Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிரம்ப் நினைத்தால்.. ஓவர் நைட்டில் கிரீன் கார்டை பறிக்க முடியுமா! அமெரிக்க இந்தியர்களுக்கு சிக்கலா?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஒரு அமெரிக்க அதிபர் நினைத்தால் கிரீன் கார்டைப் பறிக்க முடியுமா? டொனால்ட் டிரம்ப் அதிபராக உள்ள நிலையில், அங்குள்ள பல கிரீன் கார்டு ஹோல்டர்களுக்கு எழுந்துள்ள கேள்வி தான் இது. ஒருவரது கிரீன் கார்டு ரத்து செய்யப்படுமா.. அதற்கான அதிகாரம் அமெரிக்க அதிபருக்கு இருக்கிறதா.. எனப் பல கேள்விகள் எழும். இதற்கான விரிவான பதிலை நாம் பார்க்கலாம்.

மீண்டும் அமெரிக்காவை உலகின் தலைசிறந்த நாடாக ஆக்க போகிறேன் எனச் சொல்லி ஆட்சியைப் பிடித்துள்ள டிரம்ப் தொடர்ச்சியாகப் பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். ஒருபக்கம் சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைவோரை நாடுகடத்தி வருகிறார். அதிபராகப் பதவியேற்ற உடனேயே இந்த நடவடிக்கைகளில் தான் அவர் தீவிரம் காட்டினார்.

Donald Trump US Green card

சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்தவர்களை மட்டுமே டிரம்ப் அரசு மீண்டும் நாடுகடத்தும் எனக் கூறினர். ஆனால், டிரம்ப் அரசின் சமீபகால நடவடிக்கைகளும் துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் பேச்சும் கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் கூட சிக்கல் ஏற்படலாம் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது.

டிரம்ப் நிர்வாகம்

அதாவது டிரம்ப் இதற்கு முன்பு அதிபராக இருந்த போது public charge rule என்ற ரூல்ஸை கொண்டு வந்தார். அமெரிக்காவில் பலரும் கிரீன் கார்டு கோரி விண்ணப்பிக்கும் நிலையில், அதைத் தடுக்கவே இந்த ரூல்ஸை கொண்டு வந்தார். அதன்படி யாரெல்லாம் அமெரிக்க அரசின் நிதியுதவியை நம்பி இருக்கிறார்களோ அவர்கள் கிரீன் கார்டு பெற தகுதிபெற மாட்டார்கள் என்பதே இந்த விதியாகும். அதாவது சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் அமெரிக்க அரசின் நிதியுதவி பெறுவோருக்கு கிரீன் கார்டு கிடைக்காது.

விதி என்ன

புதிதாக கிரீன் கார்டு கோரி விண்ணப்பிக்கும் நபர்களுக்கு மட்டுமே இந்த விதி பொருந்தும் என அறிவித்தனர். இருப்பினும், ஏற்கனவே கிரீன் கார்டு வைத்திருப்போருக்கு எதிராகவும் இந்த ரூல்ஸ் பயன்படுத்தப்படலாம் என அப்போதே பலரும் அஞ்சினர். மேலும், கிரீன் கார்டு வைத்திருக்கும் பலருக்கும் இது குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்துவதாக இருந்தது. டிரம்ப் இப்போது மீண்டும் அதிபராகியுள்ள நிலையில், கிரீன் கார்டு வைத்திருப்போருக்கு மீண்டும் அச்சம் அதிகரித்துள்ளது.

இது தவிர டிரம்ப் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அதாவது கிரீன் கார்டு வைத்திருப்போரின் கடந்தகால நடவடிக்கைகளை ஆய்வு செய்து வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு சட்டச் சிக்கல்களைக் கொண்டவர்கள் அல்லது சிறிய குடியேற்ற விதி மீறல் புகாருக்கு உள்ளாகி இருக்கும் கிரீன் கார்டு ஹோல்டர்களும் பிரச்சினையை எதிர்கொள்ளலாம்.

Donald Trump US Green card

ஜே.டி. வான்ஸ்

இது ஒரு பக்கம் இருக்க அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் சமீபத்தில் அளித்த பேட்டியில், "ஒருவர் கிரீன் கார்டு வைத்திருக்கிறார் என்றாலும் அவருக்கு அமெரிக்காவில் இருக்க முழு உரிமை இல்லை.. இது பேச்சு சுதந்திரம் பற்றியது இல்லை.. தேசியப் பாதுகாப்பு தொடர்பானது. அமெரிக்க மக்களான நாம் யாரை அனுமதிக்கிறோம் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

டிரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைகளும் அமெரிக்கத் துணை அதிபரின் பேச்சுகளும் அங்குள்ள கிரீன் கார்டு ஹோல்டர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது. ஒரு அமெரிக்க அதிபர் நினைத்தால் இஷ்டத்துக்கு கிரீன் கார்டுகளை ரத்து செய்ய முடியாது என்ற போதிலும் சில நடவடிக்கைகள் கிரீன் கார்டு வைத்திருப்போருக்கு எதிராகப் போகலாம்.!

