திடீரென நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள்.. டிரம்ப் வந்ததும் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு சிக்கல்?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவுள்ள டிரம்ப், இந்த முறை சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுப்பார் எனத் தெரிகிறது. இதற்கிடையே கடந்த ஓராண்டில் அமெரிக்காவில் இருந்து நாடு நடத்தப்பட்ட இந்தியர்கள் குறித்த விவரங்களை மத்திய அரசு இப்போது நாடாளுமன்றத்தில் பகிர்ந்துள்ளது. டிரம்ப் இந்த நடவடிக்கையில் தீவிரம் காட்டுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வரும் காலத்தில் இதுபோன்ற நடவடிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
அமெரிக்க அதிபராகப் பதவியேற்கும் டிரம்ப் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்குவதை ரத்து செய்யப் போவதாகக் கூறியிருந்தார்.

இது அங்குள்ள இந்தியர்கள் உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டினரையும் அச்சத்தில் ஆழ்த்தியிருந்தது. இதற்கிடையே இந்தாண்டு அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் குறித்த விவரங்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பகிர்ந்துள்ளது.
மத்திய அரசு: கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 519 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உரிய அங்கீகாரம் அல்லது அனுமதி இல்லாமல் அமெரிக்காவில் தங்கியதாகக் கூறி இவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மாலா ராய் இது தொடர்பாகக் கேள்வி எழுப்பி இருந்தார். அந்த கேள்விக்குப் பதிலளித்த வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் ஆசாத், "ஓராண்டில் மட்டும் மொத்தம் 519 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பான தரவுகளை அமெரிக்கா எங்களிடம் பகிர்ந்துள்ளது. அதன்படி கடந்தாண்டு நவம்பர் முதல் இந்த அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் 519 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் சிறப்பு மற்றும் வழக்கமான விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர்" என்றார்.
எதற்காக: நாடு கடத்தப்பட்ட இந்தியர்களில் எத்தனை ஆண்கள், எத்தனை பெண்கள் என்பது குறித்த விவரங்கள் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. மேலும், அவர்கள் எதற்காக அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர் என்று கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் ஆசாத், "அமெரிக்காவில் சட்டப்பூர்வமாகத் தங்க அனுமதி இல்லாதவர்களை அடையாளம் கண்டு அவர்களை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை நாடு கடத்தும் பணிகளை வழக்கமாக மேற்கொள்ளும். இந்த விவகாரத்தில் இந்தியா- அமெரிக்க இடையே உள்ள ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகச் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தவர்கள் நாடு கடத்தப்பட்டனர்" என்று பதிலளித்தார்.
பகிரவில்லை: அதேநேரம் எந்த சட்டம் அல்லது விதியின் அடிப்படையில் இந்தியர்கள் சட்டவிரோதமாகத் தங்கியவர்களை என்று அறிவிக்கப்பட்டது என்பது குறித்த விவகாரங்களை அமைச்சர் பகிரவில்லை. அதேபோல நாடு கடத்தப்பட்டவர்களில் எத்தனை பேர் ஆண்கள், எத்தனை பேர் பெண்கள் என்பது குறித்த விவரங்களையும் மத்திய அமைச்சர் பகிரவில்லை.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற டிரம்ப் அடுத்தாண்டு தொடக்கத்தில் அதிபராகப் பதவியேற்கிறார். இந்த முறை அவர் பிரச்சாரத்தின் போதே சட்டவிரோத குடியேற்றம் குறித்து காட்டமான கருத்துகளைத் தெரிவித்து இருந்தார். இதன் காரணமாகவே அமெரிக்கர்களுக்குக் கிடைப்பதில்லை என்றும் சட்டவிரோதமாக குடியேறுவோரைத் தடுத்துவிட்டால் அமெரிக்கர்களுக்கு அதிக வேலை கிடைக்கும் என்பது அவரது வாதம்.
இந்தியர்களுக்கு சிக்கல்? அடுத்தாண்டு ஜனவரி மாதம் அவர் அதிபராகப் பதவியேற்கும் நிலையில், அதன் பிறகு இதுபோன்ற நடவடிக்கையுள் மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்குவதை ரத்து செய்ய உள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், இவை எல்லாம் அங்குள்ள இந்தியர்களுக்குச் சிக்கல்களையே ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.
-
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு! -
"எனக்கு பிடிக்கலைனா குண்டு போடுவேன்.." அமைதி ஒப்பந்தம் வந்த பிறகும்.. விடாமல் மிரட்டும் டிரம்ப் -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
தோற்றது ஈரான் இல்லை! டிரம்ப் தான்.. ரூ.28 லட்சம் கோடியை தாரை வார்க்கும் அமெரிக்கா.. பின்னணி -
ஒட்டுமொத்த இணையமும் முடங்கும்.. ஆட்டம் காட்டும் டெலிகிராம்.. தடைக்கு பிறகும் இயங்குவது எப்படி -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? -
ஈரானை நம்புவது ஆபத்து.. டிரம்ப் டீமிற்குள்ளேயே வந்த எதிர்ப்பு.. "அவரே" சொல்லிட்டாராம்! பதற்றம் -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி












Click it and Unblock the Notifications