சுயமாக சிந்திப்பதை நிறுத்தும் AI? மாணவர்கள் நலனுக்காக கூகுள் எடுத்த முக்கிய ஸ்டெப்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஸ்மார்ட் வகுப்பறையில் உள்ள கம்ப்யூட்டர்களில் AI இருப்பதால், மாணவர்கள் AI மூலம் குறுக்கு வழியில் வீட்டுப்பாடங்களை செய்கிறார்கள். இது குறித்து கல்வியாளர்கள் புகார் எழுப்பிய நிலையில், இனி பள்ளி மாணவர்களுக்கான கூகுளின் இயல்பு நிலை செயற்கை நுண்ணறிவு அணுகுமுறையை முடக்கப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

மாணவர்களுக்கு கொடுக்கப்படும் வீட்டுப்பாடங்கள், அவர்களின் சிந்தனை மற்றும் அறிவுத்திறனை மேம்படுத்துவதற்காகத்தான். ஆனால், AI இருப்பதால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படுகிறது. இது குறித்து ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், கூகுள் தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

Google AI

இனி பள்ளி மாணவர்களின் google அக்கவுண்ட்டில் ஜெமினி, நோட்புக் எல் எம், ஜெமினி இன் கிளாஸ் ரூம் மற்றும் கூகுள் சர்ச் ஆகிய செயற்கை நுண்ணறிவு கருவிகள் தானாகவே ஆப் செய்யப்பட்டு இருக்கும். பள்ளியின் கணினி நிர்வாகிகள் விரும்பினால் மட்டுமே இவற்றை ஆன் செய்ய முடியும் என்று கூகுள் அறிவித்திருக்கிறது.

இந்த புதிய கட்டுப்பாடுகள் உலக அளவில் கொண்டுவரப்பட உள்ளன. முதல் கட்டமாக, இது அமெரிக்காவில் உள்ள பள்ளிகளில் அமல்படுத்தப்படும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கல்வியாளர்களிடம் இருந்ததும், ஆசிரியர்களிடம் இருந்தும் கடந்த சில மாதங்களாக பெற்ற கருத்துக்களின் அடிப்படையிலேயே பள்ளிகளுக்கு இந்த தேர்வை கூகுள் வழங்கியுள்ளது.

கூகுளின் கல்வித் துறையின் துணைத் தலைவர் கிறிஸ் பிலிப்ஸ் கூறுகையில், "கூகுள் சர்ச் இன்ஜினும், AI தொழில்நுட்பமும் ஒன்றோடு ஒன்று ஆழமாக இணைக்கப்பட்டுள்ளன. எனவே, ஒரு பள்ளி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தடை செய்ய நினைத்தால்.. அந்த மாணவர்களால் சர்ச் எஞ்சினையும் பயன்படுத்த முடியாது" என்று கூறியுள்ளார்.

அமெரிக்க பள்ளிகளில் கூகுள் மிகப்பெரிய ஆதிக்கத்தை கொண்டுள்ளது. அங்குள்ள ஜிமெயில், டாக்ஸ், கூகுள் கிளாஸ் ரூம் மற்றும் மலிவு விலை குரோம் புக் கம்ப்யூட்டர்களில் மாணவர்களால் பரவலாக கூகுள் பயன்படுத்தப்படுகிறது. உலகம் முழுவதும் 15 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் கூகுள் கிளாஸ் ரூமை பயன்படுத்துகிறார்கள்.

இப்படி இருக்கையில் தான் தற்போது கூகுள் நிறுவனம், மாணவர்களுக்கான AI தொழில்நுட்பத்தை கட்டுப்படுத்த புதிய ஆப்ஷனை பள்ளி நிர்வாகத்திற்கு வழங்கி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+