கிரீன் கார்டு ரூல்ஸ்

கிரீன் கார்டு என்பது அமெரிக்காவில் நிரந்தரமாக வசிக்கவும் வேலை செய்யவும் உரிமையை வழங்குகிறது. ஆனால், கிரீன் கார்டுகள் ஒன்றும் அமெரிக்கச் சட்ட அமைப்பின் வரம்பிற்கு அப்பாற்பட்டது இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். மேலும், கிரீன் கார்டு என்பது குடியுரிமை இல்லை. அமெரிக்கக் குடியுரிமை பெற்றவருக்குக் கிடைக்கும் சலுகைகள் கிரீன் கார்டு வைத்திருப்போருக்குக் கிடைக்காது. கடுமையான குற்றவியல் தண்டனைகள் பெறுவது, மோசடி செய்து கிரீன் கார்டு பெறுவது அல்லது நீண்ட காலம் அமெரிக்கா செல்லவில்லை என்றால் கிரீன் கார்டு ரத்து செய்யப்படலாம்.

ஆனால், அதுபோன்ற சந்தர்ப்பங்களில் கூட உரிய நடைமுறை பின்பற்றப்படும்.. டிரம்ப் உட்பட எந்தவொரு அதிபராக இருந்தாலும் நினைத்தவுடன் கிரீன் கார்டை ரத்து செய்ய முடியாது. சட்டப்படியே நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அதிபரின் உத்தரவால் கிரீன் கார்டு ரத்தாகாது. இந்த நடவடிக்கைகளை அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை மற்றும் குடிவரவு நீதிமன்றங்கள் தான் கையாளும். ஒருவேளை சட்ட பிரச்சினை எழுந்தாலும் கிரீன் கார்டு வைத்திருப்போர் குடியேற்ற நீதிபதியின் முன்பு தங்கள் தரப்பு நியாயங்களைச் சொல்லி வாதாடலாம்.

யாருக்கு சிக்கல்?

அதேநேரம் விதிகளில் இருப்பது போல அமெரிக்காவில் தங்கி, அனைத்து சட்டங்களுக்கும் இணங்குபவர்களுக்கு எந்தவொரு பிரச்சினையும் இருக்காது. அவர்களின் கிரீன் கார்டு ரத்து செய்யப்படாது. அதேநேரம் கடந்த காலங்களில் சட்ட பிரச்சினை இருப்போர், போதுமான காலம் அமெரிக்காவில் தங்காதவர்களுக்குப் பிரச்சினை இருக்கத் தான் செய்கிறது. இந்த விவகாரத்தில் டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் அது இவர்களுக்குப் பிரச்சினையாகவே இருக்கும்.

Donald Trump US Green card

டிரம்பிற்கு ஆர்வம் இல்லை

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு கிரீன் கார்டு திட்டத்தில் எல்லாம் பெரிதாக ஆர்வம் இல்லை. இதனால் அமெரிக்காவுக்கு எந்தவொரு லாபமும் இல்லை என அவர் நினைக்கிறார். இதன் காரணமாகவே டிரம்ப் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கிரீன் கார்டுக்கு மாற்றாகவே கோல்டன் விசா திட்டத்தை அறிமுகப்படுத்தினார். பலரும் அமெரிக்காவுக்குச் செல்ல விசா வாங்கச் சிரமப்படும் நிலையில், இந்தத் திட்டத்தின் கீழ் ஒருவர் 5 மில்லின் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.42 கோடி) கொடுத்தால் நேரடியாக கோல்டன் கார்டு விசா தரப்படுமாம்.

கோல்டன் விசா

கோல்டன் விசாவை வைத்து ஒருவர் அமெரிக்காவில் நிரந்தரமாக இருக்கலாம். கிட்டதட்ட ஒரு கிரீன் கார்டு என்ன சலுகைகளை எல்லாம் தருமோ அதே சலுகைகளை கோல்டன் விசாவும் ஒருவருக்குத் தரும். மேலும், சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் நேரடியாக அமெரிக்கக் குடியுரிமையையும் பெற முடியுமாம். பெரும் பணக்காரர்கள் எளிதாகக் குடியுரிமை பெற இந்தத் திட்டம் உதவும் எனக் கூறப்படுகிறது.

கோல்டன் விசா குறித்து சில விமர்சனங்கள் எழுந்தாலும் டிரம்ப் அதில் தீவிரமாக இருக்கிறார். ஒரு நிறுவனம் தனக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு கோல்டன் விசாக்களை வாங்கிக் கொள்ளலாம் என்றும் இதன் மூலம் திறமையான பணியாளர்களை எந்தவொரு சிக்கலும் இல்லாமல் அமெரிக்கா அழைத்து வரலாம் என்றும் டிரம்ப் குறிப்பிடுகிறார். மேலும், கோல்டன் விசாவுக்கு வாங்கப்படும் 5 மில்லியன் டாலரில் ஒரு குறிப்பிட்ட பகுதி அமெரிக்காவின் கடனை அடைக்கவும் பயன்படும் என அவர் அறிவித்திருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+