டிரம்ப்பிற்கு சுள்ளுனு ஏறிய கோபம்! இஸ்ரேல் பிரதமர் சொன்ன வார்த்தையில் பரபரப்பு! என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான மோதல் முடிவுக்கு வருவது போன்ற சூழல் உருவாகியுள்ளது. இது குறித்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை அதிபர் டிரம்ப் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது நெதன்யாகு சொன்னதைக் கேட்டு கோபத்தின் உச்சிக்கே போன டிரம்ப், கெட்ட வார்த்தையில் திட்டியுள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வருகிறது. இதனால் காசாவில் உள்ள அப்பாவி மக்களே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸின் முக்கிய தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். இதனால் காசாவில் இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்த வேண்டும் எனச் சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகிறார்கள்.

Trump Fiery Rebuke to Netanyahu Why So Negative after Hamas accepting Gaza Peace Plan Victory

20 அம்ச திட்டம்

இருப்பினும், ஹமாஸை முழுமையாக அழிக்கும் வரை மோதலை முடிவுக்குக் கொண்டு வர மாட்டோம் என்றே இஸ்ரேல் தொடர்ந்து கூறி வந்தது. இந்தச் சூழலில் தான் இடையில் புகுந்த டிரம்ப், இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதாகச் சொல்லி சில நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தார். இதற்காக அவர் 20 அம்ச திட்டத்தையும் வெளியிட்டார். மேலும், தனது திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அவர் வலியுறுத்தியுள்ளார்.

டிரம்ப்- நெதன்யாகு

இதனால் நெதன்யாகுவும் டிரம்ப் பிளானை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். ஆனால், இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் இப்போது நெதன்யாகுவுக்கு முழுமையான பலம் இல்லை. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடனே நெதன்யாகு பிரதமர் பதவியில் இருக்கிறார். டிரம்ப் திட்டத்தை ஏற்று, காசாவில் போரை நிறுத்தினால் அரசுக்கு வழங்கும் ஆதரவை வாபஸ் பெறுவோம் எனத் தீவிர வலதுசாரி கட்சிகள் மிரட்டுவதால், நெதன்யாகுவுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில் தான் டிரம்ப்- நெதன்யாகு இடையேயான உரையாடல் கவனம் பெற்றுள்ளது.

அதாவது டிரம்ப்பின் 20 அம்ச அமைதி ஒப்பந்தத்தில் சில பாயிண்டுகளை ஏற்பதாக ஹமாஸ் அறிவித்தது. இது தொடர்பாகத் தெரிவிக்க இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை டிரம்ப் தொடர்பு கொண்டுள்ளார். ஹமாஸிடம் இருந்து இதுபோன்ற பதில் வந்துள்ளதாகக் கூறியுள்ளார். இதைக் கேட்ட நெதன்யாகு, இதில் கொண்டாடும் அளவிற்கு எதுவும் இல்லை என்று டிரம்ப்பிடம் கூறியுள்ளார்.

டிரம்ப் கடும் கோபம்

நெதன்யாகு இப்படிச் சொன்னதைக் கேட்டு டிரம்ப் டென்ஷனாகிவிட்டாராம். அவர் மேலும், "நீ ஏன் எப்போதுமே நெகடிவாக இருக்கிறாய் என்று எனக்குத் தெரியவில்லை. இது ஒரு வெற்றி. இதை ஏற்று கொள்" காட்டமாகச் சொல்லியுள்ளார். மேலும், நெதன்யாகு சொன்னதைக் கேட்டு கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் டிரம்ப் கெட்ட வார்த்தையும் பயன்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது.

இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் ஆதரவு நிச்சயம் தேவை. அமெரிக்காவின் ஆதரவு இல்லாமல் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் சூழலை இஸ்ரேலால் தனித்து சமாளிக்க முடியாது. இதனால் டிரம்ப் சொல்வதையே இஸ்ரேல் கேட்கும் எனத் தெரிகிறது. இது தொடர்பாக பிறகு டிரம்ப் கூறுகையில், "இது நெதன்யாகுவுக்கு ஒரு வெற்றி வாய்ப்பு. அவர் இதற்கு ஒப்புக்கொள்ள வேண்டும். அவருக்கு வேறு வழியில்லை" என்று கூறினார்.

பின்னணி

இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்தி, காசாவிலிருந்து படைகளை விலக்கிக் கொண்டால், அனைத்துப் பணய கைதிகளையும் விடுவிக்கத் தயாராக இருப்பதாக ஹமாஸ் கூறியது. ஆனால், இது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தது. டிரம்ப் திட்டத்தை ஹமாஸ் ஏற்கவில்லை என்பதையே இதுபோல சொல்வதாக இஸ்ரேல் பிரதமர் கருதுகிறார். இதனால் தான் டிரம்ப் இதைச் சொன்னபோது, நெதன்யாகு மகிழ்ச்சி அடையவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+