வேகமாக காலியாகும் அமெரிக்க ஆயுதங்கள்! கையை பிசையும் டிரம்ப்! வெள்ளை மாளிகை போட்ட அதிரடி உத்தரவு
வாஷிங்டன்: அமெரிக்கா- இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து வருகிறது. இதில் அமெரிக்கா நேரடியாக ஈடுபட்டுள்ள நிலையில், இது சர்வதேச அளவில் கவனிக்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது. இதற்கிடையே அமெரிக்காவின் ஆயுத உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகளை டிரம்ப் திடீரென சந்திக்கவுள்ளார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
மத்திய கிழக்கில் இப்போது வரலாறு காணாத பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த வாரம் சனிக்கிழமை ஆரம்பித்த இந்த போர் 6வது நாளாக இன்றும் தொடர்கிறது. ஒரு பக்கம் அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து முக்கிய நகரங்களைக் குறிவைத்துத் தாக்கி வருகிறது. மற்றொரு புறம் ஈரானும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.

டிரம்ப் போட்ட உத்தரவு
இதற்கிடையே ஆயுதங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு டிரம்பிடம் இருந்து மிக முக்கிய உத்தரவுகள் பறந்துள்ளன. ஈரானில் போர் தொடரும் நிலையில், ஆயுத உற்பத்தியை அதிகரிக்குமாறு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதற்காக நாளைய தினம் அமெரிக்காவின் டாப் பாதுகாப்பு ஒப்பந்ததாரர் தலைமை நிர்வாகிகளை வெள்ளை மாளிகையில் வைத்து டிரம்ப் சந்திக்கிறார்.
அமெரிக்க ராணுவத்தின் ஆயுதக் கையிருப்புகளை நிரப்புவது, ஆயுத உற்பத்தியை விரைவுபடுத்துவது தொடர்பாக இச்சந்திப்பில் விவாதிக்கப்படும். லாக்ஹீட் மார்ட்டின், ரேதியான் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் அழைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேநேரம் அந்த நிறுவனங்களில் இருந்து யார் வந்து டிரம்ப்பை சந்திக்கிறார்கள் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
ஆயுதங்கள் தேவை
ஈரானில் போர் தொடங்கியது முதலே அமெரிக்கா தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது. இதனால் அமெரிக்காவின் ஆயுத கையிருப்புகள் குறையலாம் என சொல்லப்படும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
2022-ல் ரஷ்யா உக்ரைனை மோதல், இஸ்ரேல் காசா மோதல் எனப் பல மோதல்களுக்கு அமெரிக்கா பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள பீரங்கி அமைப்புகள், வெடிமருந்துகள், டாங்க் எதிர்ப்பு ஏவுகணைகளைப் பயன்படுத்தியுள்ளது. இப்போது நடக்கும் ஈரான் மோதலில், உக்ரைனுக்கு வழங்கப்பட்டதை விட நீண்ட தூர ஏவுகணைகள் தேவைப்பட்டன. இதனால் உற்பத்தியை விரைவாக அதிகரிக்க ஆயுத உற்பத்தியாளர்களுக்கு டிரம்ப் பிரஷர் போடுவார் எனத் தெரிகிறது.
டிரம்ப் பிரஷர்
தற்போது போர் சூழல் நிலவுவதால், பாதுகாப்பு ஒப்பந்ததாரர்களை லாபத்தை விட உற்பத்தியை அதிகரிப்பதில் முன்னுரிமை அளிக்குமாறு தொடர்ந்து டிரம்ப் பிரஷர் போட்டு வருகிறார். இந்தளவுக்கு பிரஷர் போட்ட பிறகும் உற்பத்தியை அதிகரிக்கத் தவறும் நிறுவனங்களின் கான்டிராக்ட் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது முதலில் எதிர்பார்த்த அளவுக்கு உற்பத்தியை அதிகரிக்காத நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படும். அவர்கள் நிலைமையைச் சரிசெய்ய எடுக்கப்படும் 15 நாள் செயல்திட்டம் குறித்து சமர்ப்பிப்பார்கள். அந்த திட்டங்கள் சரியாக இருந்தால் பிரச்சினை இல்லை. ஒருவேளை அது போதுமானதாக இல்லை என்றால் ஒப்பந்தங்களை ரத்து செய்வது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை அதிபர் மாளிகை எடுக்கும்!
எப்போது முடியும்?
அமெரிக்கா ஈரான் போரைப் பொறுத்தவரை அது இப்போது உடனடியாக முடியாது என்றே தெரிகிறது. ஈரான் தொடர்ந்து பதிலடி கொடுத்து வரும் சூழலில், சில வாரங்களாவது போர் தொடரும் எனச் சொல்லப்படுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் கூட போர் குறித்துப் பேசும்போது 4 வாரங்கள் வரை போர் தொடரலாம் என்றே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications