அமெரிக்க பங்குச் சந்தை வரலாற்றையே புரட்டி போட்ட இடைத்தேர்தல் முடிவு.. டிரம்ப் ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

அமெரிக்காவில் நடந்த இடைத்தேர்தலில் ஜனநாயக கட்சி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியின் காரணமாக அமெரிக்காவின் அரசியலை மட்டுமல்ல பங்கு சந்தையையும் புரட்டி போட்டுள்ளது. ஏனெனல் அதிபர் டிரம்பின் ஆளும் குடியரசு கட்சி எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியிடம் செனட், பிரதிநிதிகள் ஆகிய இரு அவைகளையும் பறிகொடுத்துள்ளது. சில முக்கியமான மாகாணங்களின் ஆளுநர் பதவிகளையும் ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது. இந்த தேர்தல் முடிவுகளால் அமெரிக்காவில் பங்கு சந்தையில் பெரிய சரிவு நடந்துள்ளது. இதனை சுட்டிக்காட்டி அமெரிக்கா அதிபர் டிரம்ப் வேதனை அடைந்துள்ளார்.

ஏனெனில் அமெரிக்காவில் இடைத்தேர்தல் s முடிவுகளுக்கு டிரம்பின் ஆதரவாளர்கள், டிரம்பின் ஆதரவு நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. உதாரணமாக டிரம்பின் நிறுவனங்கள் மற்றும் எலான் மஸ்கின் பங்குகள் சரிவினை சந்தித்துள்ளது. அமெரிக்காவில் அதிகாரம் டிரம்பின் கையைவிட்டு போவதால் பல மாற்றங்கள் முதலீட்டாளர்களிடம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் பங்கு சந்தையில் மிகப்பெரிய அடியை ஏஐ மற்றும் சிப் மேக்கர்ஸ் நிறுவனங்கள் வாங்கி உள்ளன.

US Donald trump

தென் கொரியாவின் கொச்பி , சாம்சாங் எலக்ட்ரானிக்ஸ் போன்ற பல ஏஐ சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் சரிந்துள்ளது. ஏஐ காரணமாக விலை ஏறிய பங்குகள் எல்லாமே சரிந்துள்ளன. அதேபோல் அமெரிக்காவின் எலான் மஸ்கின் பங்குகளும் சரிந்துள்ளன. இவர் தான் டிரம்பின் கட்சிக்கு பெரிய நன்கொடையாளராக இருந்தார். இந்த சூழலில் டெஸ்லா 3.3%, ஸ்பேஸ் எக்ஸ் 3.8% சரிந்துள்ளது. அரசியல் கணக்கு மாறியதால் டிரம்பின் ஆதரவாளர்களின் பங்குகள் கடுமையான சரிவினை சந்தித்துள்ளது.

டிரம்ப் மீடியா மற்றும் டெக்னாலஜி குரூப் மோசமாக அடி வாங்கி உள்ளது. ஒரே நாளில் 24.5% காலியாகி உள்ளது. ஐந்து வருடம் முன்பு 175 டாலரில் இருந்த பங்குகள் இப்போ வெறும் 4.49 டாலரில் முடிந்துள்ளது. இப்படி கடும் சரிவினை சந்தித்துள்ளதால் முதலீட்டாளர்கள் பலர் கவலை அடைந்துள்ளனர். தங்கம் விலையும் கடுமையாக ஏறி வருகிறது. அதேநேரம் ஆயுத ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள், ஆயில் நிறுவனங்கள் கடுமையான சரிவினை சந்தித்துள்ளன.

டிரம்ப் ஆவேசம்

இந்த முடிவுகளால் கோபம் அடைந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்ரூத் சோசியல் தளத்தில் வெளியிட்ட பதிவில் "தேர்தல் முடிவுகளின் காரணமாகப் பங்குச் சந்தை வரலாற்றிலேயே மிக மோசமான நாட்களில் ஒன்றைச் சந்தித்துள்ளது. இதைப் பார்ப்பதற்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது! யாரும் இதுவரை எட்டாத அளவுக்கு உயர்ந்த நிலைக்குப் பங்குச் சந்தையைக் கொண்டு செல்ல நாங்கள் எவ்வளவோ உழைத்தோம். ஆனால், அதற்குப் பிறகு இப்படி ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், உங்களுடைய 401(k) ஓய்வூதிய முதலீடுகளின் மதிப்பும் சரிந்துவிட்டது. நினைவில் கொள்ளுங்கள், இதற்குக் குடியரசுக் கட்சியினர் காரணமல்ல; ஜனநாயகக் கட்சியினர்தான் (Dumocrats) காரணம்..." என்று காட்டமாக கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+