"அந்த 85 நிமிடங்கள்.!" உலகையே அழிக்கும் கொடூர ஆயுதம்..! சரித்திரம் படைத்த கமலா ஹாரீஸ்!
வாஷிங்டன்: ரஷ்யாவின் தாக்குதலால் அணு ஆயுதங்கள் குறித்த பேச்சு எழுந்துள்ள நிலையில், அமெரிக்காவின் அணு ஆயுதங்கள் குறித்து சற்று பார்க்கலாம்.
உக்ரைன் போர் திடீரென மீண்டும் தீவிரமடையத் தொடங்கி உள்ளது. உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது.
இதற்கிடையே அணு ஆயுசுகளைக் கூட ரஷ்ய அதிபர் புதின் பயன்படுத்தக் கூடும் என்ற தகவல்களும் வெளியாகி வருகிறது. அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால் அது மிக மோசமான போராக மாறிவிடும்.

அமெரிக்கா
அமெரிக்காவுக்கு அருகே கியூபாவில் ரஷ்யா ராணுவ தளம் உள்ளது. அங்கு அணு ஆயுதங்களும் தயாராக உள்ள நிலையில், புதின் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் அமெரிக்க மண்ணில் தாக்குதலை நடத்த முடியும் என்ற சூழல் உருவாகி உள்ளது. அதேநேரம் ரஷ்யாவைப் போலவே மற்றொரு வல்லரசு நாடான அமெரிக்காவிடமும் அணு ஆயுதங்கள் உள்ளன. அதை அவர்கள் நியூக்ளியர் புட்பால் என்று அழைக்கிறார்கள்.

நியூக்ளியர் புட்பால்
இது எப்படி இருக்கும் என்பது பொதுமக்கள் யாருக்கும் தெரியாது. அதேநேரம் கருப்பு சூட்கேஸ் ஒன்றில் இதை அதிபரின் பாதுகாப்புப் படையினர் எப்போதும் வைத்து இருப்பார்கள். அவர்கள் கையில் இருந்து இது எப்போது செல்லாது. இந்த சூட்கேஸ் உள்ளே தான், அணு ஆயுதங்களின் ரகசிய குறியீடுகள் மற்றும் தாக்குதல் திட்டங்கள் இருக்கும். இதன் மூலம் அணு ஆயுத தாக்குதலை அதிபரால் நடத்த முடியும். எந்த வகையான அணு ஆயுதம், எங்குத் தாக்குதல் நடத்த வேண்டும் என அனைத்தையும் அதிபரால் நொடிகளில் முடிவெடுக்க முடியும்.

உச்சபட்ச அழிவி
அமெரிக்க அதிபர் வெள்ளை மாளிகையில் இருந்தால், பாதுகாப்பான அறையில் இது வைக்கப்பட்டு இருக்கும். அதேநேரம் அவர் அமெரிக்காவுக்குள் எதாவது ஒரு பகுதிக்குச் சென்றால், அவருடனேயே இந்த நியூக்ளியர் புட்பால் எடுத்துச் செல்லப்படும். நிலைமைக்கு ஏற்றவாறு அதிபர் அணு ஆயுதங்களை லான்ச் செய்வது குறித்து முடிவெடுப்பார். உலகிலேயே உச்சபட்ச அழிவை ஏற்படுத்தக் கூடிய ஆதாயமாக இது கருதப்படுகிறது.

புட்பால், பிஸ்கட்
கடந்த 1963இல் அமெரிக்க அதிபராக ஜான் எஃப் கென்னடி இருந்த காலத்தில் தான் இந்த சூட்கேஸ் முதலில் மக்கள் பார்வைக்கு வந்தது. உள்ளே அணு ஆயுதங்கள் பற்றிய தகவல்கள் இருக்கும். அணு ஆயுதங்கள் வகைகளைக் குறிக்கும் தகவல்களை புட்பால் என்று அழைக்கப்படுகிறது. அதேபோல அதற்கான ரகசிய கோட்கள் பிஸ்கட் என்று அழைக்கப்படுகிறது. கிரெடிட் கார்டு அளவு இருக்கும் இதை அமெரிக்க அதிபர் எப்போதும் தன்னுடன் வைத்து இருப்பார்கள்.

உருவானது இல்லை
இந்த அதிபயங்கர அணு ஆயுதங்களை எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதை அமெரிக்க அதிபர் மட்டுமே முடிவெடுப்பார். பொதுவாக ராணுவத்தின் ஆலோசனைப்படியே இந்த விவகாரத்தில் அதிபர் இறுதி முடிவை எடுப்பார். இருப்பினும், நல்வாய்ப்பாக இதுவரை இப்படியொரு சூழல் உருவானது இல்லை. அணு ஆயுத போர் நடந்தால் அது உலகம் இதுவரை கண்டிறாத மிக மோசமான பாதிப்பையே ஏற்படுத்தும்.

85 நிமிடங்கள்
இந்த வலிமையான அணு ஆயுதம் எப்போதும் அமெரிக்க அதிபரிடம் தான் இருக்கும். அமெரிக்க அதிபராக எப்போதும் ஆண்களே இருந்த நிலையில், இது ஒருபோதும் பெண் ஒருவர் கன்ட்ரோலில் வந்தது இல்லை. இருப்பினும், இது கடந்த ஆண்டு மாறியது. 2021 நவ.19ஆம் தேதி பைடனுக்கு மயக்க மருந்து அளிக்கப்பட்டு ஆப்ரேஷன் செய்யப்பட்டது. அப்போது முதல்முறையாக 85 நிமிடங்கள் இந்த ஆணு ஆயுதத்தில் கன்டிரோல் துணை அதிபர் கமலா ஹாரீசுக்கு வந்தது. இதன் மூலம் நியூக்ளியர் புட்பாலை கன்டிரோல் செய்த முதல் பெண் என்ற சிறப்பை அவர் பெற்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications