நீங்க மிரட்டினா...நாங்க விலைக்கே வாங்குவோம்...டிக் டாக் ஆப்...வாங்குகிறது மைக்ரோசாப்ட்.!!
வாஷிங்டன்: தேசிய பாதுகாப்பு மற்றும் தணிக்கை செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டு இருப்பதால் சீனாவின் டிக் டாக் ஆப்பை அமெரிக்காவில் தடை செய்வது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்று வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியிருந்த நிலையில், டிக் டாக் ஆப்பை மைக்ரோ சாப்ட் நிறுவனம் வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிக் டாக் ஆப் குறித்து வெள்ளை மாளிகையில் பத்திரிக்கையாளர்களுக்கு அதிபர் ட்ரம்ப் அளித்த பேட்டியில், ''டிக் டாக் ஆப்பை தடை செய்யலாம் என்று ஆலோசித்து வருகிறோம். இத்துடன் வேறு சில ஆலோசனைகளும் முன் வைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் எது ஒத்து வரும் என்பது குறித்து விரைவில் முடிவு செய்வோம்'' என்று ட்ரம்ப் தெரிவித்து இருந்தார்.

டிக் டாக் நிறுவனத்தை சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனம் இயக்கி வருகிறது. விரைவில் அமெரிக்காவில் டிக் டாக் உரிமையை மாற்றுவதற்கான வேலைகளில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது என்று அமெரிக்க செய்தித்தாள்களில் செய்தி வெளியாகி இருக்கிறது.
டிக் டாக் ஆப்பை வாங்குவதற்கு அமெரிக்காவின் நிதி நிறுவனங்கள், டெக் நிறுவனங்கள் முன் வந்து இருப்பதாக செய்தி வெளியானாலும், டிக் டாக் ஆப்பை வாங்குவதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால், இந்த விஷயத்தில் கருத்துக்கள் தெரிவிக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் மறுத்துள்ளது.
இதற்கிடையே நேற்று அறிக்கை வெளியிட்டு இருக்கும் டிக் டாக் நிறுவனம், ''டிக் டாக் குறித்து வரும் செய்திகள், அனுமானங்கள், புரளிகள் குறித்து எந்த பதிலையும் தெரிவிக்க விரும்பவில்லை. வெற்றிகரமாக டிக் டாக் ஆப்பை நடத்துவதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்'' என்று தெரிவித்துள்ளது.
பைட்டான்ஸ் 2017ல் டிக் டாக் ஆப்பை துவங்கியது. பின்னர் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாக இருக்கும் மியூசிக்கல்.லி என்ற வீடியோ சேவையை வாங்கியது. அமெரிக்காவின் பேஸ்புக், ஸ்நாப்சாட் இரண்டும் தங்களுக்கு போட்டியாக டிக் டாக் ஆப்பை பார்த்தன. இன்றும் உலக அளவில் டிக் டாக் ஆப்பிற்கு கோடிக்கணக்கான பார்வையாளர்கள் உள்ளனர்.
டிக் டாக் தங்களிடம் இருக்கும் டேட்டாவை சீன அரசுடன் பகிர்ந்து கொள்ளாது என்று பலமுறை டிக் டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், சீன அரசு தங்கள் நாட்டில் இருக்கும் தொழில்நுட்ப நிறுவனங்களின் டேட்டாவை திருடி வருவதாக பரவலான நம்பிக்கை இருக்கிறது. இதனால்தான் சமீபத்தில் இந்தியாவும் அந்த ஆப் உள்பட 110 ஆப்களை தடை செய்தது. உலக நாடுகளின் தவறான பிம்பத்தில் இருந்து வெளியே வரவேண்டும் என்பதற்காக அமெரிக்காவின் டிஸ்னி நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியை டிக் டாக் அதிகாரியாக பைட்டான்ஸ் பணியில் அமர்த்தியுள்ளது.
அமெரிக்க ராணுவத்தினருக்கு அளித்திருக்கும் செல்போனில் டிக் டாக் ஆப் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், விரைவில் அமெரிக்காவில் டிக் டாக் ஆப் தடை செய்யப்படும் என்று அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்து இருந்தார்.
-
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
ஈரானை காலி பண்ணாம விடாதீங்க.. டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி பட்டத்து இளவரசர்? ஏன் தெரியுமா? -
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேச்சு.. ஈரான் போருக்கு நடுவே நடந்த முக்கிய ஆலோசனை -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications