ஏலியன் தாக்குதல்கள், அணு உலை வெடிப்பு.. 2023-ம் ஆண்டு கதி கலங்க வைக்கும்.. பாபா வங்காவின் கணிப்பு
வாஷிங்டன்: ஒவ்வொரு வருடமும் முடியும்போதும், புது வருடம் தொடங்கும்போதும் பாபா வங்காவின் கணிப்புகள் உலக அளவில் கவனத்தை ஈர்க்கக்கூடியதாக அமையும். அந்த வகையில், வரும் 2023- ஆம் ஆண்டு எப்படி இருக்கப்போகிறது என்ற பாபா வங்காவின் கணிப்பு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Recommended Video
பல்கேரியாவை சேர்ந்தவர் பாபா வங்கா. தனது 12-வயதில் பெரும் புயலில் சிக்கிய இவர், மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பி இருக்கிறார்.
நீண்ட நாட்களுக்குப் பிற்கு குடும்பத்தினரால் பார்வை இழந்த நிலையில் மீட்கப்பட்டார். தனது பார்வையை இழந்த பிறகு எதிர்காலம் குறித்து இவர் கணிக்கத் தொடங்கினார். பெண்ணான இவரை பாபா வங்கா என்று அழைக்கின்றனர்.

எதிர்காலம் பற்றி பாபா வங்காவின் கணிப்பு
கடந்த 1996- ஆம் ஆண்டு இவர் இறந்து விட்டார். ஆனாலும் இவரது கணிப்புகள் தற்போது வரை பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இவரது பெரும்பாலான கணிப்புகள் பலித்து விட்டதாக சொல்லப்படுவதே இந்த பரபரப்புக்கு காரணம். 5079- ஆம் ஆண்டு வரை எதிர்காலம் பற்றி கணித்து வைத்திருப்பதாக நம்பப்படுகிறது. பாபா வங்காவின் கருத்துப்படி, அதுதான் இந்த உலகத்தின் கடைசியாக இருக்கும் என்பதாக உள்ளது. பாபா வங்காவின் பல கணிப்புகள் நடந்ததாக சொல்லப்படுகிறது.

கணிப்பு பலிப்பதாக..
உதாரணமாக அமெரிக்காவில் இரட்டை கோபுரம் மீது விமான தாக்குதல் நடக்கும் என்று இவர் ஏற்கனவே கணித்து இருந்தாராம். இவரது கணிப்புப் படியே, கடந்த 2011-ல் செப்டம்பரில் தாக்குதல் நடைபெற்றது. அதேபோன்று அமெரிக்காவின் அதிபராக கருப்பினத்தவர் பதவியேற்பார் என்று சொல்லி இருந்தாராம். இதுவும் அப்படியே நடந்ததாக கூறுகிறார். அதாவது அமெரிக்காவின் 44-வது அதிபராக பதவியேற்ற ஒபாமாவை குறிப்பிடுகிறார்கள்.

மீண்டும் டிரெண்ட் ஆகும் பாபா வங்காவின் கணிப்பு
உலகத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் என்று கணித்து இருந்தர். கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த உலகம் கடும் நெருக்கடியை சந்திக்கும் என்று கணித்து இருந்தார். அவர் கூறியது போலவே கொரோனா பெருந்தொற்றால் உலகம் பெரும் நெருக்கடியை சந்தித்தது. இப்படி இவர் கூறும் விஷயங்களில் பல நடந்துள்ளதால், இவருடைய கணிப்பை பற்றி பலரும் எதிர்பார்க்கின்றனர். அந்த வகையில் தற்போது பாபா வாங்காவின் கணிப்பு ஒன்று மீண்டும் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

பூமியின் சுற்றுவட்டப்பாதையில் மாற்றம்
ஒவ்வொரு வருடமும் முடியும்போதும், புது வருடம் தொடங்கும்போதும் இந்த மர்ம பெண்ணின் கணிப்புகள் உலக அளவில் கவனத்தை ஈர்க்கக்கூடியதாக அமையும். அந்த வகையில், வரும் 2023- ஆம் ஆண்டு எப்படி இருக்கப்போகிறது என்ற பாபா வங்காவின் கணிப்பு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாபா வங்கா தனது கணிப்பில், பூமியின் சுற்றுவட்டப்பாதையில் மாற்றம் ஏற்படும் என்று கூறியிருக்கிறார். உலகில் உள்ள அணு உலை உருகுவதால் சுற்றுவட்டப் பாதையில் மாற்றம் ஏற்படலாம் என்று கூறியிருக்கிறார்.

சூரிய புயல் ஏற்படும்
இதன் காரணமாக பூமி பல பேரழிவுகளை எதிர்கொள்ள வாய்ப்பு இருக்கிறதாம். அதிக கதிர்வீச்சுக்களை ஏற்படுத்தக் கூடிய சூரிய புயல் ஏற்படுமாம். அதேபோல், ஆய்வங்களில் குழந்தைகள் உருவாக்கப்படும் கண்டுபிடிப்புகள் வெளிப்படும் என்று கூறியிருக்கிறார். பிறக்கப்போகும் தங்கள் குழந்தைகளின் குணநலன்கள் எப்படி இருக்கும், தோல் நிறம் எப்படி இருக்கும் என்பது முதல் கொண்டு பெற்றோர்கள் தேர்வு செய்து கொள்ள முடியும்.

வேற்றுக்கிரகவாசிகள் தாக்குதல்
இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக் கொள்வது தடை செய்யப்படும். வாடகைத்தாய் முறையும் முடிவுக்கு வரும். வரும் காலத்தில் ஆய்வகத்தில் பிறக்கும் குழந்தைகளே குடிமக்களாக இருக்கும் என்று கணித்துள்ளார். அதுமட்டும் இன்றி வேற்றுக் கிரகவாசிகள் பூமி மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு இருக்கிறதாம். இதனால், லட்சக்கணக்கானவர்கள் பலியாக நேரிடலாம் என்று கணித்து வைத்திருக்கிறார்.

வெள்ளி கிரகத்தில் மனிதர்கள்..
வல்லரசு நாடுகள் உயிரியல் ஆயுதங்களை பயன்படுத்த வாய்ப்புள்ளதாகவும் பாபா வங்கா தனது கணிப்பில் கூறியிருக்கிறார். உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் நீடித்து வரும் நிலையில், பாபா வங்காவின் இந்த கணிப்பு கவனம் பெறுவதாக அமைந்துள்ளது. 2028 ஆம் ஆண்டில் வெள்ளி கிரகத்தில் மனிதர்கள் காலடி எடுத்து வைப்பார்கள் என்றும் கணித்துள்ளார்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications