ஏப்ரல் 2ம் தேதி இந்து புத்தாண்டு.. அறிவித்த ஜார்ஜியா மாகாண ஆளுநர்! மத நல்லிணக்கம் காட்டும் அமெரிக்கா
வாஷிங்டன்: அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் ஏப்ரல் 2ம் தேதி இந்து புத்தாண்டு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மாகாண கவர்னர் வெளியிட்டுள்ளார்.
இந்தியர்கள் அதிகமாக வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் தொழில், படிப்புக்காக ஏராளமானவர்கள் சென்றுள்ளனர்.
இதில் ஒருபகுதியில் அங்கேயே குடியுரிமை பெற்று வாழ தொடங்கி விடுகின்றனர். மற்றொரு தரப்பினர் கால இடைவெளிக்குள் மீண்டும் இந்தியா திரும்பி வருகின்றனர்.

அமெரிக்காவில் இந்தியர்கள்
குறிப்பாக வெளிநாடுகளை பொறுத்தமட்டில் அமெரிக்காவில் ஏராளமான இந்தியர்கள் உள்ளனர். அவர்கள் அங்கு அரசு பதவிகளிலும், அரசியலிலும் நுழைந்து சாதித்து வருகின்றனர். மேலும் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் நிறுவனங்களில் பதவி வகித்து வருகின்றனர். இதனால் அமெரிக்கா-இந்தியா இடையே நீண்டகால உறவு உள்ளது. மேலும் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியில் இந்தியர்களின் பங்கும் குறிப்பிடும்படியாக உள்ளது.

கடல் கடக்கும் கொண்டாட்டம்
அமெரிக்காவில் வசித்தாலும் கூட அங்குள்ள இந்தியர்கள் தங்களது கலாசாரத்தை பின்பற்றி பண்டிகைகளை கொண்டாடி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனால் இந்தியர்களின் பாரம்பரிய கொண்டாட்டம் கடல் கடந்தும் காலம்காலமாக நீடித்து வருகிறது. இந்நிலையில் தான் அமெரிக்காவில் இந்து புத்தாண்டுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜார்ஜியா மாகாண கவர்னர் பிரையன் கெம்ப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

2 லட்சம் இந்துக்கள்
இந்து புத்தாண்டு பொதுவாக வசந்த காலத்தின் தொடக்கத்துடன் தொடர்புடையது. இருப்பினும் ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் மாறுபட்டு வருகிறது. இந்த புத்தாண்டு தினத்தில் பூக்களால் வீடுகளை அலங்கரித்து, சிறப்பு உணவுகளுடன் இந்து மக்கள் புத்தாண்டை கொண்டாடுகின்றனர். ஜார்ஜியா மாகாணத்தில் இரண்டு லட்சம் இந்துக்கள் வசிக்கின்றனர். இம்மாகாணத்தின் வளர்ச்சியில் அவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 2 தமிழ் புத்தாண்டு
ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கலாசாரம், பண்டிகைகள் உள்ளன. இதை பின்பற்றி கொண்டாடுவது முக்கியமானது. அதேபோல், ஹிந்துக்கள் வசந்த காலத்தை கொண்டாடுகின்றனர். எனவே, ஏப்ரல் மாதம் 2ம் தேதி ஹிந்துக்களின் புத்தாண்டு தினமாக அங்கீகரிக்கப்படுகிறது. இது நமது மகாணத்தின் பன்முகத்தன்மையை விரிவுப்படுத்தும்''என கூறியுள்ளார்.

ஹோலிகொண்டாட்டம்
இதற்கிடையே அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தில் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வட அமெரிக்காவில் வசிக்கும் பீஹார் மற்றும் ஜார்க்கண்ட் மக்களின் சங்கம் சார்பில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் இந்திய தூதரக அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். பீஹார் மற்றும் ஜார்க்கண்ட் முதல்வர்கள் இந்நிகழ்ச்சிக்கு வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications