Beans Paruppu Usili: பீன்ஸ் வாங்கினால் பருப்பு உசிலி செய்து பாருங்கள்! crunchy-ஆக இருக்கும்!
Beans Paruppu Usili Recipe: பீன்ஸ் வாங்கினால் பருப்பு உசிலி செய்து பாருங்கள். அப்பறம் வேற என்ன செய்யலாம்னு யோசிக்கவே மாட்டீங்கள். எப்படி செய்யுறதுனு பார்க்கலாமா?
காலை, மாலை, இரவு நேரங்களில் என்ன சமைப்பது என்பது ஒரு பெரிய யோசனையாக இருக்கும். ஏதோ விண்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் அளவுக்கு யோசித்து கொண்டிருக்கிறோம்.

அதிலும் ஒரு சில காய்கறிகளை வாங்கினால், இதை எப்படி செய்யலாம், என்ன மாதிரி செய்தால் குழந்தைகளுக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் பிடிக்கும் என்பது பெரும் கவலையாகவே இருக்கும்.
அதிலும் இந்த இங்கிலீஷ் காய்கறிகளான கேரட், பீன்ஸ், பீட்ரூட்டை வைத்து என்ன செய்யலாம் என யோசிப்பது. பீட்ரூட், கேரட்டை வைத்து பொரியல், அல்வா செய்யலாம். கேரட்டை குருமா குழம்பு, பிரிஞ்சி சாதத்தில் போடலாம்.
ஆனால் இந்த பீன்ஸ்! இதை பொரியல் செய்யலாம். சாம்பாரும் வைக்கலாம். ஆனால் அந்த அளவுக்கு ருசி இருக்காது. குருமா குழம்பு, பிரிஞ்சி சாதத்தில் போடலாம்.
பொரியல் என வரும் போது சிலர் பீன்ஸை உப்பு போட்டு வேக வைத்து தண்ணீரை வடித்து வைத்துக் கொள்வர். அதை வெங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து சாப்பிடுவார்கள்.
அது போல் பீன்ஸ், மிளகாய் தூள் உப்பு போட்டு வேக வைத்து, வெங்காயம், பூண்டு இடித்து போட்டு தாளிப்பவர்களும் உண்டு.
ஆனால் பீன்ஸை பருப்பு உசிலி செய்தால் இனி உங்கள் வீட்டு ஃபேவரைட் டிஷ்ஷாகிவிடும். உசிலி செய்ய என்னென்ன தேவை என்பது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பீன்ஸ் - 250 கிராம்
கடலைப்பருப்பு- 25 கிராம்
காய்ந்த மிளகாய்- 3
உப்பு, எண்ணெய் -தேவையான அளவு
மஞ்சள் தூள்- ஒரு சிட்டிகை
தாளிக்க
கடுகு- 1 ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது
கடலைப்பருப்பு- 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு- 2 டீஸ்பூன்
செய்முறை
கடலைப்பருப்பையும், மிளகாய் வற்றலையும் அரை மணி நேரம் ஊறவிடவும்.
பீன்ஸை தண்ணீரில் அலசி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பின்னர் அதில் சிறிது தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
ஊற வைத்த பருப்பையும் மிளகாய் வற்றலையும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொரகொரப்பாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, தாளிக்க சொன்னவற்றை போட்டு பொரிக்கவும்.
பின்னர் அந்த எண்ணெய்யில் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும். ஒரு கட்டத்தில் அந்த மாவு எண்ணெயில் வெந்து தனித்தனியே உதிரும் அளவுக்கு பிரிந்து வரும். அப்போது பீன்ஸை தண்ணீரை வடிகட்டி சேர்த்து இரு நிமிடங்கள் கலக்கவும். இதை சாப்பாட்டிற்கு வைத்து சாப்பிட நன்றாக இருக்கும்.
பீன்ஸை தண்ணீருடன் மட்டும் போட வேண்டாம். உங்களுக்கு அந்த தண்ணீரை வீணாக்க விரும்பவில்லை என்றால் வடிகட்டி மிளகுத் தூள் போட்டு குடித்துவிடவும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications