வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உதறி தள்ளிய மோடி.. அன்னைக்கு அப்படி சொன்னாரே.. இப்போ என்னாச்சு?: டைம் பத்திரிகை

தடுப்பூசி திட்டத்தை மோடி சரியாக கையாளவில்லை என்ற விமர்சனம் எழுகிறது

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: "என்னமோ பெரிய தடுப்பூசி திட்டத்தையே தன் நாட்டில் செயல்படுத்த போவதாக கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி சொன்னாரே, இப்போ என்ன ஆச்சு? சொந்த நாட்டு மக்களையே கைவிட்டுட்டாரே" என்று டைம்ஸ் பத்திரிகை காரசாரமாக விமர்சித்துள்ளது.

2வது அலை வரப்போகிறது என்று கடந்த டிசம்பர் மாதமே விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தனர்.. அந்த 2வது அலை முதல் அலையை போல கிடையாது, அது பன்மடங்கு வீரியமிக்கது, வேகமாக பரவக்கூடியது என்றும் எச்சரித்திருந்தனர்.

ஆனாலும், இதை மத்திய அரசு அலட்சியப்படுத்திவிட்டதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தபடியே இருக்கிறது.. அதுமட்டுமல்லாமல், தொற்று நம் நாட்டை விட்டு இன்னும் போகவில்லை என்று தெரிந்தும்கூட, இங்கிருக்கும் ஆக்சிஜனை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்துவிட்டது மோடி அரசு என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

 மோடி அரசு

மோடி அரசு

இதை பல நாளிதழ்கள் பகிரங்கமாகவே புகார் சொல்லி செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவின் டைம்ஸ் என்ற பத்திரிகையும், மோடியை குறை சொல்லி உள்ளது.. கடந்த ஆகஸ்ட் மாதம், மிகப்பெரிய தடுப்பூசியை திட்டத்தை இந்தியாவில் செயல்படுத்த போவதாக அறிவித்தாரே பிரதமர் மோடி, இப்ப என்னாச்சு? சொந்த நாட்டையே கைவிட்டுவிட்டாரே என்று விமர்சித்துள்ளது.

 தடுப்பூசி

தடுப்பூசி

அந்த பத்திரிகையில் மேலும் சொல்லப்பட்டுள்ளதாவது: "உலகிற்கே தடுப்பூசி உற்பத்தி கேந்திரமாக விளங்கிய இந்தியா, இப்போது அமெரிக்காவில் இருந்து தடுப்பூசியை இறக்குமதி செய்ய போராடி வருகிறது.. அமெரிக்கா, கனடா, உட்பட பல ஐரோப்பிய நாடுகள் கடந்த நவம்பர் மாதத்திலேயே அதிகளவிலான தடுப்பூசிகளை கொள்முதல் செய்யும் நடவடிக்கையில் இறங்கின.

 திட்டம்

திட்டம்

ஆனால், மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவில் இருந்தும், உற்பத்தியை அதிகரிப்பதற்கான முதலீட்டை மோடி அரசு வழங்கவில்லை.. மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த போவதாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.. ஆனால் இப்போது வரை இந்திய மக்கள் தொகையில் 3.1 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.. 2வது அலை தாக்கத்தால் தடுப்பூசி ஏற்றுமதியை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது... இதன் காரணமாக பல ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி கிடைக்காத நிலையும் ஏற்பட்டிருக்கிறது.

ஆர்டர்

ஆர்டர்

தடுப்பூசி திட்டம் ஆரம்பித்த பிறகும்கூட, மிக குறைந்த எண்ணிக்கையிலான மருந்துகளுக்கு மட்டுமே மத்திய அரசு ஆர்டர் கொடுத்துள்ளது.. இப்படி ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் மாநில அரசுகளே தடுப்பூசிகளை வாங்கி கொள்ளும்படி சொல்லி, தன்னுடைய கடமையை உதறிவிட்டது. தெற்கு ஆசிய நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியை தாண்டியுள்ளது...

 விமர்சனம்

விமர்சனம்

இதில் பெருமளவு எண்ணிக்கை இந்தியாவில் பதிவாகியது.. அதேபோல, தொற்று அதிகம் பாதித்த முதல் 10 நாடுகளில் தடுப்பூசி செலுத்துவதிலும் பின்தங்கி உள்ளதும் இந்தியாதான்.. இந்தியாவில் 89 சதவீதம் பேருக்கு இதுவரை முதல் டோஸ் தடுப்பூசி கூட கிடைக்கவில்லை" என்று மோடி அரசை அந்த நாளிதழ் கடுமையாக விமர்சித்துள்ளது.

English summary
PM Modi didnt buy enough covid 19 vaccine, Times Magazine
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X