Lottery: லாட்டரியில் 19 கோடி ரூபாய் பரிசு.. மறுநொடியே ஆபிஸ்க்கு வந்த அதிர்ஷ்டக்கார பெண் செய்ததை பாருங்க!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் வேலை பார்த்து கொண்டிருந்த பெண் ஒருவர் மதிய உணவு இடைவேளையின் போது பக்கத்து கடையில் உள்ள லாட்டரி கடைக்கு சென்று ஸ்க்ராட்ச் லாட்டரி வாங்கியிருக்கிறார். இதில் அந்த பெண்ணுக்கு ரூ.19 கோடி பரிசு விழுந்துள்ளது. ஆனால் அந்த பெண் எந்த வித அலட்டலும் இன்றி வேலைக்கு சென்று பணியினை கவனித்துள்ளார். இது பலருக்கும் வியப்பை கொடுத்துள்ளது.

லாட்டரியில் பணம் அடித்துவிட்டால் அடுத்த நொடியே என் லெவலே மாறிவிடும் என்று லாட்டரி வாங்கி வைத்துவிட்டு பலரும் பகல் கனவு கண்டு கொண்டிருப்பதை பார்க்க முடியும். ஆனால் ஒரு சிலரோ.. சத்தமில்லாமல் பணத்தை வைத்துக்கொள்ள வேண்டும்.. யாரிடமும் மூச்சுவிடக்கூடாது என்று கனவு கண்டு கொண்டு இருப்பார்கள்.

Lottery Woman goes to the office to finish remaining tasks despite winning a 19 crore lottery prize

19 கோடி ரூபாய் பரிசு

என்னதான் பகல் கனவு கண்டு கொண்டிருந்தாலும் லாட்டரியில் பரிசு அடித்துவிட்டால் அடுத்த நொடியே உற்சாகத்தில் உடனடியாக அனைவருக்கும் தெரியப்படுத்தி விடுவார்கள். ஆனால், அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் லாட்டரியில் 19 கோடி ரூபாய் பரிசு வென்றும் சத்தமில்லாமல் அடுத்த நொடியே வெகு இயல்பாக தனது அலுவலக பணிக்கு சென்றது பலருக்கும் வியப்பை கொடுத்துள்ளது. அப்படி என்னதான் செய்தார் என்பது பற்றி பார்க்கலாம்.

அமெரிக்காவின் விர்ஜினியா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அங்குள்ள அலுவலகம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். லாட்டரி வாங்கும் பழக்கம் கொண்ட இவர், அங்குள்ள லாட்டரி கடையில் மதிய உணவு இடைவேளையின் போது ஸ்க்ராட்ச் லாட்டரி வாங்கியுள்ளார். சும்மா வாங்கி பார்ப்போமே என்று டிக்கெட் வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. டிக்கெட்டில் ரூ.19 கோடி பரிசு விழுந்துள்ளது.

எந்த வித சலனமும் காட்டவில்லை

ஒரே நொடியில் வாழ்க்கையே மாறினாலும் எந்த வித சலனமும் காட்டாத அந்த பெண், உணவு இடைவேளை முடிந்துவிட்டதே என்று பரபரப்பாக அலுவலகம் திரும்பி தனது எஞ்சிய பணிகளை நிறைவு செய்தாராம். இவ்வளவு பெரிய தொகை அடித்துவிட்ட போதிலும் அதை கொண்டாடாமல், டிக்கெட்டை தனது பேக்கில் வைத்துக்கொண்டு அலுவலக பணியை முடிக்க கிளம்பிய அந்த அதிர்ஷ்டக்கார பெண் செயல் பலருக்கும் வியப்பை கொடுத்துள்ளது.

இது பற்றி லாட்டரி அலுவலர்களிடம் அந்த பெண் பகிர்ந்துள்ளார். மேலும் தனது அடையாளம் யாருக்கும் வெளிப்படுத்த வேண்டாம் ரகசியமாகவே வைத்துக்கொள்ளுங்கள் என்றும் லாட்டரி அலுவலர்களுக்கு கோரிக்கை வைத்தாராம். இந்த செய்தி இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் வியப்புடன் இந்த சம்பவம் குறித்து பதிவிட்டு வருகிறார்கள்.

நெட்டிசன்கள் கருத்து

நெட்டிசன் ஒருவர் கூறுகையில், "எனக்கெல்லாம் 1 கோடி விழுந்தாலே போதும். அலுவலகம் பக்கமே திரும்பி பார்த்து இருக்க மாட்டேன். ஆனால் இவரோ 19 கோடியை வென்று விட்டு மீண்டும் அலுவலக பணிகளை பார்த்து இருக்கிறாரா? என்று வியப்புடன் பதிவிட்டுள்ளார். மற்றொரு நெட்டிசன் கூறுகையில், "பணம் வரும் போகும் என்பதை அந்த பெண் நன்கு உணர்ந்தவராக இருப்பாராக இருக்கும்" என்று பதிவிட்டு இருக்கிறார்.

கையில் எவ்வளவு கிடைக்கும்?

அமெரிக்க மதிப்பில் 2 மில்லியன் டாலர் பரிசாக வென்றுள்ள அவருக்கு இரண்டு ஆப்ஷன்களை லாட்டரி நிறுவனம் முன்வைத்துள்ளதாம். அதாவது 30 வருடங்களுக்கு ஆண்டுக்கு 2 மில்லியன் டாலர் வழங்கப்படும். அல்லது ஒரே தொகையாக ரூ.19 கோடி அளிக்கப்படும் என்ற இரு ஆப்ஷன்கள் அளிக்கப்பட்ட நிலையில், அவர் இரண்டாவது ஆப்ஷனை டிக் அடித்தாராம். இதன்மூலம் வரி பிடித்தம் போக $952,000 வீட்டுக்கு எடுத்து செல்ல முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+