For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெரிய சிக்கலில் ஜார்கண்ட் அரசு! தாய் அல்லது தாரத்தை முதல்வராக்கும் சோரன்? ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

Google Oneindia Tamil News

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அரசுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

மொத்தம் 80 சட்டசபை உறுப்பினர்களைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்திற்குக் கடந்த 2019இல் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இருப்பினும், அதில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதையடுத்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தன. இதில் இரு கட்சியைச் சேர்ந்தவர்களும் அமைச்சர்களாக உள்ளனர்.

அரசு விரைவு போக்குவரத்து கழக ஓட்டுனர்கள் நியமனம்.. அவுட்சோர்ஸிங் வேண்டாம்: ராமதாஸ்அரசு விரைவு போக்குவரத்து கழக ஓட்டுனர்கள் நியமனம்.. அவுட்சோர்ஸிங் வேண்டாம்: ராமதாஸ்

ஜார்க்கண்ட்

ஜார்க்கண்ட்

இதுநாள் வரை கூட்டணிக்குள் எவ்வித குழப்பமும் இல்லாமலேயே சென்று கொண்டு இருக்கிறது. இந்தச் சூழலில் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைத் தொடர்ந்து இப்போது ஜார்கண்டிலும் அரசுக்குச் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கங்கள் அதிகமாக உள்ளன. இந்த சுரங்கங்களைக் கடந்த ஆண்டு ஜார்க்கண்ட் அரசு ஒதுக்கீடு செய்தது.

பெரிய சிக்கல்

பெரிய சிக்கல்

அதில் முதல்வராக உள்ள ஹேமந்த் சோரனுக்கும் சுரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தன. அரசு பொறுப்பில் இருக்கும் ஒருவருக்குச் சுரங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது என்று பாஜக தரப்பில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இதனை விசாரித்த தேர்தல் ஆணையம், ஹேமந்த் சோரன் சட்டசபை உறுப்பினர் பதவியைப் பறிக்க ஜார்க்கண்ட் ஆளுநருக்குப் பரிந்துரை செய்தார்.

பிளான் பி தயார்

பிளான் பி தயார்

இதனால் ஹேமந்த் சோரனின் முதல்வர் பதவி பறிபோகும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அடுத்தகட்ட திட்டம் குறித்து ஹேமந்த் சோரன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார். ஏற்கனவே தனது எம்எல்ஏக்களை அவர் ஒரே இடத்தில் பாதுகாப்பாகத் தங்க வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஒருவேளை ஹேமந்த் சோரன் முதல்வர் பதவிக்குச் சிக்கல் ஏற்பட்டால் அடுத்தகட்ட திட்டத்தையும் அக்கட்சி தயாராகவே வைத்துள்ளது.

தாய் அல்லது தாரம்

தாய் அல்லது தாரம்

என்ன நடந்தாலும் அதை எதிர்கொள்ளத் தயாராகவே உள்ளதாக ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார். இதனிடையே தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் உருவானால் அவரது மனைவி கல்பனா அல்லது தாய் ரூபியை முதல்வராக நியமிப்பது குறித்து ஆலோசனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக அவரது மனைவி கல்பனாவை முதல்வராக நியமிக்கவே வாய்ப்புகள் அதிகம் எனக் கூறப்படுகிறது.

அதிலும் சிக்கல்?

அதிலும் சிக்கல்?

இருப்பினும், அவரது மனைவி கல்பனா பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர் இல்லை என்பதால் இந்த முடிவு பயனற்றது என்றும் இதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் பாஜக ஏற்கனவே விமர்சித்து உள்ளது. சோரன் மனைவி கல்பனாவின் குடும்பம் ஒடிசாவின் மயூர்பஞ்சில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரைத் தவிர அமைச்சர்கள் ஜோபா மஞ்சி, சம்பாய் சோரன் ஆகியோர் பெயர்களும் பரிசீலனையில் உள்ளது.

பாஜக

பாஜக

அதேநேரம் மறுபுறம் மொத்தம் 81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்கண்ட் சட்டசபையில் பாஜகவுக்கு 26 எம்எல்ஏக்கள் உள்ளனர். காங்கிரஸ் மற்றும் சோரன் கட்சியில் அதிருப்தியில் உள்ளவர்களை தங்கள் பக்கம் இழுத்து ஆட்சியை அமைக்கும் முயற்சியிலும் பாஜக ஈடுபட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. வரும் நாட்களில் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Jharkhand politics who will become next chief minister: (ஜார்கண்ட் மாநிலத்தில் அடுத்து என்ன நடக்கும்) Jharkhand political crisis latest updates in tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X