"கதை முடிந்தது.." ஈரான் மீது கொடூர தாக்குதல்.. அதிகாலை நேரத்தில் டிரம்ப் பகிர்ந்த வீடியோ.. பதற்றம்
வாஷிங்டன்: ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது அமெரிக்கா மிகப் பெரிய தாக்குதலை நடத்தியதாகவும் இதில் ஈரானின் பல ராணுவ தளபதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீதான தாக்குதல்களைக் கடந்த சில நாட்களாகவே அமெரிக்கா தீவிரப்படுத்தி வரும் சூழலில், இது மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
வளைகுடா மோதல் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்கிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானும் கூட அதற்குத் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தற்போதைய சூழலில் மோதல் முடிவுக்கு வருவது போலத் தெரியவில்லை. நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டே தான் போகிறது. இதற்கிடையே ஈரான் தாக்குதல் தொடர்பாக டிரம்ப் மேலும் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

மிக பெரிய தாக்குதல்
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் மிகப் பெரிய தாக்குதலை நடத்தியதாகவும் அதில் ஈரானின் ராணுவ தலைமை மற்றும் உயர் மட்ட தலைவர்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். டிரம்பின் இந்த கருத்துகள் மேற்கு ஆசிய மோதலில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஈரானில் நள்ளிரவு நேரத்தில் நடந்த தாக்குதல் தொடர்பான வீடியோவையும் டிரம்ப் பகிர்ந்துள்ளார். ஈரானின் பல உயர்மட்ட தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
டிரம்ப் அறிவிப்பு
ஈரானின் மின்சார உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதலை டிரம்ப் 10 நாட்கள் நிறுத்தி வைத்திருந்தார். இந்த காலக்கெடு நாளை ஏப்ரல் 6ம் தேதியுடன் முடியும் சூழலில், இந்த தாக்குதல் நடந்துள்ளது. அதேநேரம் இதில் யார் கொல்லப்பட்டனர் என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அதேநேரம் மத்திய கிழக்கில் தொடரும் மோதல் சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் பாதுகாப்பு தொடர்பாகக் கவலைகளை ஏற்படுத்தியுள்ளன.
இது தொடர்பாக டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல்ஸ் பக்கத்தில், "தெஹ்ரானில் மிகப் பெரிய தாக்குதலை நடத்தினோம். இதில் ஈரானை மோசமாகவும் முட்டாள்தனமாகவும் வழிநடத்திய பல ஈரான் ராணுவ தலைவர்கள் கொல்லப்பட்டனர்" என்று அவர் பதிவிட்டுள்ளார். இத்தோடு அவர் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில் விமானங்களின் சத்தம் மற்றும் தொடர் வெடிப்புகள் தெளிவாகக் கேட்கிறது.
தெளிவு இல்லை
இருப்பினும், எந்த இலக்குகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் யாரெல்லாம் உயிரிழந்தனர்.. எவ்வளவு ராணுவ தலைவர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறித்த தகவல்களை டிரம்ப் பகிரவில்லை. வெள்ளை மாளிகை தரப்பில் இருந்தும் இது தொடர்பாக எந்தவொரு விளக்கமும் தரப்படவில்லை. ஈரானும் தனது உயர்மட்டத் தளபதிகளின் மரணங்களை நேரடியாக உறுதிப்படுத்தவில்லை.. அதேநேரம் அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாட்டை அவர்கள் மாற்றிக் கொள்ளவில்லை.
வளைகுடா மோதல்
வளைகுடா மோதல் ஒரு மாதத்திற்கு மேலாக நீடிக்கும் சூழலில், கடந்த சில நாட்களாகவே அமெரிக்கா தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஈரானில் உள்ள ஆர்தேஷ் கூட்டுப் படைத் தலைமையகம் மற்றும் தெஹ்ரானையும் கராஜையும் இணைக்கும் பி1 பாலம் ஆகியவற்றின் மீது சமீபத்தில் தான் அமெரிக்கா மிக மோசமான தாக்குதலை நடத்தியிருந்தது. இவற்றை ஈரானின் முக்கிய உட்கட்டமைப்புகளாக அமெரிக்கா அடையாளம் கண்டிருந்த சூழலில், அதை வரிசையாக அமெரிக்கா தாக்கி அழித்து வருகிறது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுக்கவே பதற்றம் அதிகரித்தே வருகிறது.
-
நள்ளிரவில் மீண்டும் வெடித்த போர்.. இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதல்.. போர் நிறுத்தம் காலி? -
வேலையை காட்டும் டிரம்ப்! ஈரான் உடனான டீலிங்கில்.. திடீர் ட்விஸ்ட்! சீரியஸாகும் பஞ்சாயத்து! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications