அதிகரிக்கும் பாதிப்பு.. அமெரிக்காவில் ஒரே நாளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா நோய் தொற்று அதிகரித்தபடி உள்ளது. புதிதாக 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய தகவல்படி, அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்தைக் கடந்துள்ளது. புதிதாக 1 லட்சத்து 5 ஆயிரத்து 294 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 460 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அந்நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 40 ஆயிரத்து 108 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 9 ஆயிரத்து 910 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்க தடுப்பூசி நிலவரம்
வியாழக்கிழமை, அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சிடிசி) வெளியிட்ட தகவல்படி, 216,012,495 பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் கோவிட் -19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். இது முழு அமெரிக்க மக்கள்தொகையில் 65.1 சதவிகிதம் ஆகும். முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் 186,385,751 ஆக இருந்தனர், மொத்தத்தில் இது 56.1 சதவிகிதம் ஆகும். 2 தடுப்பூசிகளை போட்ட பிறகு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை 6,372,007 ஆகும். இது 3.4 சதவீதம்.

குழந்தைகளுக்கு தடுப்பூசி
இதனிடையே, 5 முதல் 11 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான கோவிட் -19 தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (எஃப்.டி.ஏ) அவசர பயன்பாட்டு அங்கீகாரத்தை (EUA) கோரியுள்ளதாக பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் எச்சரிக்கை
கொரோனா வைரஸின் மூன்றாவது அலை அச்சுறுத்தலுக்கு மத்தியில், பண்டிகை மற்றும் திருமண காலங்களில் மக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டும் என்று, இந்தியாவில் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தசரா, தீபாவளி, துர்கா பூஜை, மிலாது நபி போன்ற பண்டிகைகளின் போது கொரோனா பரவும் அபாயம் உள்ளது என்று எச்சரித்துள்ளார் சுகாதாரத் துறை அமைச்சக இணைச் செயலாளர் லாவ் அகர்வால்.

கூட்டம் போட வேண்டாம்
அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்கள் கிறிஸ்துமஸ் மற்றும் திருமண நிகழ்ச்சிகளின்போது கொரோனா பரவ விடாமல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தற்போதைய நிலைமையை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. கொரோனா பரவுவதை தவிர்க்க மக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டும் என்று கூறஇய அவர், தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும், நாடு முழுவதும் 20,000த்திற்கும் மேற்பட்ட கேஸ்கள் பதிவாகியுள்ளதால் தொற்றுநோயின் இரண்டாவது அலை முடிவடையவில்லை என்று அரசு கூறியுள்ளது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications