ஜோ பிடனின் தேசிய பொருளாதார குழுவில் இடம்பெற்ற தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட பரத் ராமமூர்த்தி
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பிடனின் பொருளாதார குழுவில் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட பரத் ராமமூர்த்தி இடம் பெற்றிருக்கிறார்.
அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரீஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கமலா ஹாரீஸின் தாய் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்.

அமெரிக்க துணை அதிபரான முதலாவது அமெரிக்கா வாழ் இந்தியர், முதலாவது கறுப்பின பெண் என்ற பெருமைக்குரியவர் கமலா ஹாரீஸ்.
மேலும் ஜோ பிடன் தமது நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியினருக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். இந்த வரிசையில் ஜோ பிடனின் பொருளாதார விவகாரங்களுக்கான குழுவில் அமெரிக்கா பரத் ராமமூர்த்தி இடம்பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் தேசிய பொருளாதார கவுன்சிலின் துணை இயக்குநராக பரத் ராமமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். பரத் ராமமூர்த்தியின் தந்தை ரவி ராமமூர்த்தி தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர். தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு சென்று குடியேறியவர் ரவி ராமமூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications