எலான் மஸ்கின் குழந்தைகளுக்கு பரிசுகளை கொடுத்து கொஞ்சிய பிரதமர் மோடி! என்ன கிஃப்ட் தெரியுமா?
வாஷிங்டன்: ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்த போது அவரது 3 குழந்தைகளுக்கும் சில புத்தகங்களை பரிசாக கொடுத்தார். அவற்றை வாங்கியதும் குழந்தைகள் உற்சாகமாக படித்துக் கொண்டிருந்தனர்.
அமெரிக்காவுக்கு இரு நாட்கள் அரசு முறை பயணமாக டிரம்பின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி சென்றுள்ளார். மோடிக்கு அங்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இதையடுத்து அவர் அமெரிக்க உளவுத் துறை தலைவர் தொல்சி கப்பார்ட்டை சந்தித்த மோடி, அவரிடம் பயங்கரவாத எதிர்ப்பு, பாதுகாப்பு விஷயங்கள் குறித்து விவாதித்தார். மேலும் நேற்று இரவு இந்திய நேரப்படி, 10.15 மணிக்கு அதிபர் டிரம்பின் மாளிகையில் தங்கிய மோடி, DOGE தலைவர் (சிறந்த நிர்வாகத்துக்கான அரசு துறை) எலான் மஸ்க்கை சந்தித்து பேசினார்.
இவர்களது சந்திப்பு இது முதல் முறையல்ல. கடந்த 2015 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்ற மோடி, மஸ்க்கை சந்தித்து பேசியதுடன் அவருடைய டெஸ்லா நிறுவனத்தையும் சுற்றி பார்த்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு அதிபர் மாளிகைக்கு தனது மனைவி, 3 குழந்தைகளுடன் வந்த மஸ்க், மோடியுடன் சந்திப்பு நடத்தினர். அப்போது மோடிக்கு எலான் மஸ்க் நினைவுப் பரிசு வழங்கினார். அது போல் எலான் மஸ்கின் குழந்தைகளிடம் கொஞ்சி பேசிய மோடி, அவர்களுக்கு ரவீந்திரநாத் தாகூர் எழுதிய தி கிரசென்ட் மூன், ஆர்கே நாராயணின் புத்தகங்கள், பண்டிட் விஷ்ணு சர்மாவின் பஞ்சதந்திரம் புத்தகங்களை கொடுத்து மகிழ்ந்தார்.
எலான் மஸ்கும் மோடியும் பேசிக் கொண்டிருந்த போது அந்த குழந்தைகள் மூவரும் புத்தகங்களை படித்துக் கொண்டிருந்தனர். இதை மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நியூராலிங்கின் பிரெய்ன் டெக்னாலஜியின் நிர்வாக இயக்குநராக இருந்த ஷிவான் ஸில்லிஸை திருமணம் செய்த மஸ்கிற்கு இரட்டையர்கள் உள்ளனர். இதைத் தொடர்ந்து ஒரு மகனும் பிறந்தான்.
உலகிலேயே பணக்காரரான எலான் மஸ்கிற்கு 12 குழந்தைகளாம். அவருடைய முதல் முன்னாள் மனைவி ஜஸ்டின் மஸ்கிற்கு குழந்தை பிறந்த 10 ஆவது வாரத்தில் அந்த குழந்தை இறந்துவிட்டது. இதையடுத்து ஐவிஎஃப் மூலம் அவர்களுக்கு இரட்டையர்களும் அடுத்து ஒரே பிரசவத்தில் மூன்று (triplets) குழந்தைகளும் பிறந்தன. இதைத் தொடர்ந்து ஜஸ்டினை விவாகரத்து செய்தார் எலான் மஸ்க்.
இசையமைப்பாளர் கிரிம்ஸுடன் மஸ்கிற்கு மேலும் 3 குழந்தைகள் பிறந்தன. இதைத் தொடர்ந்து ஷிவானுடன் இரட்டையர்கள், ஒரு மகன் என மொத்தம் 12 குழந்தைகள் அவருக்கு உள்ளனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications