"மரண அடி.." ஜியோவின் மாஸ்டர் பிளானால் கதிகலங்கிய ஹாட்ஸ்டார்! ஒரே நேரத்தில் பல லட்சம் பேர் காலி
வாஷிங்டன்: இந்தியாவின் டாப் ஸ்டிரீமிங் சர்வீஸ்களில் ஒன்றான ஹாட்ஸ்டாருக்கு இந்தக் காலாண்டில் மிகப் பெரிய அடி விழுந்துள்ளது. இது அவர்கள் வளர்ச்சியைக் கடுமையாகப் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த நவீன உலகில் இப்போது எல்லாமே இணைய வசம் சென்றுவிட்டது. இன்டர்நெட் இல்லாவிட்டால் பல விஷயங்கள் முடங்கிவிடும். இந்த இணையத்தை அடிப்படையாகக் கொண்டே இப்போது பல பிஸ்னஸ்கள் நடந்து வருகிறது.

ஷாப்பிங் முதல் டேட்டிங் வரை அனைத்துமே இப்போது இணையம் மூலமே நடக்கிறது. கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்ட போதும், ஆன்லைன் மூலமே பாடங்களும் கூட கற்பிக்கப்பட்டன.
ஓடிடி: அந்தளவுக்கு அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக இணையச் சேவை மாறிவிட்டது. அதேபோல இணையம் வந்த பிறகு நாம் எப்படி டிவிக்களை பார்க்கிறோம் என்பது தலைகீழாக மாறிவிட்டது. முன்பெல்லாம் கேபிள் மூலம் சேனல்களை பார்ப்போம். இப்போது ஆன்லைன் சந்தா மூலம் ஓடிடி செயலிகள் அதிகரித்துவிட்டது. விளம்பரங்கள் இல்லை அல்லது குறைவான விளம்பரங்கள், தேவையான நேரத்தில் பார்க்கலாம் உள்ளிட்ட காரணங்களால் ஓடிடி செயலிகள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் இப்போது இந்த ஸ்ட்ரீமிங் போர் தான் நடந்து வருகிறது. இந்தியா போன்ற இந்த பெரிய சந்தையைப் பிடிக்கப் பல டாப் நிறுவனங்களும் போட்டுப் போட்டுக் கொண்டு இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக நமது நாட்டில் ஸ்ட்ரீமிங் துறையில் டிஸ்னியின் ஹாட்ஸ்டார் தான் முதல் இடத்தில் இருந்தது. அதற்கு முக்கிய காரணமே கிரிக்கெட் போட்டிகள் தான் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஸ்ட்ரீமிங்க்கான ஏலத்தில் ஒளிபரப்பு உரிமையைப் பெற டிஸ்னி தவறியது.

என்ன பிரச்சினை: டிவி ஒளிபரப்பு ஸ்டார் பக்கம் சென்ற போதிலும், ஓடிடி உரிமை ஜியோ பக்கம் சென்றது. இதன் விளைவை இப்போது ஹாட்ஸ்டார் அனுபவிக்கத் தொடங்கியுள்ளது.
2023ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் டிஸ்னியின் பல லட்சம் சப்ஸ்கிரைபர்களை இழந்துள்ளது. இந்திய கிரிக்கெட் போட்டிகளுக்கான ஸ்ட்ரீமிங் உரிமையை இழந்ததன் விளைவாக இத்தனை லட்சம் சப்ஸ்கிரைபர்களை டிஸ்னி இழந்துள்ளது.
இந்தியாவில் ஹாட்ஸ்டார் என்று அழைக்கப்பட்டாலும் உலகளவில் இது டிஸ்னி+ என்றே குறிப்பிடப்படுகிறது. இதன் சப்ஸ்கிரைபர்கள் குறித்த தகவல்கள் தான் இப்போது வெளியாகியுள்ளது. அதில் டிஸ்னி+ மொத்த சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கை முந்தைய காலாண்டில் இருந்து 40 லட்சம் குறைந்து 157.8 மில்லியனாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டிகளுக்கான ஸ்ட்ரீமிங் உரிமையை இழந்ததே இதற்கு முக்கிய காரணம். இதனால் அதிகப்படியாக இந்தியாவிலேயே டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரைபர்களை இழந்துள்ளது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா, கனடாவில் 300,000 பேரை இழந்துள்ளது. அங்கே கடந்த டிசம்பர் மாதம் தான் டிஸ்னி+ தனது கட்டணத்தை உயர்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

டிஸ்னியின் தலைமை நிதி அதிகாரி கிறிஸ்டின் மெக்கார்த்தி கடந்த பிப்ரவரி மாதமே இது குறித்து எச்சரித்திருந்தார், விலை அதிகரிப்பால் சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கை குறையும் என கூறியிருந்தார். அதன்படியே சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
ஸ்டிரீமிங் நிறுவனங்கள்: உலகெங்கும் இப்போது மந்தநிலை ஏற்பட்டுள்ள நிலையில், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட அனைத்து ஸ்ட்ரீமிங் சர்வீஸும் முதலீட்டாளர்களிடம் இருந்து அழுத்தத்தைச் சந்தித்து வருகிறது. அனைத்து ஸ்டிரீமிங் நிறுவனங்களும் லாபம் ஈட்ட வேண்டும் என அழுத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஸ்டிரீமிங் தவிர ஒட்டுமொத்தமாகவே டிஸ்னி நிறுவனம் சில ஆண்டுகளாகச் சவால்களைச் சந்தித்து வருகிறது. இதனால் நிலைமை சமாளிக்க ஓய்வு பெற்ற இகெர் என்பவரை மீண்டும் நிறுவனத்தை வழிநடத்த அழைத்தனர். அவர் $5.5 பில்லியன் டாலர் செலவைக் குறைப்பதாக அறிவித்திருந்தார்.
டிஸ்னி நிறுவனத்தின் டிவி வருவாய் குறையும் நிலையில், அது ஸ்ட்ரீமிங்கை வலுவாக்க முயன்று வருகிறது. இந்தச் சூழலில் இந்தியாவில் ஒரே காலாண்டில் அவர்கள் பல லட்சம் சப்ஸ்கிரைபர்களை இழந்துள்ளது பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. ஐபிஎல் உரிமையை இழந்ததே இதற்கு முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications