'சூப்பர்'.. புகை பழக்கத்தை அடியோடு ஒழித்து கட்ட புதிய திட்டம் கொண்டு வந்த நாடு.. அடடே!
வெலிங்டன்: 'புகை உயிருக்கு பகை' என்று தொடர்ந்து எச்சரிக்கை, விழிப்புணர்வு செய்து வந்த போதிலும் சிகரெட், புகையிலை பிடிப்பது என்பது உலகம் முழுவதும் பேஷனாகி விட்டது. இந்த புகை பழக்கம் காரணமாக தினமும் பல்லாயிரகனக்கானோர் உயிரிழந்து வருகின்றனர்.
நியூசிலாந்து நாட்டிலும் அதிக அளவு புகை பழக்கம் காரணமாக பலர் தொடர்ந்து பலியாகி வருகின்றனர். எவ்வளவோ விழிப்புணர்வு செய்தும் அவர்கள் திருந்துவதாக தெரியவில்லை. இந்த நிலையில் நாட்டில் புகைபிடிக்கும் பழக்கத்தை அடியோடு ஒழித்து கட்ட நியூசிலாந்து முடிவு செய்துள்ளது.

புகையில்லா செயல் திட்டம்
இதற்காக Smokefree Aotearoa 2025 என்ற செயல் திட்டதை நியயூசிலாந்து கொண்டு வந்துள்ளது. புகையில்லா செயல் திட்டம் என்று அழைக்கப்படும் இந்த திட்டத்தை அந்த நாடு இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சுகாதார அமைச்சர் டாக்டர் ஆயிஷா வெரால் கூறியதாவது:- புகைபிடித்தல் நியூசிலாந்தில் பெரும்பாலான மரணத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது. நான்கில் ஒருவருக்கு புற்றுநோய் ஏற்பட்ட காரணமாக அமைந்துள்ளது.

4,500 முதல் 5,000 பேர் உயிரிழக்கின்றனர்
குறிப்பாக மாவோரி, பசிபிக் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட சமூகங்களில் புகைபிடித்தல் தொடர்பான தீங்கு அதிகமாக உள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4,500 முதல் 5,000 பேர் வரை உயிரிழக்கிறார்கள், ஒவ்வொரு நாளும் சுமார் 12 முதல் 13 பேர் புகைபிடிப்பதால் இறக்கின்றனர். எனவே அடுத்த தலைமுறையினரிடையே புகைப்பிடிப்பதைக் குறைக்கும் முயற்சியில் புகையில்லா செயல் திட்டம் கொண்டு வரப்படுகிறது என்று ஆயிஷா வெரால் கூறியுள்ளார்.

முக்கிய கொள்கைகள்
2025-ம் ஆண்டுக்குள் நாட்டில் முழுமையாக புகைக்கு தடை விதிக்கும் நோக்கில் இந்த திட்டம் செயல்படும். அதாவது புகைபிடிப்பவர்கள் குறிப்பாக இளைஞர்கள் புகைபிடிப்பதை விட்டுவிட அவர்களிடம் விழிப்புணர்வு செய்து உதவுவது. புகையிலைப் பொருட்களில் நிகோடின் அளவைக் குறைத்தல், புகையிலை பொருள் விற்கும் கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது, புகையிலை பொருட்களின் தயாரிப்புகளை வாங்குவதை கடினமாக்குவது என்பது உள்ளிட்ட பல்வேறு கொள்கைகள் இந்த திட்டத்தில் உள்ளது.

குவியும் பாராட்டு
மேலும், புகைபிடித்த புகையிலை பொருட்களை ஒரு குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு விற்பது அல்லது வழங்குவது குற்றமாக கருதப்படுவதும் இந்த திட்டத்தின் கொள்கைகளில் ஒன்று. மேற்கண்ட இந்த கொள்கைகள் மூலம் 2025-க்குள் சுமார் 80% அளவுக்கு புகையிலை பழக்கத்தை ஒழித்து விடலாம் என்று டாக்டர் ஆயிஷா வெரால் கூறியுள்ளார். நாட்டின் பொது சுகாதார அமைப்புகள் அரசின் இந்த நடவடிக்கையை பாராட்டியுள்ளன.












Click it and Unblock the Notifications