'அமைதியை விரும்பும் பாகிஸ்தான் ஏன் தாவூத் இப்ராகிமுக்கு அடைக்கலம் கொடுக்கனும்'.. விளாசிய இந்தியா
வாஷிங்டன்: காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து இந்தியா ஜனநாயகத்தை அழித்துவிட்டது என்று கூறிய பாகிஸ்தான் பிரதமரின் பேச்சுக்கு, ஐநாவில் பதில் அளித்து பேசிய இந்திய பிரதிநிதி, ''அமைதியை விரும்புவதாக கூறும் பாகிஸ்தான் பின்னர் எதற்காக தாவூத் இப்ராகிமுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும்" என சாடியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் பாகிஸ்தான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
ஒருபக்கம் அமைதி பேச்சுவார்த்தையை விரும்புகிறோம் என்று சொல்லும் பாகிஸ்தான், மற்றொரு பக்கம் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்தியா மீது பழிபோடும் பாகிஸ்தான்
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகளை தயார் படுத்தி வருகிறது. அதேபோல், மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி மசூத் அசார் உள்பட சர்வதேச தீவிரவாதிகளுக்கும் அடைக்கலம் கொடுத்து பாகிஸ்தான் தொடர்ந்து அடாவடி செயலில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் ஐக்கிய நாடுகள் அவை போன்ற சர்வதேச மன்றங்களில் அமைதியை விரும்புவதாகவும் இந்தியாதான் அத்துமீறலில் ஈடுபடுவதாகவும் அபாண்டமாக பழிசுமத்துகிறது

பாகிஸ்தான் அமைதியை மட்டுமே விரும்புகிறது
இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் அவையின் ஆண்டு 77-வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியதாவது:-பாகிஸ்தான் தனது அனைத்து அண்டை நாடுகளிடமும் அமைதியை மட்டுமே விரும்புகிறது. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் நீடித்த நிலையான தீர்வு காணப்பட வேண்டும். எந்த பிரச்சினைகளுக்கும் போர் தீர்வு ஆகாது. பேச்சுவார்த்தை மூலமே பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அண்டை நாடான இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த நான் தயாராகவே இருக்கிறேன்'' என்றார். ஆனால் ''காஷ்மீர் பிரச்சினைக்கு நியாயமான நேர்மையான தீர்வு ஏற்படுத்தும் வரை இது சாத்தியப்படாது'' என்று தெரிவித்திருந்தார்.

முற்றிலும் தவறானது
இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஐ.நா.வில் உரையாற்றிய இந்தியப் பிரதிநிதி மிஜிடோ வினிடோ கூறியதாவது:- ''காஷ்மீர் பிரச்சினை தொடர்பான பாகிஸ்தான் பிரதமரின் பேச்சு முற்றிலும் தவறானது மற்றும் உண்மைக்குப் புறம்பானது. பாகிஸ்தான் தான் காஷ்மீரில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த உன்னதமான அவையில் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான போலிக் குற்றச்சாட்டுகளை முன்வைக்க முயல்வது துரதிர்ஷ்டவசமானது.

தாவூத் இபராகிமுக்கு ஏன் அடைக்கலம்
உள்நாட்டில் நிலவும் குழப்பங்களை திசைத்திருப்ப முடியாத காரணத்தினாலேயே பாகிஸ்தான் பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார் என்று தெரிகிறது. இதேபோல் அவர் அமைதியை விரும்பும் நாடு என்று கூறினால் எதற்காக அவர்கள் கடந்த 1993-ஆம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு துணை போன தாவூத் இப்ராஹிமுக்கு அடைக்கலம் கொடுத்தது. இதேபோல் பாகிஸ்தானில் இந்து, கிறிஸ்து மற்றும் சீக்கிய சமூகத்தை சேர்ந்த சிறுபான்மையின சிறுமிகளுக்கு கட்டாய திருமணங்கள் நடைபெறுகிறது.

நகைப்புக்குரியதாக உள்ளது
இது போல் பாகிஸ்தானில் சிறுபான்மையின மக்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர். இவ்வாறு சொந்த நாட்டிலேயே சிறுபான்மையின மக்களின் உரிமையை நசுக்குபவர்கள் சர்வதேச அரங்கில் இது குறித்து பேசுவது மிகவும் நகைப்புக்குரியதாக உள்ளது. இந்தியாவில் அமைதி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நிலையாக ஏற்பட வேண்டும் என்ற எங்களின் எண்ணம் உண்மையானது. அது அனைவரின் விருப்பமும் கூட. ஆனால் அது நிறைவேற வேண்டுமானால் எல்லை தாண்டிய பயங்கரவாத சம்பவங்கள் முடிவுக்கு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications