ஒட்டுத்துணி இருக்க கூடாது.. 11 நாள் நிர்வாணம்! ரூ.43 லட்சம்! சொகுசு கப்பலில் பயணம்.. ஆனால் ஒரு கண்டிஷன்!
வாஷிங்டன்: உடம்பில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் 11 நாட்கள் கடலில் உல்லாசமாகச் (Nude Cruise Holidays) சுற்றிப் பார்ப்பதற்கான வாய்ப்பை அமெரிக்கா சேர்ந்த ஒரு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த Bare Necessities என்ற நிறுவனம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே ஒரு முறை இதே நிறுவனம் இந்த அறிவிப்பினை வெளியிட்டிருந்தது. இதில் உல்லாச பயணம் செய்த பயணிகள், தங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக இந்த பயணம் அமைந்ததாக குறிப்பிட்டிருந்தனர்.
உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் 11 நாட்கள் நிர்வாணமாக கப்பலில் சொகுசு பயணம் செய்யலாம் என்ற அறிவிப்புடன் அமெரிக்காவை சேர்ந்த ஒரு பயண நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த Bare Necessities என்ற நிறுவனம்தான் இந்த வினோத கப்பல் பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது.

ரூ. 43 லட்சம் கட்டணம்
ஓய்வு நேரத்தில் எங்காவது ஜாலியாக சுற்றி வரலாம்.. ஒரே இடத்திற்கு போய் போய்.. போர் அடிக்கிறது என சலித்து போனவர்களுக்காகவே இப்படியான ஒரு விசித்திர பயண ஏற்பாட்டை அந்த நிறுவனம் செய்து இருப்பதாக சொல்லப்படுகிறது.
உடல் ரீதியாக நேர்மறையான சிந்தனைகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இத்தகைய பயண திட்டத்தை செய்து இருப்பதாக அந்த கப்பல் பயண நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பயணத்திற்கான கட்டணம் இந்திய மதிப்பில் ரூ.43 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க டாலருடன் கணக்கிட்டு பார்த்தால் இது மிகவும் குறைவான கட்டணமாகவே உள்ளது.
ஆடைகள் இல்லாத பயணம்
இப்படி ஒரு வினோத பயணத்தை ஏற்பாடு செய்தது பற்றி அந்த நிறுவனம் கூறியிருப்பதாவது:- "ஆடைகள் மீதான எதிர்பார்ப்புகளில் இருந்து விடுபடும் போது, பயணிகள் சௌகரியமாகவும், அதிக நம்பிக்கையுடனும், உண்மையானதாகவும் உணர்கிறார்கள்."
"ஆடைகள் இல்லாத பயணம்" என்றே சொன்னாலும் கூட அனைத்து இடங்களுக்கும் நிர்வாணமாக செல்ல முடியாது. டைனிங் ஹால் போன்ற இடங்களுக்கு செல்லும் போது உடை கட்டுப்பாடு அவசியம். அதே போல, கேப்டனின் வரவேற்பறை, கப்பலில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்கு செல்லும் போதும் உடை கட்டுப்பாடு கட்டாயம் ஆகும். அதேபோல, கப்பல் துறைமுகத்தில் நிற்கும் போது உடை அணிவது கட்டாயம்.
தவறாக நடந்து கொண்டால் இறக்கி விடப்படுவர்
மதிய உணவு நேரத்தில் தளர்வான உடைகளுக்கு அனுமதி கிடையாது. எனினும், பஃபெட் பகுதிகளில் ஆடை கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது. இந்த உல்லாச பயணம் என்பது உடலுறவு நோக்கத்திற்காக இல்லை எனவும் அந்த நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. அதேபோல, நீச்சல் குளம், நடன ஹால்கள் உள்ளிட்டவற்றில் புகைப்படம் எடுக்கவும் அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறான தொடுதல், தவறாக நடந்து கொள்ளுதல் போன்றவற்றில் ஈடுபட்டால், அடுத்த துறைமுகத்திலேயே பயணிகள் இறக்கி விடப்படுவார்கள் எனவும், பயணக்கட்டணமும் திருப்பி தரப்படாது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம்
கடந்த பிப்ரவரி மாதமும் இதே போன்ற சொகுசு கப்பலில் பயணத்தை ஏற்பாடு செய்தது. 11 நாள் இந்த பயணத்தில், கரிபியன் தீவுகளுக்கு கப்பல் சென்றது. ஆயிரக்கணக்கான பயணிகள் இந்தக் கப்பலில் ஆர்வத்துடன் பயணம் செய்தனர். இந்தக் கப்பலில் பயணம் செய்த பயணிகள் தங்கள் பயண அனுபவத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தனர்.
தங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக இந்த பயணம் அமைந்ததாக பலரும் குறிப்பிட்டிருந்தனர். கடந்த 2023 ஆம் ஆண்டு இந்த கப்பலில் பயணம் செய்த லண்டனை சேர்ந்த ஹெலன் பெரிமன் என்ற 47 வயது நபர் கூறுகையில், ""பயணம், வாழ்க்கை மீதான எனது பார்வையையே மாற்றிவிட்டது.
நவம்பர் மாதம் 9ஆம் தேதி
எனது உடல் குறித்து எனக்கு தன்னம்பிக்கை இல்லாமல் இருந்தது. ஆனால், இந்த பயணத்திற்கு பிறகு அனைத்தும் மாறிவிட்டது. எனது உடல்தான் என்னை சுமக்கும் கப்பல் என்று உணர்ந்துவிட்டேன்... அதை பெருமையுடன் ஏற்றுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
Bare Necessities நிறுவனம் தனது அடுத்த பயணத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அக்டோபர் 26 ஆம் தேதியில் இருந்து நவம்பர் மாதம் 9ஆம் தேதி வரை பயணத்தை அறிவித்துள்ளது. புக்கிங் ஓபன் ஆகியுள்ள நிலையில், ஜெட் வேகத்தில் டிக்கெட்டுகள் புக்கிங் ஆகி வருகிறதாம்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications