வேலையை காட்டும் டிரம்ப்! ஈரான் உடனான டீலிங்கில்.. திடீர் ட்விஸ்ட்! சீரியஸாகும் பஞ்சாயத்து!
வாஷிங்டன்: வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் பானையை போட்டு உடைத்த கதையாக டிரம்பின் செயல் இருக்கிறது. உலகமே எதிர்பார்த்த அமெரிக்கா-ஈரான் போர் நிறுத்தம், விரைவில் அமலாக இருக்கிறது. இந்த நேரத்தில், டிரம்ப் ஈரான் விஷயத்தில் எடுத்திருக்கும் முடிவு, மீண்டும் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கப் போகிறது என்று சொல்லி, அந்நாட்டின் மீது இஸ்ரேலுடன் சேர்ந்துக் கொண்டு தாக்குதல் நடத்தியிருந்தது அமெரிக்கா. நீங்க மூனு பேரும் என்னவாச்சும் பண்ணி தொலைங்க.. என்று உலகம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. ஆனால், இந்த போர் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு சப்ளையை பாதித்ததால், அதுவரை வேடிக்கை பார்த்த உலக நாடுகள், போர் வேண்டாம் என்று பேச தொடங்கின.

இப்படி பேசி, பேசி, ஒரு வழியாக டிரம்பை சமாதானம் செய்து, அமைதி ஒப்பந்தத்தை போடும் அளவுக்கு அமெரிக்காவுக்கு உலக நாடுகள் நெருக்கடி கொடுத்தன. விரைவில் இந்த அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது. அமைதி ஒப்பந்தத்தை பொறுத்தவரை.. ஈரான் தரப்பில் சிம்பிளான டிமாண்ட்தான் வைக்கப்பட்டிருக்கிறது. அதாவது வெளிநாடுகளில் உள்ள எங்கள் சொத்துக்களை, நிதியை அமெரிக்கா லாக் செய்து முடக்கியிருக்கிறது. அதை விடுவிக்க வேண்டும். அதேபோல ஈரான் கடல் பகுதியில் இருந்து அமெரிக்க போர்க்கப்பல்கள் வெளியேற வேண்டும் என்பதுதான் அந்த கோரிக்கை.
இந்த கோரிக்கைக்கு முதலில் சரி சரி என.. பூம் பூம் மாடு போல தலையை ஆட்டியிருந்த அமெரிக்கா, இப்போது வந்து இதற்கு மறுத்துள்ளது. NBC நியூஸ் ஊடகத்தின் 'மீட் தி பிரஸ்' நிகழ்ச்சிக்கான பேட்டியில் இது குறித்து பேசிய டிரம்ப், ஈரான் மீதான தடைகளை நீக்குவது மற்றும் முடக்கப்பட்ட பில்லியன் கணக்கான டாலர் சொத்துக்களை விடுவிப்பது போன்ற நடவடிக்கைகள் அனைத்தும் பேச்சுவார்த்தை முடிந்து இறுதி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகே பரிசீலிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
“எல்லாம் ஒப்பந்தத்திற்குப் பிறகுதான். அவர்கள் ஒழுங்காக நடந்து கொண்டு, நல்ல முறையில் செயல்பட்டால், நாங்கள் அதுகுறித்து பேசுவோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் ஈரான் தரப்பு டென்ஷன் ஆகியிருக்கிறது.
முதலில் நிதியை விடுவிப்பதாக சொல்லிவிட்டு, இப்போது வந்து அதெல்லாம் முடியாது என்று சொன்னால் எப்படி? மாத்தி மாத்தி இப்படியே பேசினா.. போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை ராஜா! என்று ஈரான் கூறியுள்ளது. இதனால் மீண்டும் போர் வெடிக்குமோ? இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை எகிறுமோ? சமையல் கேஸ் சிலிண்டர் கிடைக்க இன்னும் கூடுதல் நாட்கள் ஆகுமோ என்கிற அச்சம் எழுந்திருக்கிறது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications