மொத்தமாக கதையை முடித்துவிட்ட அமெரிக்கர்கள்.. செனட் அவையில் டிரம்ப் கட்சி தோல்வி! இது தேவைதான்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க இடைக்கால தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. தற்போது செனட் அவையில் அதிபர் டொனால்ட் டிரம்பின் கட்சி தோல்வியடைந்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக அமெரிக்காவின் கேன்சாஸ் மாநில செனட் சபைக்கான தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஆடம் ஹாமில்டன் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுள்ளார்.

US donald trump election

கேன்சாஸ் மாநிலத்திலிருந்து கடந்த 94 ஆண்டுகளுக்கு பிறகு செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்படும் முதல் ஜனநாயக கட்சி உறுப்பினர் ஆடம் ஹாமில்டன் ஆவார். கடந்த 2024 அதிபர் தேர்தலில் டிரம்ப் (குடியரசுக் கட்சி) 16%க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மாநிலம் இது. சுருக்கமாக சொல்வதெனில்.. குடியரசு கட்சியின் கோட்டை இது. இந்த கோட்டையில்தான் ஜனநாயக கட்சி கொடி நாட்டியிருக்கிறது.

தேர்தலுக்கு முன்பு வரை செனட் சபையில் குடியரசுக்கட்சி 53 என்ற கணக்கில் பெரும்பான்மை வகித்தது. ஜனநாயக கட்சிக்கு 47 இடங்கள் இருந்தன. இன்னும் 4 இடங்கள் கிடைத்தால்.. ஜனநாயக கட்சி 51 என்றும், குடியரசுக் கட்சி 49 எனவும் சுருங்கிவிடும் என்கிற நிலைமை இருந்தது. தற்போது ஹாமில்டனின் வெற்றி.. ஜனநாயக கட்சிக்கு மிகப்பெரிய ஊக்கத்தை கொடுத்திருக்கிறது.

அமெரிக்க நாடாளுமன்றத்தை பொறுத்தவரை பிரதிநிதிகள் சபை, செனட் சபை என 2 சபைகள் உள்ளன. இதில் முக்கியமானது செனட் சபைதான். பிரதிநிதிகள் சபையில் சட்டங்கள் விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்படும். அந்த சட்டத்தை அமல்படுத்தலாமா? வேண்டாமா என்பது சென்ட் சபைதான் முடிவு செய்யும். இப்பேற்பட்ட சபையில் ஜனநாயக கட்சி பெரும்பான்மையை பெற்றிருப்பது.. டிரம்ப் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது.

செனட் சபையில் மொத்தம் 100 இடங்கள் இருக்கின்றன. இதில் பெரும்பான்மையை பெற 51 இடங்கள் தேவை. தற்போதைய தேர்தல் முடிவுகளின்படி 51 இடங்களில் ஜெயித்து ஜனநாயக கட்சி கெத்து காட்டியிருக்கிறது. குறிப்பாக கேன்சாஸ், டெக்சாரஸ், ஓஹியோ, அயோவா, வட கரோலினா மற்றும் தென் கரோலினா இந்த தொகுதிகள் எல்லாம் குடியரசு கட்சியின் கோட்டை என்று சொல்லப்பட்டு வந்த நிலையில்.. கோட்டையின் செங்கல்களை ஜனநாயக கட்சி உருவியிருக்கிறது.

தோல்விக்கான காரணங்கள்

அமெரிக்காவை பொறுத்தவரை.. அந்நாடுதான் ரொம்ப கெத்து, ராணுவ பலத்தில் அடிச்சிக்க ஆளே இல்லை! என்று வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு தோன்றும். ஆனால், உள்ளுக்குள் ஆயிரத்தி எட்டு ஓட்டைகள் இருக்கின்றன. ராணுவ பலத்தை வைத்து ஈரானுடன் போருக்கு போனதால்.. அமெரிக்காவில் பெட்ரோல், டீசல் விலை எகிறியது. இதனால் அந்நாட்டு மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. அத்தியாவசிய பொருட்களின் விலையையும் சேர்த்து உயர்த்தியிருக்கிறது.

மருத்துவம், வீட்டு வாடகை, போக்குவரத்து செலவுகளால் மக்கள் ரொம்பவும் சூடாகியிருக்கிறார்கள். தேர்தல் வரட்டும் வெச்சுக்கிறேன்.. என காத்திருந்தவர்கள், மொத்தமாக டிரம்புக்கு எதிராக ஜனநாயக கட்சிக்கு ஓட்டு போட்டுவிட்டார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+