மகனுக்கு சீட் தர மறுத்த ஹார்வார்ட் பல்கலை.? டிரம்ப் நடவடிக்கை பாய இதுதான் காரணமாம்! பகீர் புகார்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அங்குள்ள ஹார்வர்ட் உள்ளிட்ட முக்கியமான சர்வதேச பல்கலைக்கழகங்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதற்கிடையே அவரது மகன் பரோன் டிரம்பிற்கு சீட் மறுத்ததாலேயே ஹார்வர்ட் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களுக்கு எதிராக டிரம்ப் நடவடிக்கை எடுப்பதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.

அமெரிக்க அதிபரான டிரம்ப் சர்ச்சை நடவடிக்கைகளுக்குப் பெயர் போனவர் என்பது அனைவருக்கும் தெரியும். இப்போது அவர் அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பல்வேறு காரணங்களை சொல்லி இந்த பல்கலைக்கழகங்களுக்கு எதிராக டிரம்ப் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

Donald Trump USA world

டிரம்ப் vs ஹார்வர்ட் பல்கலைக்கழகம்

குறிப்பாக ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு எதிராக டிரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியதாகச் சொல்லி முதலில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்குப் போகும் ஸ்காலர்ஷிப்பை டிரம்ப் நிறுத்தினார். பிறகு அங்கு வெளிநாட்டு மாணவர்களைச் சேர்க்கத் தடை விதித்தார். டிரம்ப் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஹார்வர்ட் பல்கலைக்கழகம் நீதிமன்றத்திற்குப் போய் தடை வாங்கிவிட்ட போதிலும் இரு தரப்பிற்கும் இடையே மோதல் தொடர்கிறது.

ஹார்வர்ட் மட்டுமின்றி, கொலம்பியா, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகங்களுக்கு எதிராகவும் டிரம்ப் நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த பல்கலைக்கழகங்களுக்குச் செல்லும் பெடரல் அரசின் மானியங்களை நிறுத்துவதாக டிரம்ப் அரசு மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதற்கிடையே டிரம்ப்பின் இளைய மகனான பரோன் டிரம்பிற்கு ஹார்வர்ட் உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் சீட் தரவில்லை என்றும் இதன் காரணமாகவே டிரம்ப் அந்த பல்கலைக்கழகங்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லப்பட்டன.

Donald Trump USA world

ஐவி லீக் பல்கலைக்கழகங்கள்

அமெரிக்காவில் 8 புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் இணைந்து ஐவி லீக் என்ற கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. இதில் ஹார்வர்ட், கொலம்பியா, ஸ்டான்போர்ட், பிரவுன், கார்னெல், டார்ட்மவுத், பென்சில்வேனியா பல்கலைக்கழகம், பிரின்ஸ்டன், யேல் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதில் பரேன் ட்ரம்ப் சில பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்ததாகவும் இருப்பினும் அவருக்கு சீட் மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மூத்த எம்பி குற்றச்சாட்டு

அமெரிக்காவின் ஜனநாயக கட்சி எம்பியான ஷெல்டன் வைட்ஹவுஸ் என்பவரும் இந்த விவகாரத்தை எழுப்பியுள்ளார். கொலம்பியா மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகங்கள் பரோன் டிரம்பிற்கு சீட்டை நிராகரித்ததாகவும் இதன் காரணமாகவே டிரம்ப் அந்த பல்கலைக்கழகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். மூத்த எம்பியான ஷெல்டன் வைட்ஹவுஸே இந்த குற்றச்சாட்டுகளை வைத்ததால் பலரும் இந்த விவகாரத்தில் கேள்வி எழுப்பினர். இதனால் காட்டுத்தீ போல இது வெடித்தது.

மெலனியா விளக்கம்

பையனுக்கு சீட் கொடுக்க மறுத்ததற்கு எல்லாம் நடவடிக்கை எடுப்பதை ஏற்க முடியாது என்றெல்லாம் நெட்டிசன்கள் தெரிவித்தனர். ஐவி லீக் கீழ் வரும் சில பல்கலைக்கழகங்களுக்கு பரோன் டிரம்ப் விண்ணப்பித்ததாகவும் அவரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் பலரும் பதிவிட்டனர். இது பூதாகரமாக வெடித்த நிலையில், டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் தரப்பு விளக்கம் கொடுத்துள்ளது.

பரோன் டிரம்ப் குறித்து இணையத்தில் பரவும் தகவல் உண்மைக்குப் புறம்பானது என்று மெலனியா தரப்பு தெரிவித்துள்ளது. பரோன் ஹார்வர்டுக்கு விண்ணப்பிக்கவில்லை என்றும் அது குறித்துப் பரவும் தகவல் முற்றிலும் தவறானது என்று மெலனியா டிரம்பின் தகவல் தொடர்பு இயக்குநர் நிக்கோலஸ் கிளெமென்ஸ் தெரிவித்தார்.

Donald Trump USA world

ஆனாலும் குழப்பம் தீரல

அதேநேரம் மெலனியா தரப்பு ஹர்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்கவில்லை என்பதை விளக்கத்தில் கூறியுள்ளது. இதர ஐவி லீக் பல்கலைக்கழகங்களுக்கு பரோன் விண்ணப்பித்தாரா என்பது குறித்து எந்தவொரு தகவலையும் கூறவில்லை என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள். மறுபுறம் இந்த விவகாரத்தில் டிரம்ப் தரப்பு எந்தவொரு விளக்கத்தையும் அளிக்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+