ஈசியா முடிக்கலாம்னு நினைச்சேன்! ரஷ்யா - உக்ரைன் போர் பற்றி.. இங்கிலாந்தில் புலம்பி தள்ளிய டிரம்ப்
வாஷிங்டன்: உக்ரைன் ரஷ்யா இடையே ஏற்பட்டுள்ள போர் முடிந்தபாடில்லை. எப்படியாவது உக்ரைன் ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என்று கூறியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆனால் பலன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தான் லண்டனில் பேசிய டிரம்ப், ரஷ்யா - உக்ரைன் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று நம்பினேன். ஆனால் இது அப்படி இல்லை. புதின் என்னை தோல்வி அடைய வைத்துவிட்டார்" என்று கூறினார்.
உக்ரைன் போரை நிறுத்தும் விவகாரத்தில் ரஷ்ய அதிபர் புதின் தன்னை வீழ்த்திவிட்டதாக டிரம்ப் கூறியுள்ளார். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த 2022 ஆம் ஆண்டு போர் ஏற்பட்டது. உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்தது.

உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளிப்பதால் ரஷ்யாவை எதிர்த்து சண்டையிட்டு வருகிறது. இதனால், உக்ரைனை எளிதில் வீழ்த்திவிடலாம் என்ற ரஷ்யாவின் கனவில் மண் விழுந்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சண்டை நீடித்து வரும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளும் பல லட்சம் கோடி அளவுக்கு வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக பதவியேற்றதும் இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என பேசிய டிரம்பால் ரஷ்யா உக்ரைன் போரை நிறுத்த முடியவில்லை. அண்மையில் அலாஸ்காவில் புதினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பை தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியையும் சந்தித்து பேசினார். போர் நிறுத்தம் தொடர்பாக ஆலோசனை நடத்தினாலும், டிரம்ப் நினைத்தது போல இந்த சண்டையை முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை.
இரு நாடுகளும் பல்வேறு டிமாண்ட்களை வைப்பதால் போரானது நீடித்து வருகிறது. இந்த நிலையில், இங்கிலாந்து சென்றுள்ள டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது டிரம்ப் கூறுகையில் ரஷ்யா - உக்ரைன் போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று நம்பினேன். ஆனால் இது அப்படி இல்லை.
புதின் என்னை தோல்வி அடைய வைத்துவிட்டார். எனினும், அதை நான் முடித்தே தீருவேன். இஸ்ரேல் - காசா மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்பது உங்களுக்கு தெரியும். இஸ்ரேல் - காசா பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவோம். அதை போலவே, ரஷ்யா - உக்ரைன் மோதலும் முடிவுக்கு கொண்டு வரப்படும். என்று பேசினார்.












Click it and Unblock the Notifications