Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு மாநில அரசுகள்தான் பொறுப்பு.. வி.கே.பால் தடாலடி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு மாநிலங்கள்தான் பொறுப்பு என்று, நிதி ஆயோக் உறுப்பினர் மற்றும், தேசிய தடுப்பூசி செலுத்துதல் குழு தலைவர் டாக்டர். வி.கே.பால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள SARS-CoV-2 உருமாறிய வைரசுக்கு எதிராகவும் ஃபைசர் நிறுவன தடுப்பூசி சிறப்பாக செயல்படுகிறது என்று ஃபைசர் நிறுவனம் இந்திய அதிகாரிகளுக்கு தெரிவித்த மறு நாளே வி.கே.பால் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

சர்வதேச தயாரிப்பாளர்கள்

சர்வதேச தயாரிப்பாளர்கள்

வி.கே.பால் இன்று வெளியிட்ட அறிக்கையில், "அனைத்து சர்வதேச தடுப்பூசி தயாரிப்பாளர்களிடமும் இந்தியாவில் வந்து அவற்றை தயாரிக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம். அதை மீண்டும் வலியுறுத்துகிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபைசர், ஜான்சன் & ஜான்சன், மாடர்னாவுடன் அரசு பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. இந்த 3 நிறுவன தடுப்பூசிகளும்தான், அமெரிக்க அரசால் அங்கீகரிக்கப்பட்டு அந்த நாட்டில் செலுத்தப்படுபவையாகும்.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

2020ம் ஆண்டு நடுப்பகுதியில் இருந்து அனைத்து முக்கிய சர்வதேச தடுப்பூசி உற்பத்தியாளர்களுடனும் மத்திய அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. ஃபைசர், ஜே அண்ட் ஜே & மாடர்னாவுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. இந்தியாவில் அவர்களின் தடுப்பூசிகளை வழங்குவதற்கும் / அல்லது தயாரிப்பதற்கும் அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும்.

மாநிலங்கள் பொறுப்பு

மாநிலங்கள் பொறுப்பு

ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில், தடுப்பூசிகள் நல்லபடியாக செலுத்தப்பட்டன. ஆனால் மே மாதம் அப்படி இல்லை. மத்திய அரசு தன்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்துள்ளது. தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு நிதி ஒதுக்கியுள்ளது, மருந்துகளை உற்பத்தி செய்வதில் வேகம் காட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, வெளிநாட்டு தடுப்பூசிகளை வாங்க முயற்சி செய்கிறோம். மத்திய அரசால் வாங்கப்பட்ட தடுப்பூசி மக்களுக்கு இலவசமாக மாநிலங்கள் வழியாக முழுமையாக வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் மாநிலங்களுக்கும் தெரியும். எந்தெந்த மாநிலங்களில் மருத்துவ கட்டமைப்பு நன்றாக இல்லையோ, சுகாதார ஊழியர்கள் அடிமட்ட அளவில் இல்லையோ, அங்கு கூட தடுப்பூசி பணிகளை தீவிரப்படுத்த முயற்சிகள் நடக்கின்றன. மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது. சுகாதாரம் என்பது மாநில சப்ஜெக்ட். ஆனால் உலகளாவிய டெண்டர் விட்டு உடனடியாக தடுப்பூசிகளை வாங்க முடியாது. நடைமுறைச் சிக்கல் உள்ளது. எனவே தடுப்பூசி தட்டுப்பாடுக்கு மாநிலங்கள்தான் பொறுப்பு.

அலமாரி பொருள் அல்ல

அலமாரி பொருள் அல்ல

இருப்பினும், அவர்களின் தடுப்பூசிகள் இலவச விநியோக திட்டத்தின்கீழ் கிடைக்காது. சர்வதேச அளவில் தடுப்பூசிகளை வாங்குவது 'அலமாரியில் இருந்து' பொருட்களை எடுப்பதற்கு ஈடானது அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பாரத் பயோடெக் வழங்கும் கோவாக்சின் உற்பத்தி மாதத்திற்கு 1 கோடிக்கு கீழ் இருந்து அக்டோபருக்குள் மாதத்திற்கு 10 கோடியாக உயர்த்தப்படும். இவ்வாறு வி.கே.பால் கூறியுள்ளார்.

மூன்று தடுப்பூசிகள்

மூன்று தடுப்பூசிகள்

இந்தியா தற்போது சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் மற்றும் ரஷ்யா தயாரித்த ஸ்பூட்னிக் வி ஆகியவற்றை பயன்படுத்துகிறது. இதில் முதல் இரு மருந்துகள் என்றால், அரசு சார்பில் இலவசமாக தரப்படுகிறது. ரஷ்ய தடுப்பூசியை பணம் செலுத்தி போட்டுக் கொள்ளலாம்.

அமைச்சர் ஜெய்சங்கர் பயணம்

அமைச்சர் ஜெய்சங்கர் பயணம்

அதேநேரம், நாட்டில் தேவைப்படுவோருக்கு தடுப்பூசி கிடைக்கவில்லை என்பது பரவலான குற்றச்சாட்டாக உள்ளது. இந்த நிலையில் உலகிலேயே அதிகப்படியான செயல்திறன் கொண்டதாக கருதப்படும் ஃபைசர் தடுப்பூசியை இந்தியா கொண்டுவர முயற்சி நடக்கிறது. அமெரிக்கா சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதற்கான முயற்சிகளை செய்து வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+