Kudaimilagai gravy: குடைமிளகாயில் ஒரு சூப்பர் கிரேவி! இட்லி, தோசைக்கு ஏற்றது! எப்படி செய்யலாம்?
சென்னை: குடைமிளகாயை வைத்து ஒரு கிரேவி செய்யலாமா? குடை மிளகாயை பிரைடு ரைஸுக்குத்தான் போட்டிருப்பீர்கள். இப்படி ஒரு கிரேவி செய்து சப்பாத்தி, இட்லி, தோசை, பூரிக்குத் தொட்டுக் கொள்ளலாம். சாதத்திலும் பிசைந்து சாப்பிடலாம்!
குடைமிளகாய்.. மிளகாய் என்றாலே காரமாக இருக்கும் என அர்த்தம் இல்லை. இதில் உள்ள விதைகளை நீக்கிவிட்டால் காரம் இருக்காது. இதை அப்படியே பிரைடு ரைஸ், நூடுல்ஸுக்கு போடலாம், பிரிஞ்சி சாதம் செய்யலாம்.

குடைமிளகாயை வைத்து சாம்பார் கூட செய்யலாம். குடை மிளகாய் எடை குறைப்பு, கண் ஆரோக்கியம், எலும்பு ஆரோக்கியம், புற்றுநோய் தடுப்பு, மூட்டு வலி நிவாரணி, செரிமான ஆரோக்கியம், ரத்த சோகை உள்ளிட்டவைகளை மேம்படுத்துகிறது.
அப்படிப்பட்ட குடைமிளகாயை நாம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை வைத்து ஒரு கிரேவி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வெங்காயம் -2 (தட்டையாக நறுக்கியது)
குடைமிளகாய் - 2 (தட்டையாக வெங்காயம் சைஸில் கட் செய்ய வேண்டும்)
வதக்கி அரைக்க இரு வெங்காயங்கள்
தாளிக்க பொடியாக நறுக்கிய வெங்காயம்
மிளகாய் தூள்- ஒன்றரை ஸ்பூன்
கரம் மசாலா- அரை ஸ்பூன்
தக்காளி- 1 பெரியது
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
சீரகம்- ஒரு ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
ஒரு வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயத்தையும் குடை மிளகாயையும் சேர்த்து வதக்கவும்.
அது வதங்கி நிறம் மாறியதும் ஒரு பிளேட்டில் மாற்றிக் கொள்ளவும்.
பிறகு அதில் மீதியிருக்கும் எண்ணெயில் 2 வெங்காயத்தை ரஃப்பாக வெட்டி போடவும். அது வதங்கியதும் தக்காளியை போடவும், அதுவும் வதங்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி ஆறவிட்டு விழுதாக அரைக்கவும்.
பிறகு அதே வாணலியில் இன்னும் சிறிது எண்ணெய் ஊற்றி, அதில் சீரகத்தை பொரித்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்க வேண்டும்.
வெங்காயம் வதங்கியதும் அந்த எண்ணெய்யிலேயே கரம் மசாலாவையும் மிளகாய் தூளையும் உப்பையும் போட வேண்டும்.
பிறகு அரைத்த விழுதை சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்ததும் வதக்கி வைத்திருந்த குடைமிளகாய், வெங்காயத்தை அதில் போடவும்.
நன்கு கிளறிவிட்டு கிரேவிக்கு தேவையான தண்ணீரை விட வேண்டும். குறைந்த தீயில் மூடி வைத்துவிட வேண்டும். சிறிது நேரத்தில் அதுவும் எண்ணெய் பிரிந்து வரும். அப்போது அடுப்பை ஆஃப் செய்துவிட்டு கசூரி மேத்தி எனப்படும் காய்ந்த வெந்தய கீரையை போட வேண்டும். கசூரி மேத்தி இல்லாவிட்டால் புதினா, கொத்தமல்லி தூவி இறக்கினால் சூப்பரான கிரேவி ரெடி!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications