வேணாம் நிறுத்திக்கங்க..ரஷ்யாவுக்கு உதவினால் கடும் விளைவுகள்.. சீனாவை மீண்டும் எச்சரிக்கும் ஜோ பைடன்
வாஷிங்டன் : உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு பொருளாதார ரீதியாகவோ, ஆயுத ரீதியாகவோ சீனா உதவினால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டுமென அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
நேட்டோ விவகாரத்தில் உக்ரைன் எல்லையில் படைகளைக் குவித்த ரஷ்யா திடீரென போரை தொடங்கியது. தரைவழி, வான்வழி, கடல்வழி என மும்முனை தாக்குதலை ரஷ்யா நடத்தி வருகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா 28வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், சுமார் 35 லட்சம் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம்
இந்நிலையில் ரஷ்யாவுக்கு எதிராக ஐநா பொதுசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தீர்மானத்துக்கு ஆதரவாக 140 நாடுகள் வாக்களித்தன. தீர்மானத்துக்கு எதிராக ரஷ்யா, பெலாரஸ், சிரியா, வட கொரியா, எரித்ரியா ஆகிய 5 நாடுகள் வாக்களித்தன. சீனா உள்ளிட்ட 38 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. அதே நேரத்தில் எதிர்பார்த்த அம்சங்கள் இந்த வரைவு தீர்மானத்தில் இல்லை எனக் கூறி இந்த வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.

அமெரிக்க எச்சரிக்கை
இதற்கிடையே உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு பொருளாதார ரீதியாகவோ, ஆயுத ரீதியாகவோ சீனா உதவினால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டும்மென அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார். கடந்த வாரம் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் தொலைபேசி அழைப்பில் அத்தகைய உதவி "விளைவுகளை" ஏற்படுத்தும் என்று அவர் தெளிவுபடுத்திய நிலையில் இதனை கூறியுள்ளார். வியாழன் அன்று பிரஸ்ஸல்ஸில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டின் போது செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் பைடன் இதனை கூறினார்.

‘ஜோ பைடன் புகார்
சீனாவின் பொருளாதார நலன்கள் மேற்கு நாடுகளிடம் உள்ளது ரஷ்யாவிடம் அல்ல என்பதை Xi புரிந்து கொண்டதாகவும், "நான் எந்த அச்சுறுத்தலும் செய்யவில்லை, ஆனால் ரஷ்யாவின் காட்டுமிராண்டித்தனமான நடத்தையின் விளைவாக ரஷ்யாவை விட்டு வெளியேறிய அமெரிக்க மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கையை நான் சுட்டிக்காட்டினேன்," என்று சீன அதிபருடனான தனது உரையாடலைப் பற்றி பிடன் கூறினார். சீனா ரஷ்யாவிற்கு உதவ முன்னோக்கி நகர்ந்தால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடனான சீனாவின் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கான தனது முயற்சிகளுக்கு ஆபத்து ஏற்படும் என்றார்.
Recommended Video

உலகளாவிய அழைப்பு
அமெரிக்காவும், அதன் கூட்டணி நாடுகளும் ரஷ்ய பொருளாதாரம் மற்றும் ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் அவரது ஆதரவாக உள்ள தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் மீது தடைகளை விதித்து வருகின்றன. அந்தத் தடைகளில் ஏதேனும் தொய்வு மற்றம் மோசடி ஏற்படுவதைக் கண்காணிக்க மேற்கத்திய அளவிலான அமைப்பை உருவாக்க அழைப்பு விடுத்த பைடன், ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து நேட்டோ அமைப்பு மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அளவிலான பொதுவான ஒரு அமைப்பை தாங்கள் கொண்டுள்ளோம் எனவும், இது போன்ற தடைகளை மீறுபவர்கள் யார் என்பதை கண்டறிய வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications