Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

178 ஆண்டுகளில் முதல் முறை! அமெரிக்க மருத்துவ சங்க தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தேர்வு

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க மருத்துவ சங்க தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் முக்கமாலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த 178 ஆண்டுகளில் இந்தியர் ஒருவர் இப்பதவிக்கு வருவது இதுவே முதல்முறையாகும்.

சிகாகோவில், நேற்று நடந்த 'அமெரிக்க மருத்துவ சங்கத்தின்' (AMA) தலைவர் பதவியேற்பு விழாவில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நோயாளிகளுக்கு சிறந்த மற்றும் சமமான அமெரிக்க சுகாதார அமைப்பை உருவாக்க தனது அனுபவத்தை இவர் பயன்படுத்தி வந்திருக்கிறார்.

US Medical

தலைவர் தேர்வு விழாவில் அவர் பேசுகையில், "நான் ஒரு மருத்துவர். எனக்கு தரமான சிகிச்சை கிடைப்பது இயல்பானதுதான். ஆனால், சாமானிய மக்களுக்கும் தரமான மருத்துவம் கிடைக்கிறதா? என்பதுதான் கேள்வி. இன்சூரன்ஸ் எடுத்துக்கொண்டால் பிரச்சனை இல்லை என்று பலரும் கூறுகிறார்கள். ஆனால், இன்சூரன்ஸ் தொகை மிகப்பெரியது. தவிர, மருந்துகளின் விலை மற்றும் மருத்துவ நிபுணர்களை சந்திக்க ஏற்படும் தாமதம் போன்றவை சாமானிய மக்களுக்கு தரமான மருத்துவம் கிடைப்பதை சவாலானதாக மாற்றுகிறது.

நமது சுகாதார அமைப்புக்கு திறமையான மருத்துவர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம். மருத்துவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நமது மருத்துவத் துறையில் உள்ள தலைவர்கள் ஒருமித்த குரலில் பேச அமெரிக்க மருத்துவ சங்கம் (AMA) மிகவும் அவசியம்.

தலைவராக நான் பொறுப்பேற்றுக்கொள்வதற்கு முன்னர், மருத்துவ சங்கத்தின் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் மிக முக்கியமான கொள்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றன. அதாவது ஆரோக்கியமற்ற, பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கும், ஆரோக்கியமான உணவுகளுக்கும் உள்ள வேறுபாடுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் அந்த கொள்கை. மருத்துவர்களாக நாம் இக்கொள்கையை சிறப்பான முறையில் செயல்படுத்துவோம்" என்று கூறியுள்ளார்.

ஸ்ரீனிவாஸ், கடந்த காலங்களில் கடுமையான உடல்நலப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மூளையில் கட்டி இருந்தது. இரு ஒரு வகையான புற்றுநோய் என்றே சொல்லலாம். சுமார் 8 செ.மீ அளவில் இருந்த இந்த கட்டியானது அவரது உயிருக்கே ஆபத்தானதாக இருந்தது. ஆனால் நல்வாய்ப்பாக இது முன்னரே கண்டுபிடிக்கப்பட்டு, மருத்துவர்கள் உதவியுடன் அகற்றப்பட்டிருக்கிறது. இந்த அளவுக்கு தரமான மருத்துவ சேவை அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே அவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+