For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிறந்தது ஆடி மாதம்

By Staff
Google Oneindia Tamil News

விஷு ஆண்டின் 4வது மாதமான ஆடி இன்று (செவ்வாய்க்கிழமை) பிறந்துள்ளது.

இது தட்ஷிணாயனப் புண்ணியகாலம் எனவும் அழைக்கப்படும். தமிழ் ஆண்டின் 12 மாதங்களை தட்சிணாயனப் புண்ணியகாலம், உத்திராயணப் புண்ணிய காலம் என இரண்டாகப்பிரித்துள்ளனர் நம் முன்னோர்கள்.

ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தட்சிணாயன புண்ணிய காலம் எனவும், மார்கழி முதல் ஆனி முடியஉத்திராணயன புண்ணிய காலம் எனவும் அழைக்கப்படும்.

ஆடி மாத பிறப்பன்று தான் சூரிய பகவான் கடக ராசிக்கு பிரவேசிப்பார். ஆனால், இம்முறை சூரிய பகவான் ஆனிமாதத்தின் கடைசி நாளான திங்கள்கிழமையன்று இரவு 7.55 மணிக்கே கடக ராசிக்குள் பிரவேசித்து விட்டார்.

தட்திணாயன புண்ணியகாலம்:

தட்சிணாயன புண்ணியகாலம் தேவர்களுக்கு இரவு நேரம். அதனால் இந்த காலத்தில் நமக்கு பகல் பொழுது குறைந்துகாணப்படும். காற்று, மழை, பனி உண்டாகும். சூரியனின் சூடும் குறைவாக இருக்கும்.

ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும் என்பது பழமொழி. அந்த அளவுக்கு காற்று அதிகமாக இருக்கும்.

ஆடி மாதத்தில் பித்ருக்களுக்கு பூஜை செய்தால் சூரியன் மற்றும் பித்ருக்களின் ஆசி பரிபூரணமாக கிடைக்கும்.

ஆடியின் போது செய்ய வேண்டிய பூஜைகள்:

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். தை மாதமும் அம்மனுக்கு உகந்த மாதம். ஆனாலும் ஆடி மாதத்திற்கு சிறப்புஅதிகம். அதனால் ஆடி மாதத்தில் அம்மனை வழிபட்டு வந்தால் நினைத்தது நிறைவேறும்.

குறிப்பாக ஆடி வெள்ளிக்கிழமைகளில் குத்துவிளக்கு பூஜை செய்து, சுமங்கலிகளுக்கு வெற்றிலை பாக்கு, தேங்காய்,ரவிக்கை துணிகள் வைத்துக் கொடுப்பது சிறந்தது.

குத்துவிளக்கு பூஜை:

குத்துவிளக்கை நன்கு தேய்த்து அதற்கு மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும். குத்துவிளக்கின் 5 முகங்களிலும் திரிபோட்டு விளக்கை ஏற்ற வேண்டும். அம்மனுக்கு என்று உள்ள சகஸ்ரநாம அர்ச்சனையை (1008) செய்ய வேண்டும்.

இதை வீட்டிலோ அல்லது கோவிலிலோ தனியாகவோ அல்லது குழுவாகவோ செய்யலாம். ஆனால்ஒவ்வொருவரும் தனித்தனி குத்து விளக்கு வைத்திருக்க வேண்டியது அவசியம்.

இது போல் குத்துவிளக்கு பூஜை செய்வதால் அம்மனின் அருள் கிடைக்கும். குத்துவிளக்கு பூஜை செய்யமுடியாதவர்கள் ஆடி வெள்ளிக்கிழமையின் போது அம்மனை பிரார்த்தித்தால் கூட போதூமானது. அம்மன் அருள்கட்டாயம் கிடைக்கும்.

இந்த ஆண்டு, ஆடி மாதம் 4 வெள்ளிக்கிழமைகள் வருகின்றன.

ஆடி அமாவாசை 20.07.2001 அன்று நிகழ்கிறது. அன்றைய தினம் கடலிலோ அல்லது நதியிலோ நீராடிபித்ருக்களுக்கு பூஜை செய்வது நல்லது

அமாவாசை தினத்தன்று சூரியன் தனது சக்தியால் சந்திரனுக்கு அமிர்தம் வழங்கும் நாள்தான் அமாவாசை எனபுராணங்கள் கூறுகின்றன. சந்திரன் தான் இழந்த கலைகளை பெறுவதற்காக சூரியனை பிரார்தித்து கொண்டதால்சூரியன் அவருக்கு அமிர்தம் வழங்கியதாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X