வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கருக்கலைப்பு பெண்களின் உரிமைதான்.. 2 மசோதாக்கள் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்த நிலையில், கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கும் இரு மசோதாக்கள், பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.

கடந்த 1973 ஆம் ஆண்டு, கருக்கலைப்பு பெண்ணின் தனிப்பட்ட உரிமை என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்து. ஆனால், அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட 50 ஆண்டு காலத்திறகுப் பிறகு கருக்கலைப்பு உரிமை சட்டத்தை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்துள்ளது. 1973ஆம் ஆண்டில் ரோ மற்றும் வேட் இடையிலான வழக்கில், 'கருக்கலைப்பு என்பது பெண்ணின் தனிப்பட்ட உரிமை, அது அரசியலமைப்பு உரிமை' என்று தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், இப்போது, கருக்கலைப்பை வரைமுறைக்குட்பட்டு அனுமதிக்க மற்றும் தடை செய்ய, அந்நாட்டு மாகாணங்களை ஆளும் அரசுகளுக்கு இந்தத் தீர்ப்பு உரிமை வழங்கியது.

US house passes bills to protect Abortion facility Across Country

இந்த தீர்ப்பு குறித்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது அல்ல என்றார். இருப்பினும், மக்கள் அமைதி காக்க வேண்டும், வன்முறையில் ஈடுபட வேண்டாம். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வருத்தமளிப்பதாக விவரித்த பிடன், நாடு முழுவதும் உள்ள பெண்களின் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை தற்போது ஆபத்தில் இருப்பதாகவும் கூறினார். அமெரிக்க மக்களின் அரசியலமைப்பு உரிமையை திடீரென நீதிமன்றம் பறித்துள்ளது எனவும் கூறினார்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் சட்டங்களை 13 மாகாணங்கள் இயற்றியுள்ளன. மற்ற மாகாணங்கள் கருக்கலைப்புக்கு தடை விதித்தல் அல்லது கருக்கலைப்புக்கான விதிகளை கடுமையாக்கும் சட்டத்தை இயற்றவுள்ளதக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க பிரபலங்கள் பலரும் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தீர்ப்பை எதிர்த்து ஏராளமானோர் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக கருதுவதை காட்டுகிறது. இத்தீர்ப்பு லட்சக்கணக்கான பெண்களை பாதிக்கும் என அமெரிக்க பெண்கள் நல அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக.. பெண்கள் கருக்கலைப்பு செய்வதற்கு அனுமதி அளிக்கும் வகையில்.. சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. கருகலைப்பிற்கு அனுமதி அளிக்க பிரதிநிதிகள் சபையில் ஒப்புதல் அளித்த நிலையில், சென்ட் சபையில் மசோதா ஒப்புதல் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சென்ட் சபையில் ஆளுங்கட்சியான ஜனநாயக கட்சிக்கு பெரும்பான்மை இல்லை. மசோதாவை நிறைவேற்ற குடியரசுக் கட்சியின் 10 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் எதிரொலிக்கும் பாதிரியார் ஸ்டேன் சுவாமி மரணம்.. விசாரணை கோரி நாடாளுமன்றத்தில் தீர்மானம்அமெரிக்காவில் எதிரொலிக்கும் பாதிரியார் ஸ்டேன் சுவாமி மரணம்.. விசாரணை கோரி நாடாளுமன்றத்தில் தீர்மானம்

English summary
The US House of Representatives adopts 2 bills aimed at protecting access to abortion after the Supreme Court ruled that individual states can ban or restrict the procedure.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X