• search
வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"டேஞ்சர்!" பிறக்காத குழந்தைகளையும் விடல.. தாய் வயிற்றில் நுழையும் துகள்கள்! மூளை வரை நீளும் பாதிப்பு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: புதிய ஆய்வு ஒன்றில் குழந்தைகள் பிறக்கும் முன்னரே, காற்று மாசு காரணமாகப் பாதிக்கப்படுவதாக சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

நமது உலகில் மாசு என்பது மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்து உள்ளது. வளர்ச்சி என்ற பெயரில் நாம் செய்யும் செயல்கள் மாசு அதிகரிக்கக் காரணமாக அமைந்துவிடுகிறது.

இதனால் மனிதர்களுக்கு மட்டும் பாதிப்பு இல்லை. பூமியில் வளரும் விலங்குகள், பறவை, மரங்கள் என அனைத்துமே இதனால் மிக மோசமாகவே பாதிக்கப்படுகிறது.

பெரிய கட்டடம் கட்டணுமா.. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி கட்டாயம்.. புதிய உத்தரவின் முழுவிபரம் பெரிய கட்டடம் கட்டணுமா.. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி கட்டாயம்.. புதிய உத்தரவின் முழுவிபரம்

 மாற்று மாசு

மாற்று மாசு

இந்த உலகம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமாக மசாடைந்து வருகிறது. தொழில் புரட்சியில் தொடங்கிய இந்த மாசு இன்னும் குறைந்ததாகத் தெரியவில்லை. ஐரோப்பிய நாடுகள் தங்கள் பகுதிகளில் ஏற்படும் மாசுகளைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதேநேரம் இதர வளும் நாடுகளில் மாசு அதிகரித்து வருகிறது. இதனால் ஒட்டுமொத்த பூமியே கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.

கரு

கரு

காற்று மாசு குறித்து அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் உலகெங்கும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அப்படி நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்து உள்ளது. தாயின் வயிற்றில் இருக்கும் பிறக்காத குழந்தைகளின் நுரையீரல், கல்லீரல் மற்றும் மூளையில் கூட நச்சுத்தன்மை வாய்ந்த காற்று மாசு துகள்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். காற்று மாசு தொடர்பான ஆய்வில் இது மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

 மோசமான பாதிப்பு

மோசமான பாதிப்பு

அதாவது குழந்தைகள் மூச்சு விடுவதற்கு முன்னரே அவர்கள் காற்று மாசால் பாதிக்கப்படுவதை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். கடந்த 2018இல் முதன்முதலில் பிறக்காத குழந்தைகளின் உடலில் காற்று மாசு கண்டறியப்பட்டது. இப்போது பெல்ஜியம் ஹாஸ்ஸெல்ட் பல்கலைக்கழக பேராசிரியர் டிம் நவ்ரோட் நடத்தியுள்ள இந்த ஆய்வில் காற்று மாசு துகள்கள் கருவுக்குள் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்துவது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

 எப்படிப் பாதிப்பு

எப்படிப் பாதிப்பு

ஒப்பீட்டளவில் குறைந்த காற்று மாசு உள்ள ஸ்காட்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் பகுதிகளில் இந்த ஆய்வு நடந்து உள்ளது. மேலும், புகைபிடிக்காத தாய்களிடமே இந்த ஆய்வு நடத்தப்பட்டது. குழந்தையின் திசுக்களில் கருப்பு கார்பன் துகள்கள் காணப்பட்டன.. இவை கர்ப்ப காலத்தில் தாய் சுவாசிக்கும் போதும், உடலில் நுழைந்து ரத்த ஓட்டம் மற்றும் நஞ்சுக்கொடி வழியாகக் கருவுக்குச் சென்றதாக ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

 காரணங்கள்

காரணங்கள்

இப்போது அதிகரிக்கும் கருச்சிதைவுகள், முன்கூட்டியே நிகழும் பிறப்புகள், குறைந்த எடை குழந்தை பிறப்பது, மூளை வளர்ச்சி பாதிப்பு ஆகியவற்றுக்கு முக்கிய காரணம் காற்று மாசு ஆகும். காற்று மாசு எப்படிப் பிறக்காத குழந்தைகளைப் பாதிக்கிறது என்பதை இது விளக்குகிறது. இது அந்த குழந்தைகளை வாழ்நாள் முழுவதும் பாதிப்பதாகவும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றன.

 நனோ துகள்கள்

நனோ துகள்கள்

இது குறித்து பேராசிரியர் பால் ஃபோலர் கூறுகையில், "கறுப்பு கார்பன் நானோ துகள்கள் வளரும் கருவின் உறுப்புகளிலும் நுழைவதை நாங்கள் கண்டறிந்து இருக்கிறோம். இன்னும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இந்த துகள்கள் வளரும் குழந்தைகளின் மூளையிலும் நுழைகின்றன.. இந்த நானோ துகள்கள் கருக்களின் வளர்ச்சியை நேரடியாகப் பாதிக்கும் வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது" என்றார்.

 சோதனை

சோதனை

இந்த ஆய்வில் மொத்தம் 36 தாய்மார்களின் கருக்கள் சோதனை செய்யப்பட்டன. ஏழு முதல் 20 வாரங்கள் வரை இருக்கும் குழந்தைகளின் கருக்களில் ஆய்வு செய்யப்பட்டன. 60 ஆரோக்கியமான குழந்தைகளின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு எடுக்கப்பட்டன. இதில் தான் பல முக்கிய உறுப்புகளில் காற்று மாசு துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

English summary
Even unborn babies are affected sure to Toxic air pollutionL: Nano particles found in lungs and brains of unborn babies.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X