அமெரிக்க இடைக்கால தேர்தல்.. விவேக் ராமசாமி டூ அமிஷ் ஷா வரை! இந்திய வம்சாவளியினர் வென்றார்களா?
வாஷிங்டன்: அமெரிக்க இடைக்கால தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் மீண்டும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி.க்கள் போட்டியிட்டுள்ளனர். ரோ கண்ணா, அமி பெரா, பிரமிளா ஜெயபால் மற்றும் சுஹாஸ் சுப்பிரமணியம் ஆகியோர் களமிறங்கியுள்ளனர். ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பியா தாண்டியா மற்றும் அமிஷ் ஷா ஆகியோர் முதல்முறையாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்படுவதற்காக போட்டியிட்டுள்ளனர். இவர்களின் வெற்றி விவரங்களை பார்க்கலாம்.
அமெரிக்க நாடாளுமன்றத்தை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு யார் கட்டுப்படுத்த போகிறார்கள் என்பதை தீர்மானிக்கும் முக்கியமான தேர்தல் நடைபெற்றுள்ளது. இடைக்கால தேர்தல் என்று அழைக்கப்படும் அந்த நாட்டு நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பிரதிநிதிகள் சபையின் 435 இடங்களுக்கும், செனட் சபையின் 35 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதுதவிர 36 மாகாணங்களுக்கான கவர்னர்களையும் தேர்ந்தெடுக்க வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

டிரம்ப் கட்சி பின்னடைவு
வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் டிரம்பின் கட்சி பின்னடவை சந்தித்துள்ளது. அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் மீண்டும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி.க்களான ரோ கண்ணா, அமி பெரா, பிரமிளா ஜெயபால் மற்றும் சுஹாஸ் சுப்பிரமணியம் ஆகியோர் களமிறங்கியுள்ளனர். ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பியா தாண்டியா மற்றும் அமிஷ் ஷா ஆகியோர் முதல்முறையாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்படுவதற்காக போட்டியிட்டுள்ளனர்.
விவேக் ராமசாமி: (கேரளா)
குடியரசுக் கட்சியை சேர்ந்த விவேக் ராமசாமி கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் ஓஹியோ மாகாண கவர்னர் தேர்தலில் போட்டியிட்டார். தற்போதைய நிலவரப்படி பின்னடைவை சந்தித்துள்ளார். டிரம்ப் ஆதரவுடன் களமிறங்கிய விவேக் ராமாசாமி, அவரை எதிர்த்து போட்டியிட்ட ஏமி ஆக்டனை விட பின் தங்கியுள்ளார்.
சுஹாஸ் சுப்ரமணியம: (கர்நாடகா)
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஆலோசகராக செயல்பட்டவர் சுஹாஸ் சுப்ரமணியம். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட சுப்ரமணியம் அமெரிக்க பிரநிதிகள் சபைக்கு மீண்டும் உறுப்பினராக தேர்வு ஆகியுள்ளார். வெர்ஜீனியா மாகாணத்தின் 10-வது நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளர் டேவ் பெக்வித் 36 சதவீத வாக்குகளைப் பெற்ற நிலையில், இவர் 61 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இவர் கர்நாடக மாநித்தை பூர்வீகமாக கொண்டவர்.
பிரமிளா ஜெயபால் (கேரளா)
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள நாடாளுமன்றத் தொகுதியில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பிரமிளா ஜெயபாலை எதிர்த்து குடியரசு கட்சி வேட்பாளர் நிரவ் ஷேத் போட்டியிடுகிறார். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பிரமிளா ஜெயபால், 2017 ஆம் ஆண்டு முதல் இந்தத் தொகுதியின் உறுப்பினராக இருந்து வருகிறார். அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையையும் பெற்றவர்.
அவரை எதிர்த்துப் போட்டியிடும் நிரவ் ஷேத், குஜராத்தில் பிறந்தவர். முன்னாள் அமெரிக்க கடற்படை வீரரான இவர், குடியரசு கட்சி சார்பில் களமிறங்கியுள்ளார். இந்திய வம்சாளியை சேர்ந்த இருவரும் மோதிக்கொள்ளும் நிலையில், இவர்களுக்கான முன்னிலை நிலவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
அமிஷ் ஷா: (குஜராத்)
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள 1-வது நாடாளுமன்றத் தொகுதியில் ஜனநாயக கட்சி வேட்பாளராகப் அமிஷ் ஷா போட்டியிடுகிறார். இவர் முன்னிலையில் உள்ளார். அமிஷ் ஷாவின் பெற்றோர் குஜராத்தில் இருந்து அரிசோனாவுக்கு புலம் பெயர்ந்தவர்கள் ஆவர்.
பியா தாண்டியா:
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள 22-வது நாடாளுமன்றத் தொகுதியில் முன்னாள் பியா தாண்டியா ஜனநாயக கட்சி சார்பில் களமிறங்கி வெற்றி பெற்றுள்ளார். 51.9 சதவீத வாக்குகளை பெற்றுள்ள நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளர் கேசி அஸ்கர் தோல்வி அடைந்துள்ளார். புளோரிடாவின் பாம் பீச் கவுண்டியில் பிறந்து வளர்ந்த பியா தாண்டியா, ஆசிரியர் ஆவார். இவரது பெற்றோர் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர்கள்.





Click it and Unblock the Notifications
