சொக்க வைக்கும் தங்க நகைகளை அணிந்து கொண்டு பொங்கல் வைங்க.. தகதகனு ஜொலிங்க!
தமிழர்களால் உலகெங்கும் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு பெருவிழா தான் தைப்பொங்கல். இந்த பொங்கல் பண்டிகையானது உழவர்கள் தெய்வமாக கருதப்படும் சூரியனுக்கும், விவசாயத்திற்கு உதவிய இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றியை தெரிவிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை அன்று மக்கள் புத்தாடையை அணிந்து, அழகிய ஆபரணங்களால் தங்களை அலங்கரிப்பதோடு, புதிய அரிசியால் பொங்கல் மற்றும் பாரம்பரிய இனிப்பு உணவை சமைத்து உறவினர்களுடன் பகிர்ந்து மகிழ்வர்.
நான்கு நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும் இந்த பண்டிகையை ரங்கோலி கோலங்கள், அலங்கரிக்கப்பட்ட பசுக்கள், பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள், ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டுக்கள் என பல சிறப்பாக்குகின்றன. இந்த ஆண்டு பொங்கல் ஜனவரி 14 ஆம் தேதி முதல் ஜனவரி 17 வரை தொடரும். இதில் மூன்று நாட்கள் மிகவும் குதூகலம் நிறைந்ததாக இருக்கும். மேலும் பெண்கள் தங்கத்தால் தங்களை அலங்கரிப்பது பொங்கல் பண்டிகையில் புனிதமாக கருதப்படுகிறது. எனவே பொங்கலன்று புத்தாடைகளுடன் உங்களின் தோற்றத்தை மேம்படுத்த தங்க ஆபரணங்களையும் அணியுங்கள்.
மேற்கூறிய காரணங்களைத் தவிர, தங்கம் ஒரு வாழ்நாள் முதலீடாகும். எனவே நீங்கள் தங்க நகைகளில் முதலீடு செய்ய அல்லது வாங்க நினைத்தால், உங்களுக்கான சில பரிந்துரைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தங்க கோயில் வடிவிலான நகைகள்
தங்க கோயில் வடிவிலான நகைகள் புனிதமான ஒன்றாக கருதப்படுகின்றன. இந்த மாதிரியான நகைகளை சாதாரண நாட்களில் அணிய முடியாமல் போகலாம். ஆனால் திருவிழாக்கள் அல்லது பண்டிகை காலங்களில் அழகான உடைகளுடன் அணிவதற்கு ஏற்றது. இது ஒரு நுட்பத்துடன் கூடிய, தங்க கழுத்தணி அல்லது தங்கத்தில் இருந்து வடிவமைக்கப்பட்ட எந்த வகை நகையாகவும் இருக்கட்டும். பொங்கலன்று முதலீடு செய்வதற்கு இந்த கோயில் நகைகள் சரியான தேர்வாக இருக்கும். உங்கள் அபிமான கல்யாண் ஜுவல்லர்ஸ்ல் பலவிதமான கோயில் நகைகளைக் கொண்டுள்ளன. அவை நிச்சயம் உங்களை தனித்து பிரகாசமாக காட்டும்.
சூரியனைப் போல தோற்றமளிக்கும் ஆபரணங்கள்
பொங்கல் பண்டிகை என்பது சூரியனை கௌரவிப்பதாகும். எனவே இந்நாளில் சூரிய பிரகாசத்துடன் கூடிய நகைகளை வாங்குவதை விட சிறந்தது வேறு எதுவும் இருக்காது. உதாரணமாக, சூரியனைப் போன்று தோற்றமளிக்கும் காதணியை வாங்கலாம்.
முத்துக்களுடன் கூடிய தங்க ஆபரணங்கள்
முத்துக்களால் பொறிக்கப்பட்ட தங்க ஆபரணங்களில் முதலீடு செய்தால், உங்களின் தோற்றம் எவ்வளவு கம்பீரமாகவும், நேர்த்தியாகவும் இருக்கும் என்பதை சற்று யோசித்துப் பாருங்கள். அது அடுக்குகளைக் கொண்ட முத்துக்களாக இருக்கட்டும் அல்லது ஒரு முத்து பதிக்கப்பட்டிருந்தாலும், அது உங்கள் அழகை நிச்சயம் பலமடங்கு மேம்படுத்திக் காட்டும். அதுவும் இதுப்போன்ற நகைகளை பட்டு சேலையுடன் அணிந்தால், இன்னும் அட்டகாசமாக இருக்கும்.
ரத்தினக் கற்கள் பதிப்பட்ட நகைகள்
பண்டிகை காலங்களில் பிரகாசமாக இருக்கவே பலரும் விரும்புவோம். அதிலும் நீங்கள் டிசைன் அதிகம் இல்லாத மற்றும் அதிக வேலைப்பாடுகள் இல்லாத ஒரு ஆடையை அணியும் போது, அந்த ஆடைக்கு ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட நகைகளை அணிந்தால், அது உங்கள் எளிய தோற்றத்தின் அழகை பன்மடங்கு மேம்படுத்திக் காட்டும்.
மலர் வடிவிலான தங்க நகைகள்
மலர் வடிவிலான நகைகள் அனைத்து தருணங்களிலும் அணிய ஏற்றவை. கல்யாண் ஜுவல்லர்ஸில் பல்வேறு மலர் வடிவிலான நகை கலெக்ஷன்களைக் காணலாம். நீங்கள் அதிக நகை அணிந்திருப்பது போல் வெளிக்காட்ட விரும்பாதவர்களாக இருந்தால், ஒரு சீரான தோற்றத்தை இந்த மலர் வடிவிலான நகைகள் தர உதவும். உதாரணமாக, உங்கள் கழுத்துப் பகுதி மற்றும் கமர்பாண்ட் கனமாக இருந்தால், காதுகளில் மலர் போன்ற காதணியை அணிவதன் மூலம், அதைக் குறைக்கலாம்.
சிம்பிளான டிசைனில் வடிவமைக்கப்பட்ட நவீன நகைகள்
தற்போது நிறைய பெண்கள் பொங்கலின் போது அதிக நகைகளை அணிய விரும்புவதில்லை. நீங்களும் அதில் ஒருவராக இருந்தால், அளவான நகையில் அம்சமாக தெரியலாம். சமீப காலமாக மார்டன் நகைகளை பெண்கள் அதிகம் விரும்புகின்றனர். ஏனெனில் இந்த மாதிரியான நகைகள் சிம்பிளான தோற்றத்தை அளிக்கின்றன. அதோடு மார்டன் நகைகள் பண்டிகை காலங்களைத் தவிர, சாதாரண நாளிலும் அணிய ஏற்றவை.
தங்கம் மற்றும் மரகதம் கலந்த நகைகள்
மரகதம் தங்கத்துடன் சேரும் போது, அது இன்னும் பிரகாசமான தோற்றத்தை அளிக்கிறது. அதோடு இது அனைத்து வகையான உடைகளுக்கும் பொருத்தமாக இருக்கும். உங்களுக்கு ஒரு தூய தங்க நகை தோற்றத்தில் இருந்து ஒரு இடைவெளி வேண்டுமானால், மரகதம் கொண்ட தங்க மோதிரம் அல்லது காதணிகளை அணியலாம்.
எனவே, இந்த 2021, பொங்கலுக்கு நீங்கள் எந்த மாதிரியான தங்க நகையில் முதலீடு செய்ய போகிறீர்கள்? உடனே தொடர்பு கொள்ள அணுகவும். https://www.kalyanjewellers.net/ கல்யாண் ஜுவல்லர்ஸியின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
RECOMMENDED STORIES