"டிரம்புடன் நட்பு.." யார் இந்த லிண்டா யக்கோரினா? ட்விட்டரின் புதிய சிஇஓவை பற்றிய முழு விபரம் இதோ!
வாஷிங்டன்: ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக லிண்டா யக்கோரினாவை நியமித்து எலான் மஸ்க் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். எலான் மஸ்கால் ட்விட்டர் சிஇஓவாக நியமிக்கப்பட்டிருக்கும் லிண்டா யக்கோரினா யார்? என்ற விவரத்தை இங்கு பார்க்கலாம்.
உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களில் ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க், அந்த நிறுவனத்தில் துவக்கம் முதலே பல அதிரடிகளை காட்டி வருகிறார். ட்விட்டரின் வருவாயை பெருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த எலான் மஸ்க், தற்போது அந்த நிறுவனத்தின் சிஇஓ பொறுப்பில் இருந்து விலகியிருக்கிறார்.

தற்போது ட்விட்டருக்கு புதிய சிஇஓவாக லிண்டா யாக்காரினோவை நியமனம் செய்துள்ளார். இது தொடர்பாக எலான் மஸ்க் வெளியிட்ட தனது ட்விட் பதிவில், "ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக லிண்டா யாக்காரினோவை வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ட்விட்டரின் பிசினெஸ் நடவடிக்கைகளில் லிண்டா கவனம் செலுத்துவார். நான் தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் புதிய தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துவேன" என்று பதிவிட்டு இருக்கிறார்.
யார் இந்த லிண்டா யாக்காரினோ: ட்விட்டரின் புதிய சி இ ஓவாக நியமிக்கப்பட்டு இருக்கும் யக்கோரினா பென் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்தார். லிபரல் ஆர்ட்ஸ் மற்றும் தொலை தொடர்பு துறையில் பட்டம் பயின்ற யக்கோரினா, டர்னர் பிராட்காஸ்டிங் சிஸ்டம் நிறுவனத்தில் முதலில் வேலைக்கு சேர்ந்தார்.
அந்த நிறுவனத்தில் விற்பனை முதல் மார்க்கெட்டிங் வரை பல்வேறு பொறுபுகளை வகித்து இருக்கிறார். 1999 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மிகப்பெரும் ஊடக குழுமங்களில் ஒன்றான என்.பி.சி யுனிவர்சல் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். தனது கடின உழைப்பால் பல உயர் பதவிகளை விரைவாக எட்டி பிடித்தார் யக்கோரினா.
யக்கோரினா கடந்த 2007 ஆம் ஆண்டு என்.பி.சி யுனிவர்சல் நிறுவனத்தின் பொழுதுபோக்கு மற்றும் விளம்பர விற்பனை பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டார். நிறுவனத்தின் அனைத்து விற்பனை மற்றும் பொழுதுபோக்கு புரோகிராம்களுக்கு இவரே முழு பொறுப்பாக இருந்தார். புதிய விளம்பர தயாரிப்பு மற்றும் தளங்களுக்குமான பொறுப்பும் இவர் வசமே ஒப்படைக்கப்பட்டது.
12 வருடங்களாக என்.பி.சி யுனிவர்சல் நிறுவனத்தின் உயர் பொறுப்பில் இருந்த லிண்டா யக்கோரினா தற்போது உலகின் முன்னணி சமூக வலைத்தளமான ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். 60-வயதான் லிண்டா யக்கோரினா டொனால்டு டிரம்பிற்கும் நன்கு அறிமுகம் ஆனவர்.
டிரம்ப் நியமித்த அதிபரின் கவுன்சில் ஆப் ஸ்போர்ட்ஸ் ஃபிட்னஸ் மற்றும் ஊட்டச்சத்து குழுவில் இடம் பெற்று இருந்த 9 பேரில் லிண்டா யக்கோரினாவும் ஒருவராகவும் இருந்தார். சமீப காலமாக குடியரசுக்கட்சியினருடன் எலான் மாஸ்க் நெருக்கம் காட்டி வரும் நிலையில் தான் யக்கோரினாவை நியமனம் செய்யும் முடிவுக்கு வந்து இருக்கிறார்.
NBCUniversal நிறுவனத்தின் மியாமி நிகழ்ச்சியில் எலான் மஸ்க் லிண்டா யக்கோரினாவை சந்தித்து இருந்தார். ட்விட்டரின் மார்க்கெட்டிங் எதிர்காலம் குறித்து இருவரும் விவாதித்து இருந்தனர். இந்த இண்டர்வியூவிற்கு பிறகு, ட்விட்டர் கருத்து சுதந்திரத்திற்கு அதிக முக்கியத்தும் அளிப்பதாகவும் யக்கோரினா பாரட்டியிருந்தார். யாக்காரினோ NBC Universal - லிருந்து வெளியேறுவது அந்நிறுவனத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications