கள்

இணையத்தில் பரவிய புகைப்படங்கள்

எஸ்தர் கிராவ்போர்டு பெட்ஷீட்டுடன் அலுவலகத்திலேயே படுத்து உறங்கிய புகைப்படங்கள் இணையத்தில் பல்வேறு விவாத்திற்கும் வித்திட்டது. சிலர் ட்விட்டர் நிறுவனத்தை குறை கூறியும் சிலர் எஸ்தர் கிராவ்போர்டுக்கு அனுதாபம் தெரிவித்தும் கருத்து கூறினர். இன்னும் சிலரோ எஸ்தர் கிராவ்போர்டின் செயல்பாடுகள் பணியின் தார்மீக நெறிமுறைகளுக்கு உகந்ததுதானா? எனவும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

பணி நீக்கம் செய்யப்பட்டாரா?

பணி நீக்கம் செய்யப்பட்டாரா?

இப்படி இணையம் முழுக்க பேசுபொருளாகியிருந்த எஸ்தர் கிராவ்போர்டு, சமீபத்தில் ட்விட்டர் நிறுவனம் மேற்கொண்ட பெரிய லே ஆஃப் (பணி நீக்கம்) இல் இருந்து தப்பினாரா? என்ற கேள்வி மனதில் எழாமல் இருந்து இருக்காது. ஆனால், நல்ல வேலையாக எஸ்தர் கிராவ்போர்டு எலான் மஸ்கின் பணி நீக்க நடவடிக்கையில் இருந்து தப்பி விட்டாராம்.

2 ஆண்டுகளாக பணி

2 ஆண்டுகளாக பணி

எஸ்தர் கிராவ்போர்டு ட்விட்டர் நிறுவனத்தில் பிராடக்ட் மேனேஜ்மெண்ட் டைரக்டர் பணியில் கடந்த 2 ஆண்டுகளாக இருப்பதாக தனது லிங்க்ட் இன் பயோவில் குறிப்பிட்டுள்ளார். எலான் மஸ்க் பல பிராஜெக்ட்டுகளில் மிகக் கடினமான காலக்கெடு நிர்ணயித்து இருப்பதால் ட்விட்டர் ஊழியர்கள் பெரும்பாலும் கூடுதல் நேரம் பணியாற்றுகிறார்களாம். எலான் மஸ்க் நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் பணிகளை முடிப்பதற்காக கூடுதல் நேரம் இருந்து பணியாற்ற வேண்டும் என்று மேனேஜர்களும் ஊழியர்களை வலியுறுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.

English summary
While Elon Musk has been taking various steps since buying Twitter, photos of a female employee lying down and sleeping in his office have gone trend. Many netizens have questioned whether his job has been saved due to this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X