டிரம்ப் தலையில் இறங்கிய இடி.. தேர்தலில் ஜெயிக்க வாய்ப்பே இல்லை! கணிப்புகளில் வெளியான ஷாக்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் நாளை இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தல்தான் அந்நாட்டு நாடாளுமன்றத்தை எந்த கட்சி கட்டுப்படுத்தும் என்பதை தீர்மானிக்கும். இப்படி இருக்கையில், இந்த தேர்தலில் டிரம்ப் தரப்புக்கு பெரும் பின்னடைவாக ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கும் என Harris Poll கருத்துக் கணிப்பில் தெரிய வந்திருக்கிறது.
இது குறித்து தி கார்டியன் செய்தி ஊடகம் விரிவாக செய்தியை வெளியிட்டிருக்கிறது. அதில், "இடைத்தேர்தலை தேர்தல் போக்குகளை தீர்மானிக்கும் முதன்மை பிரச்சனைகளாக.. வாழ்க்கை செலவு, பணவீக்கம் ஆகியவை இருக்கிறது.

வாக்காளர்களின் தனிப்பட்ட ரீதியிலான மிகப்பெரிய கவலையாக பணவீக்கம் இருக்கிறது. கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 36 சதவீத வாக்காளர்கள் தங்கள் வாக்களிப்பதை தீர்மானிக்கும் ஒரே மிக முக்கியமான காரணியாக, வாழ்க்கை செலவு உயர்வு இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். அதாவது மளிகை பொருட்கள், எரிபொருள் உள்ளிட்டவையின் விலைகள் தாறுமாறாக எகிறி இருக்கிறது. எனவேதான் காஸ்ட் ஆஃப் லிவிங் பிரச்சனையை வாக்காளர்கள் பெரிதாக பார்க்கின்றனர்.
அதேபோல, அரசு ஊழல் மிகப்பெரிய பிரச்சனை என்று 12 சதவீத வாக்காளர்கள் கருதுகின்றனர். வாக்களிக்க தூண்டும் தனிப்பட்ட முதன்மை காரணி எது? என்ற கேள்விக்கு.. ஊழல் தான் பிரச்சனை என்று 12 சதவீத பேர் குறிப்பிட்டு இருந்தாலும்.. ஒட்டுமொத்த அமெரிக்காவில், அரசு ஊழல் ஒரு பெரிய பிரச்சனையா? என்ற பொதுவான கேள்விக்கு.. 89 சதவீத மக்கள் 'ஆம்' என்று பதில் அளித்துள்ளனர்.
தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, அந்த அரசு மூலம் நியமிக்கப்பட்ட அதிகாரிகள்.. தங்களின் பதவிகளை பயன்படுத்தி, தங்களுக்கு நிதி உதவி வழங்கும் நிறுவனங்களையும், தங்களையும் வளப்படுத்திக் கொள்கிறார்கள் என்று 76 சதவீத மக்கள் நம்புகின்றனர். கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தை ஒப்பிடும்போது, தற்போதைய அமெரிக்க அரசியல்வாதிகளின் நிதி ஊழலே தங்களுக்கு அதிக அச்சத்தை ஏற்படுத்துவதாக வாக்காளர்கள் கூறியிருக்கின்றனர்.
இந்த கருத்துக்கணிப்புகளை வைத்து பார்க்கும் போது, ஈரான் பிரச்சனையைவிட.. ஊழல் பிரச்சனையைதான் மக்கள் பெரியதாக பார்க்கிறார்கள் என்று தெரிய வந்திருக்கிறது. அதாவது, ஈரானுடன் அமெரிக்கா போருக்கு போனதால்.. ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டு, உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தது உண்மைதான். ஆனால், இந்த போரை நடத்திய அமெரிக்காவிலும் பெட்ரோல், டீசல் விலை மிக அதிக அளவுக்கு எகிறிது என்பதுதான் கசப்பான உண்மை.
தேசபக்தி என்கிற குடையின் கீழ்.. அமெரிக்க மக்கள்,ஈரான் மீதான போரை ஒரு பக்கம் ஆதரிக்க முன் வந்தாலும்.. அதன் மூலம் ஏற்படும் இந்த விலைவாசி உயர்வை அவர்கள் கொஞ்சம் கூட விரும்பவில்லை. எனவே இந்த விலைவாசி உயர்வு பிரச்சினை தான் வாக்காளர்களின் மனநிலையை தீர்மானிக்கும் என்று பலரும் எதிர்பார்த்து இருந்தனர். அப்படி ஒரு நிலைமை வந்தால்.. அதையும் சமாளிக்க டிரம்ப் கைவசம் பிளான் வைத்திருந்தார். தேசபக்திதான் அந்த பிளான். தேசபக்திக்காக.. விலைவாசி உயர்வை கூட தாங்க மாட்டிங்களா.. என கேள்வி கேட்டால் மக்கள் யோசிப்பார்கள், நமக்கு ஆதரவாக பேசுவார்கள் என்று டிரம்ப் நினைத்திருந்தார்.
ஆனால் அதைவிட முக்கியமாக தற்போது ஊழல் பிரச்சனை வாக்காளர்களிடையே பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. எனவேதான் ஊழல் பிரச்சனை, ட்ரம்புக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறி இருப்பதாக அமெரிக்க அரசியல் நிபுணர்கள் கூறியிருக்கின்றனர்
அதேபோல, புதிய தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு தேர்தல் களத்தில் முக்கிய விவாதமாக மாறி இருக்கிறது. 56 சதவீத வாக்காளர்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது.. பொருளாதாரத்துக்கு தீர்வாக இருக்கப்போவதில்லை என்று கூறியிருக்கின்றனர். மாறாக, அது மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும் தெரிவித்து இருக்கின்றனர். செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் எதிர்காலத்தில் கோடிக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்புகளை இழக்க நேரிடும் என்று 58% வாக்காளர்கள் அச்சம் தெரிவித்திருக்கின்றனர்.




Click it and Unblock the Notifications
