கத்தாரில் ஹேண்ட்பேக்கை பறிகொடுத்த பெண் பத்திரிக்கையாளர்.. போலீஸ் அளித்த பதிலை கேட்டு ஷாக்!
வாஷிங்டன்: கத்தாரில் பிபா உலக கோப்பை போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், அது தொடர்பாக செய்தியை வழங்கிய பெண் பத்திரிகையாளரின் ஹேண்ட் பேக் திருடு போய் உள்ளது. இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக போலீஸ் நிலையம் சென்ற அந்த பத்திரிகையாளருக்கு போலீஸ் அளித்த பதில் மேஎலும் ஷாக் கொடுத்துள்ளது.
உலக கோப்பை பிபா கால்பந்து தொடர் கத்தாரில் நடைபெற்று வருகிறது.
கத்தாரில் நடைபெற்று வரும் இந்த உலகக் கோப்பையை போட்டித்தொடரை காண கத்தாரில் கால்பந்து ரசிகர்கள் குவிந்துள்ளனர்.

ஹேண்ட் பேக் திருடு..
அதேபோல், கால்பந்து போட்டி தொடர்பாக செய்திகளை சேகரிக்கவும் வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் பலரும் கத்தாரை நோக்கி படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் அர்ஜெண்டினாவை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் நேரலையில் செய்திகளை வழங்கிக் கொண்டு இருந்த போது தனது ஹேண்ட் பேக் திருடு போய் விட்டதாக புகார் அளித்துள்ளார்.

வியக்க வைத்த போலீசின் பதில்
அர்ஜெண்டினாவை சேர்ந்த டொமினிக் மெட்ஜெர் என்ற பத்திரிகையாளர் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால், கத்தார் போலீசார் அளித்த பதில் தன்னை வியக்க வைத்ததாக டொமினிக் மெட்ஜெர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டொமினிக் மெட்ஜெர் கூறுகையில், "நாN போலீஸ் நிலையத்திற்கு சென்றேன். கலாச்சார வேறுபாடு அப்போதே தொடங்கி விட்டது. அங்கு இருந்த போலீஸ் என்னிடம் கூறுகையில், "எங்களிடம் ஹைடெக் கேமரா உள்ளது. அனைத்து இடங்களிலும் இந்த கேமரா இருக்கிறது.

என்ன தண்டனை கொடுக்கனும்..
எளிதில் திருடனை கண்டுபிடித்து விடுவோம். திருடனை கண்டுபிடித்தவுடன் எந்த மாதிரியான நீதி வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? என்று கேட்டுள்ளனர். இதனால், சற்று திகைத்த மெட்ஜெர் கொஞ்சம் விளக்கமாக கூறுங்கள் என்று கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த போலீஸ் அதிகாரி, "உங்களுக்கு எந்த மாதிரியான நீதி கிடைக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? திருடிய நபருக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும்?

நாடு கடத்தப்பட வேண்டுமா?
5 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்க வேண்டுமா? அல்லது நாடு கடத்தப்பட வேண்டுமா? என்று கேட்டுள்ளார். என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை போலீசாரே கேட்டதை பார்த்து திகைத்து போன மெட்ஜெர், தொலைந்து போன பொருட்களை மட்டும் மீட்டு கொடுத்தால் போதும்? என்று சொல்லியிருக்கிறார். போலீஸ் நிலையத்தில் தனக்கு கிடைத்த இந்த அனுபவத்தை தொலைக்காட்சியில் மெட்ஜெர் பகிர்ந்து இருக்கிறார்.

நேரலையில் நான் செய்தி வழங்கிய போது
அப்போது மெட்ஜெர் கூறுகையில், "எனது பை மட்டும் திருடுபோனது. நேரலையில் நான் செய்தி வழங்கிய போது இது நடைபெற்று விட்டது. புகாரை பதிவு செய்ய போலீசார் என்னை இங்கு அனுப்பினர். பையில் இருந்த ஆவணங்களும் கார்டுகள் குறித்து மட்டுமே நான் கவலைப்பட்டேன். பேக்கில் இருந்த பிற பொருட்கள் பற்றி எனக்கு கவலை இல்லை. எனவே, என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று பார்ப்போம்" என்று தெரிவித்துள்ளார்.

அனுபவம் இல்லாதவர்கள் பாதுகாப்பு பணியில்
உலக கோப்பை போட்டியை நடத்தி வரும் கத்தாரில் பாதுகாப்பு விவகாரம் அதிகம் பேசப்படும் ஒன்றாக உள்ளது. உலக கோப்பை போட்டிகளுக்கான கத்தார் போட்டி பாதுகாப்பு குழு நூற்றுக்கணக்கான பணியாளர்களை வேலையில் அமர்த்தியுள்ளது. இதில் பெரும்பாலானோர் போதிய அனுபவம் இல்லாதவர்கள் என்றும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications