மிகப்பெரிய சம்பவம் நடக்க போகுது.. ஈரான் விவகாரம் டிரம்ப் பிளான் என்ன? 3 ஆப்ஷன்கள் கைவசம் இருக்குதாம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஈரானுடனான போர் விவகாரத்தில் ஒரு முடிவை எட்டும் திட்டத்தில் தான் இருப்பதாக கூறியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மிகப்பெரிய விஷயங்கள் நடக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதற்கு 7 நிபந்தனைகளை தனது மத்தியஸ்தர்கள் வாயிலாக ஈரான் பகிர்ந்த நிலையில், டொனால்டு டிரம்ப் இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதோடு, ஈரான் போர் விவகாரத்தில் தன்னிடம் மூன்று ஆப்ஷன்கள் இருப்பதாகவும் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்கா மீண்டும் தாக்குதலை தொடங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் கிடைத்து இருப்பதாக ஈரான் கூறி வரும் நிலையில், டிரம்பின் இந்த பேச்சு மத்திய கிழக்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Donald Trump plan regarding the Iran issue He reportedly has three options

மிகப்பெரிய விஷயங்கள் நடக்கப்போகின்றன

அமெரிக்கா- ஈரான் இடையேயான போர் 6 மாதங்களை கடந்தும் நீடித்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க அமெரிக்காவுக்கு 7 நிபந்தனைகளை ஈரான் விதித்து இருந்தது. வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் நிதியை விடுவிப்பது மற்றும் அமெரிக்க கடற்படை முற்றுகையை முடிவுக்கு கொண்டுவருவது உள்ளிட்டவைகள் இந்த நிபந்தனை லிஸ்ட்டில் இடம் பெற்றுள்ளன.

இது ஒருபக்கம் இருக்க ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் வருவதற்கு திட்டமிட்டுள்ளார். மற்றொரு பக்கம், ஈரான் மீது கடுமையான தாக்குதலை நடத்த அமெரிக்கா திட்டமிட்டு இருப்பதாக ஈரானே கூறியுள்ளது. இந்த நிலையில்தான், அமெரிக்காவில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரான் விவகாரத்தில் ஒரு முடிவை எட்டும் முடிவில் தான் இருப்பதாகவும், ஈரான் அரசு சரியாக நடந்துகொள்ளாவிட்டால், "மிகப்பெரிய விஷயங்கள் வெகு விரைவில் நடக்கப்போகின்றன.

மூன்று வாய்ப்பு உள்ளது

ஈரான் முழுவதையும் எப்போது தகர்ப்பது என்பது தான் என் கேள்வி. அவர்கள் சரியாக நடந்து கொள்வது நல்லது என்றும் கூறியுள்ளார். மேலும், ஈரான் விவகாரத்தில் மூன்று வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்ட டிரம்ப், ஈரானை முழுவதுமாக துடைத்தெறிவது, அவர்களின் பொருளாதாரத்தை சீர்குலைய வைப்பது அல்லது ஒப்பந்தம் ஏற்படுத்துவது ஆகியவையே ஆகும் என்றும் கூறினார்.

மேற்கு ஆசியாவில் பிற பிராந்தியங்களும் மோதலில் ஈடுபடு வருவது பற்றி பேசிய டிரம்ப், ஏமன் ஹவுதி கிளர்ச்சிக்குழுவுடன் அமெரிக்கா தொடர்பில் உள்ளது. அமெரிக்க படைகள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என்று ஹவுதி குழு ஒப்புக்கொண்டுள்ளது.
அமெரிக்காவுக்கு வரும் ஈரான் அதிபரை சந்திக்க வாய்ப்புள்ளதா என்று கேட்கிறீர்கள். ஈரான் அதிபரை பெசஸ்கியானை சந்திக்க நான் தயாராகவே உள்ளேன்" என்றார்.

எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும்

அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் வேதனைமிக்க பதிலடியை கொடுப்போம் என்று ஈரானும் எச்சரித்துள்ளது. ஈரான் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மோகேசன் ரேசாய் கூறுகையில், "போர் மீண்டும் தொடங்கினால், இந்தியப் பெருங்கடலில் இருந்து அமெரிக்கக் கப்பல்கள் வெளியேறாவிட்டால், அவை அந்த பகுதியில் எங்கு இருந்தாலும் தாக்கப்படும். அதற்கான திறன்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம்" என்று எச்சரித்துள்ளார். ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் மோதல் தீவிரம் அடைந்தால் எண்ணெய் விநியோகம் மீண்டும் கடுமையாக பாதிக்கப்படும் என்ற கவலை எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+