அமெரிக்க இடைக்கால தேர்தல் ஏன் இவ்வளவு கவனம் பெறுகிறது? டிரம்பின் தலையெழுத்தை தீர்மானிக்கும் மக்கள்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடைபெறும் இடைக்காலத் தேர்தல், தற்போது உலகம் முழுவதும் கவனம் பெற்று இருக்கிறது. இடைக்கால தேர்தல் ஏன் நடத்தப்படுகிறது? ஏன் இது சர்வதேச அளவில் பெரும் கவனம் பெற்று இருக்கிறது? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, அந்நாட்டு நாடாளுமன்றத்தை 'காங்கிரஸ்' என்று அழைப்பார்கள் இதில் 2 அவைகள் இருக்கும். ஒன்று பிரதிநிதிகள் சபை, மற்றொன்று செனட் சபை.

US Donald trump election

ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கும் ஒரு முறை, காங்கிரஸுக்கு தேர்தல் நடக்கிறது. இது அமெரிக்க அதிபரின் 4 ஆண்டுகால ஆட்சிக்காலத்தின் பாதியில் நடப்பதால்தான்.. இடைக்கால தேர்தல் என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்க 'காங்கிரஸின்' மிக முக்கியமான பணி, நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் கூட்டாட்சி சட்டங்களை உருவாக்கி நிறைவேற்றுவதாகும்.

இந்த சட்டங்களை எந்த கட்சியினர் உருவாக்கப் போகிறார்கள்? அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் குடியரசு கட்சியினாரா? அல்லது எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினரா? என்பதை முடிவு செய்ய தான் இந்த இடைக்கால தேர்தல் நடத்தப்படுகிறது. மட்டுமல்லாது டிரம்ப் சட்டங்களை நிறைவேற்றுவது எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதையும் இந்த தேர்தல்தான் முடிவு செய்யும். ஆட்சிக்காலத்தின் பாதியில் தேர்தல் நடப்பதால், டிரம்பின் செயல்பாடுகளால் மக்கள் எவ்வளவு அதிருப்தியடைந்திருக்கிறார்கள்? என்பதையும் இந்த தேர்தல் தெரியப்படுத்தும்.

அமெரிக்க 'காங்கிரஸின்' கீழ் சபையான பிரதிநிதிகள் சபையில், மொத்தம் 435 இடங்கள் இருக்கின்றன. இவர்களின் பதவி காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும். பொதுவாக புதிய சட்ட முன் வரைவுகள் இந்த அவையிலேயே அறிமுகப்படுத்தப்பட்டு, விவாதிக்கப்படுகின்றன. அதேபோல மேலவையான செனட் சபையில் மொத்தம் 100 இடங்களில் 35 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதன் உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். பிரதிநிதிகள் சபையிலிருந்து வரும் சட்ட முன் வரைவுகளை அங்கீகரிப்பது அல்லது நிராகரிப்பது உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகள் இந்த அவை உறுப்பினர்களுக்கு உண்டு.

அந்நாட்டு அரசாங்கத்தின் 3 முக்கிய அங்கங்களில் 'காங்கிரஸும்' ஒன்றாகும். எனவே தான், இடைக்கால தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது. 'காங்கிரஸில்' தற்போது பிரதிநிதி பிரதிநிதிகள் சபை மற்றும் சபை ஆகிய இரண்டிலும் குடியரசு கட்சியினரே பெரும்பான்மையுடன் உள்ளனர். இருப்பினும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் இந்த பெரும்பான்மை ஜனநாயக கட்சிக்கு சாதகமாக மாறும் என்று தெரிய வந்திருக்கிறது.

பிரதிநிதிகள் சபையில், 218 இடங்களை குடியரசுக் கட்சியினர் கொண்டுள்ளனர். அதேபோல, செனட் சபையில்.. 53 இடங்களை கொண்டுள்ளனர். ஜனநாயக கட்சியினர் 51 இடங்களை வென்றால் மட்டுமே, மேலவை கைமாறும். இரு தரப்பும் 50 இடங்களை பெரும் பட்சத்தில்.. தற்போது குடியரசு கட்சியை சேர்ந்த துணை ஜனாதிபதியின் சமநிலை வாக்கை இது முறியடிக்கும்.

ஜனநாயக கட்சியினர், குறைந்தபட்சம் ஒரு அவையின் கட்டுப்பாட்டையாவது மீண்டும் கைப்பற்றினால்தான்.. அவர்கள் தங்கள் சொந்த சட்டங்களை கொண்டு வருவதற்கான அதிகாரத்தை பெறுவார்கள்.

மக்கள் மனநிலையும் ஜனநாயக கட்சிக்கு சாதகமாகத்தான் இருக்கின்றன. எரிபொருள், மளிகை பொருட்கள், வீட்டு வசதி மற்றும் சுகாதார பாதுகாப்பு ஆகியவற்றின் விலைகளால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதேபோல அமெரிக்க மத்திய வங்கி நிர்ணயித்த அளவைவிட, பணவீக்கம் அதிகமாகவே ஏற்பட்டிருக்கிறது. இதையெல்லாம் ஜனநாயக கட்சியினர் அரசின் மீதான குற்றச்சாட்டாக முன் வந்திருக்கிறது.

மறுபுறம்.. இடைக்கால தேர்தல்கள் நடந்த நேற்றைய தினமே, பல மாநிலங்களில் மாநில அளவிலான அரசியல் பிரதிநிதிகளையும் மக்கள் தேர்ந்தெடுக்க வாக்களித்துள்ளனர். கலிபோர்னியா, புளோரிடா, ஜார்ஜியா மற்றும் மிக்சிகன் ஆகிய மாநிலங்களின் நடைபெற்ற ஆளுநர் தேர்தல்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க மாநிலங்களின் ஆளுநர்கள், இந்தியாவின் மாநில முதலமைச்சர்களுக்கு இணையான அதிகாரங்களை கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+