தொக்காக சிக்கும் டிரம்ப்! மொத்த குடும்பத்தின் மீதும் நடக்க உள்ள விசாரணை! அமெரிக்காவில் அதிரடி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடைபெற்ற இடைத்தேர்தலில், டிரம்பின் குடியரசுக் கட்சி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்திருக்கிறது. தற்போது எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் கை ஓங்கியிருப்பதால்.. விரைவில் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்திற்கு எதிரான 4 வழக்குகளின் விசாரணை தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபராக ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார் எனில்.. அவர் சில விஷயங்களை செய்யக்கூடாது. கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அதையெல்லாம் மீறி டிரம்ப் காசு பார்த்திருக்கிறார் என்பதுதான் முக்கியமான குற்றச்சாட்டு.

Trump

டிரம்புக்கு எதிரான விசாரணை

அதாவது டிரம்ப் இப்போது அதிபராக இருக்கிறார். இப்படி அதிபராக இருக்கும் போது.. அவருக்கு சொந்தமான ஹோட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் வெளிநாட்டு அரசாங்க தூதராக அதிகாரிகள் மற்றும் பெரிய, பெரிய பணக்காரர்கள் தங்கி பெருமளவில் செலவு செய்திருக்கிறார்கள். அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின்படி.. பதவியில் இருக்கும் அதிபர், வெளிநாடுகளில் இருந்து எந்த ஒரு நிதி ஆதாயமும் பெறக்கூடாது. ஆனால், தனது பதவியை பயன்படுத்தி.. தனது ஹோட்டல் வணிகங்களை வளர்த்துக் கொண்டார் டிரம்ப் என்பது குற்றச்சாட்டாக இருந்தது. இப்போது இந்த குற்றச்சாட்டுகளை, ஜனநாயக கட்சி தூசி தட்டி விசாரணைக்கு உத்தரவிட வாய்ப்புள்ளது.

இரண்டாவது பிரச்சனை

அதேபோல, டிரம்பின் குடும்ப நிறுவனமான.. 'டிரம்ப் ஆர்கனைசேஷன்' தனது சொத்துக்களின் மதிப்பை தவறாக காட்டி, வங்கிகளில் பெரிய அளவுக்கு கடன் பெற்று இருக்கிறது. மட்டுமல்ல வரி ஏறப்பிலும் ஈடுபட்டிருக்கிறது என்கிற குற்றச்சாட்டு நீண்ட காலமாக டிரம்ப் குடும்பத்திற்கு எதிராக இருந்து வருகிறது. கடன்களை வாங்கும் போது.. சொத்து மதிப்பை விட அதிகமாக காட்டியும், வரியை கட்டும்போது.. சொத்து மதிப்பை விட மிக குறைவாகவும் காட்டியும் ஏமாற்றியதாக நியூயார்க் நீதிமன்றங்களில் ஏற்கனவே வழக்குகள் உள்ளன. இதை நாடாளுமன்ற குழுக்கள் மீண்டும் விரிவாக விசாரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

பவருக்கு வந்ததால் சிக்கல்

மூன்றாவது பிரச்சனை, வெளிநாட்டு அரசாங்கங்களுடன் நிதி தொடர்பு சம்பந்தப்பட்டதாகும். சவுதி அரேபியா, ரஷ்ய, சீனா போன்ற நாடுகளுடன் ட்ரம்ப்பின் குடும்பத்தினருக்கு.. குறிப்பாக அவரது மருமகன் மற்றும் மகன்களுக்கு உள்ள ரகசிய நிதி மற்றும் வணிக தொடர்புகள் சர்ச்சையாக வெடித்திருக்கிறது. டிரம்ப் அதிபராக இருந்த கடந்தக காலங்களில் எடுத்த சில வெளியுறவுத்துறை கொள்கை முடிவுகள், அவரது குடும்பத்தின் வெளிநாட்டு வணிகர் நலன்களுக்காக எடுக்கப்பட்டவை என்கிற சந்தேகம் எதிர்க்கட்சிகளால் நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வந்திருக்கிறது. தற்போது எதிர்க்கட்சிகள் பவருக்கு வந்திருப்பதால் இந்த குற்றச்சாட்டின் மீதும் விசாரணையை நடத்த உத்தரவிட வாய்ப்புள்ளது.

தகுதி இல்லாதவருக்கு அரசு பணி

இது போக, நான்காவது ஒரு குற்றச்சாட்டும் ட்ரம்ப் குடும்பத்தின் மீது இருக்கிறது. தகுந்த அரசு பணி அனுபவம் இல்லாத தனது குடும்ப உறுப்பினர்களை.. உதாரணத்திற்கு மகள் மற்றும் மருமகன் ஆகியோரை வெள்ளை மாளிகையின், மிக உயரிய அதிகாரமிக்க ஆலோசகர் பதவிகளில் நியமித்து.. அரசு நிதியையும் அதிகாரத்தையும் பயன்படுத்த ட்ரம்ப் அனுமதித்தார் என்பது குற்றச்சாட்டாகும். இந்த குற்றச்சாட்டு குறித்தும், எதிர்க்கட்சிகள் விசாரணை ஆணையத்தை அமைக்க வாய்ப்பு உள்ளது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

மொத்தத்தில்.. டிரம்பின் வணிக நிறுவனங்கள், வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் அவரது குடும்பத்தினரின் நிதி பரிவர்த்தனைகள் குறித்து நாடாளுமன்ற குழுக்கள் மூலம் விரிவான விசாரணைகள் துவங்கப்பட வாய்ப்பு இருப்பதாக, அந்நாட்டு அரசியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இடைக்கால தேர்தலில், நாடாளுமன்றத்தில் இரு அவைகளையும் ஜனநாயக கட்சி கைப்பற்றியுள்ளதால்.. டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக இந்த விசாரணையை, ஜனநாயக கட்சி கொண்டு போக வாய்ப்பு இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+